விஸ்வ்வசேது இலக்க்கியப்ப்பாலம்

.
விஸ்வ்வசேது இலக்க்கியப்ப்பாலம்

(நினைவு நல்ல்லது வேண்டும் )
( தமிழ் எழுத்த்தாளார் மகாநாடு
அன்புடன் எழுத்தாளர்கள், இலக்கிய ஆர்வலர்களுக்கு,
சிறுகதை தொகுதிக்கு தங்கள் ஆக்கங்களை அனுப்புவதற்குரிய நாட்கள் முடிந்த நிலையில் ஒரு சில
எழுத்தாளர்கள் தமக்கு இன்னும் ஒரிரு வாரங்கள் கேட்டுக் கொண்டதிற்கிணங்க இறுதியாக வெளியாகவிருக்கும்
சிறுகதைகளின் பட்டியல்களை அடுத்த இருவாரங்களின் பின்பு வெளியிட இருக்கின்றேன்.


இந்த தொகுதி 25 அல்லது 30 கதைகளை தாங்கிய படைப்பாக வெளியாகும்.
இதில் மகிழ்ச்சியான விடயம் என்னவென்றால் அரசியலில் வௌ;வேறு தளங்களில் இயங்குபவர்களும்,
வௌ;வேறு கோட்பாடு உடையவர்களும், மூத்த - இளைய சந்ததியினரும்
இந்த தளத்தில் ஒன்றாக
சந்திக்கின்றார்கள். அனைவரின் படைப்புகளும் ஒரே தொகுப்பாக வருவதையிட்டு மிக மகிழ்ச்சியாக
இருக்கின்றது. ”ஏறினால் எருதுக்கும் இறங்கினால் முடவனுக்கும் கோபம”; என்றதை தாண்டி, என்னைப் பற்றி
எந்த முனபின் அறிமுகமும் இல்லாத பல எழுத்தாளர்கள் புலம் பெயர்ந்தவர்களின் தொகுப்பு என்ற இந்த
குடையின் கீழ் இணைந்து கொண்டது மிகவும் ஆரோக்கியமான விடயமாகும்.
இதில் புலம் பெயர்வு என்பது கருப்பொருளாக கொண்டமை எழுத்தாளருக்கு சிறிது சிரமத்தைக்
கொடுத்திருக்கலாம். ஆனால் அடுத்த ஆண்டளவில் மிக ஆறுதலாக செய்யப்படவுள்ள தொகுப்பில் இன்னமும்
அதிகமானோர் இணையவும் தமது முழச்சுதந்திரத்துடன் எழுதக் கூடியவாறு ஒரு திட்டத்துடன் இருக்கின்றேன்.
இலங்கையில் நடைபெற இருக்கும் எழுத்தாளர் மகாநாடு பற்றிய சர்ச்சை எழுவதற்கு முதல் இதனை
திட்டமிட்டபடியால் நானும் இதனை விரைவில் முடிக்க வேண்டிய அவசரத்தில் எழுத்தாளருக்கு குறைந்தளவு
கால அவகாசம் கொடுக்க வேண்டி வந்தது. அவ்வாறில்லாவிட்டால ; இன்னமும் சில எழுத்தாளரை இதில்
இணைக்க முயற்சித்து இருக்கலாம். ஆரம்பம் என்பது எங்கோ ஒரு இடத்தில் ஆரