ஆன்மீகம்

.
* நல்லூர் கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழா
*விநாயகர் சதூர்த்தி விரதம்


நல்லூர் கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழா

நல்லூர் கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழா செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது.
அதிகாலை விசேட கொடித்தம்பப் பூசை கள் இடம்பெற்றமையை அடுத்து 6.30 மணிக்கு வசந்த மண்டபப் பூசை நடைபெற்றது. பின்னர் முரு கப் பெருமான்  வள்ளி தெய்வானை சமேதரராகத் தேருக்கு எழுந்தருளினார். அதைத் தொடர்ந்து பக்தர்களின் அரோஹரா கோஷம் ஒலிக்க காலை 7.15 மணிக்கு தேருலா ஆரம்பமானது.




பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டமையால் பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் தொண்டர்களும் சுறுசுறுப்பாக இயங்கியதையும் அவதானிக்கக்கூடியதாக இருந்தது.
 தொலைக்காட்சிகளின் நேரடி அஞ்சல் நிகழ்வுகளும் இடம்பெற்றன. சுகாதாரம் குடிதண்ணீர்  வசதிகள் மாநகரசபையால் கண்காணிக்கப்பட்டதுடன் மாநகரசபை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களின் கண்காணிப்புக்கு உணவகங்களும் உட்படுத்தப்பட்டன.


தூக்குக்காவடி காவடி மற்றும் அங்கப் பிரதிஷ்டை அடியளித்தல் ஆகிய நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவதில் பக்தர்கள்  அக்கறை கொண்டிருந்தனர். தேர் இருப்புக்கு வந்ததை அடுத்து பறவைக்காவடிகள் வந்தவண்ணம் இருந்தன








xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx


              விநாயகர் சதூர்த்தி விரதம்
                    
சைவ சமயத்தவர்கள் சிவபெருமானை முழுமுதற் கடவுளாக் கொள்கின்ற போதிலும், சிவனுடன் அவரது சக்தியான பரமேஸ்வரியையும், கணபதி, முருகன் முதலிய முகூர்த்தங்களையும் வழிபடுவதுண்டு.

இந்து மக்கள் அனுட்டிக்கின்ற விரதங்களில் விநாயக சதுர்த்தி விரதம் முக்கியமான ஒன்று. சிவஞான சித்தியாரில் அருணந்தி சிவாச்சாரியார் தெரிவித்துள்ள தெய்வங்கொண்டீர் அத்தெய்வமாகி ஆங்கே மாதொரு பாகனார்தாம் வருவார். என்ற இவ்வாசகம் அக்கருத்தை வலியுறுத்துவதுபோல் அமைந்துள்ளன. ஒவ்வோர் ஆண்டும் ஆவணி மாதச் சுக்கிலபட்ச சதுர்த்தித் திதியன்று விநாயக சதுர்த்தி அனுட்டிக்கப்படுகின்றது.

அன்றைய தினம் உலகெங்ளுமுள்ள இந்துக்கள் பயபக்தியோடு விநாயக வழிபாடியற்றி, உண்ணா நோன்பிருந்து, தான தர்மங்கள் செய்து கொண்டாடுகின்றனர்.. நாட்டுக்கு நாடு அந்தக் கொண்டாட்டங்கள் வேறுபட்ட முறைகளில் கொண்டாடப்படுவதைக் காணலாம்.

பிள்ளையாரின் அவதார தத்துவம்

பிள்ளையார், விக்னேசுவரர், கணேசர், கணபதி, கணாதிபர், ஐங்கரன், ஏரம்பன், இலம்போதரர், குகாக்கிரசர், கந்தபூர்வசர், மூத்தோன், ஒற்றைமருப்பினன், மூஷிகவாகனன், வேழமுகன், கயமுகன், ஓங்காரன், பிரணவன் போன்ற இன்னும் பல நாமங்கள் விநாயகருக்கு வழக்கிலுள்ளன.. இவற்றுள் விநாயகர் என்பது மேலான தலைவர்' என அர்த்தப்படும்.

கணபதி' என்பது கணங்களுக்கு அதிபதி என்று பொருள்படும். இவ்வாறே அவரது சகல நாமங்களுக்கும் வௌ;வேறு அர்த்தங்கள் அந்தந்தப் பெயர்களிலேயே பொதிந்துள்ளன. உண்மையில் விநாயகர் அவதரித்த திதியையே (அவர் அவதரித்த தினம்) விநாயக சதுர்த்தி எனக் கொள்ளப்படுவதாக புராணங்கள் கூறுகின்றன.

புராணம் சொல்லும் கதை:

ஒருமுறை சிவபிரான் வெளியே சென்றிருந்த சமயம் பார்வதிதேவி நீராடச் செல்வதற்கு எண்ணினார். அப்போது தனக்குக் காவல்காக்க ஒருவரும் இல்லையென்பதால், தனது நீராட்டுக்காக வைக்கப்பட்டிருந்த சந்தனக் குழம்பை எடுத்து ஒரு உருவம் சமைத்துத் தமது அனுக்கிரகத்தால் அதற்கு உயிரூட்டினார். அவரால் உயிரூட்டப்பட்டதால் அவ்வுருவம் அவரது பிள்ளை ஆகிவிட்டது. எவரையும் உள்ளே நுழைவதற்கு அனுமதிக்கக் கூடாதெனப் பிள்ளையாருக்கு அறிவுறுத்திவிட்டு பார்வதி தேவியார் நீராடச் சென்றுவிட்டார்.

அச்சமயத்தில் மீண்டுவந்த சிவபிரானைப் பிள்ளையார் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. அதனால் சினங்கொண்ட சிவபிரான் பிள்ளையாரின் சிரத்தை அரிந்துவிட்டு உள்ளே சென்றுவிடார்.

நீராடி முடிந்ததும் தேவியார் வெளியே வந்து, பிள்ளையார் சிரச்சேதமுற்றுக் கிடந்த கோலத்தைக் கண்டு சீற்றங்கொண்டார். தான் உருவாக்கிய பிள்ளையாரைச் சிவனே சிதைத்துவிட்டதை அறிந்த அவர் ஆவேசங் கொண்டவராக காளியாக உருக்கொண்டு வெளியேறி மூவுலகிலும் தமது கண்ணில் பட்ட சகலவற்றையும் அழிக்கத் தொடங்கினார்.

காளியின் ஆவேச நர்த்தனத்தைக் கண்டு அஞ்சிய தேவர்கள் சிவபிரானிடம் சென்று முறையிட்டனர். காளியைச் சாந்தப்படுத்துவதற்கு சிவன் எண்ணி, தனது கணங்களை அழைத்து வடதிசையாகச் சென்று முதலில் தென்படுகின்ற ஜீவராசியின் தலையைக் கொய்து வருமாறு பணித்தார். பணிப்பின் பிரகாரம் கணங்கள் வடதிசை நோக்கிச் சென்ற பொழுது அவர்களுக்கு ஒரு யானையே முதலில் தென்பட்டது. அவர்கள் அதன் தலையைக் கொய்து சென்று இறைவனிடம் கொடுக்கவும், அவர் அத்தலையை வெட்டுண்டு கிடந்த பார்வதியின் பிள்ளையாரின் முண்டத்தில் வைத்து உயிரூட்டிவிட்டார்.

இதைக் கண்டு சாந்தமடைந்த தேவியார் அகமகிழ்ந்து பிள்ளையாரைக் கட்டி அணைத்துக்கொண்டார். சிவபிரான் அந்தப் பிள்ளையாருக்கு கணேஷன்' என நாமம் சூட்டித் தமது கணங்களுக்கு கணாதிபதியாகவும் நியமித்தாரென நாரத புராணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவே பிள்ளையாரின் அவதார சரிதம். அவரை வழிபட்டுத் தொடங்கினால் செய்கருமம் இடையே எதுவித விக்கினங்களும் இன்றி நிறைவுபெறும் என்பது இந்துக்களின் நம்பிக்கை.

சைவ சமயத்தவர்கள் சிவபெருமானை முழுமுதற் கடவுளாக் கொள்கின்ற போதிலும், சிவனுடன் அவரது சக்தியான பரமேஸ்வரியையும், கணபதி, முருகன் முதலிய முகூர்த்தங்களையும் வழிபடுவதுண்டு. இந்தக் கொள்கையை பல திருவுருவங்களில் ஏக தெய்வத்தையே கண்டு வழிபடுவதாகக் கொள்ளவேண்டுமேயன்றி பலதெய்வ வணக்கத்தைச் சுட்டுவதாக மயக்கங்கொள்ளக்கூடாது. சிவஞான சித்தியாரில் அருணந்தி சிவாச்சாரியார் தெரிவித்துள்ள "யாதொரு தெய்வங் கொண்டீர் அத்தெய்வமாகி ஆங்கே மாதொரு பாகனார்தாம் வருவார்.

இந்து மக்கள் அனுட்டிக்கின்ற விரதங்களில் விநாயக சதுர்த்தி விரதம் முக்கியமான ஒன்று. ஒவ்வோர் ஆண்டும் ஆவணி மாதச் சுக்கிலபட்ச சதுர்த்தித் திதியன்று விநாயக சதுர்த்தி அனுட்டிக்கப்படுகின்றது. அன்றைய தினம் உலகெங்கணுமுள்ள இந்துக்கள் பயபக்தியோடு விநாயக வழிபாடியற்றி, உண்ணா நோன்பிருந்து, தான தர்மங்கள் செய்து கொண்டாடுகின்றனர். நாட்டுக்கு நாடு அந்தக் கொண்டாட்டங்கள் வேறுபட்ட முறைகளில் கொண்டாடப்படுவதைக் காணலாம்.

அனேகமான இந்துக்கள் விநாயக சதுர்த்தியை மாத்திரமே தவறாது அனுஷ்டிப்பர். அத்துடன் மார்கழி மாதத்தில் வருகின்ற சுக்கில பட்ச சதுர்த்தியையும் விஷேட நோன்பு தினமாகக் கைக்கொள்வர். மேலும் சிலர் காரத்திகை மாதம் கிருஷ்ண பட்சப் பிரதமைத் திதியில் ஆரம்பித்து இருபத்தொரு நாட்கள், அதாவது மார்கழி மாத பூர்வ பட்ச ஷஷ்டிவரை அதை விநாயக ஷஷ்டி என்பர்மகள் காப்புக்கட்டி, நோன்பிருந்து விநாயகரை வழிபடுவர். அந்த இருபத்தொரு நாட்களும் இரவில் மாத்திரமே ஒரு வேளை உணவு கொள்வர். அந்த நாட்களில் அனேகமான விநாயகர் ஆலயங்களில் விஷேட பூசை வழிபாடுகள் நடைபெறுவதுடன் பிள்ளையார் கதை ஜபெருங் கதை என்ற புராண படனமும் பராயணம் செய்யப்படும்.

ஆவணிச் சதுர்த்தி தினத்தன்று மாத்திரமே கொண்டாடப்படுவதுண்டு. ஆனால் இந்தியாவின் வடமாநிலங்களில், குறிப்பாக மகாராஷ்டிர மாநிலத்தில் விநாயக சதுர்த்தியானது பத்துத் தினங்களுக்கு வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றது. அவர்கள் கழிமண் கடதாசி, அட்டை, பிளாஸ்ரர் ஒவ் பரிஸ் முதலிய பொருட்களைக் கொண்டு சிறியதும், பெரியதும், பிரமாண்டமானதுமான பிள்ளையார் சிலைகளை வடிவமைத்து வர்ணங்கள் தீட்டி அலங்கரித்து பிரதேசங்களின் சந்திகளிலும், வீதியோரங்களிலும், பொது மைதானங்களிலும் மேடையமைத்து வைத்து பத்துத் தினங்கள் வழிபாடியற்றுவர். ஆண், பெண், சிறுவர், பெரியோர், மேல்சாதி கீழ்சாதி என்ற பேதம் எதுவுமின்றி இந்துக்கள் சகலரும் ஒன்றுகூடிப் பிரார்த்தனைகள் பஜனைகளில் கலந்துகொண்டு வழிபடுவர். வழிபாடு மிகவும் கோலாகலமாக பத்து நாட்களுக்கு நீடித்து, ஆனந்த சதுர்த்தசியான பத்தாம் நாள் ஆடல்.
நன்றி கலைக்கேசரி.கொம்

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

No comments: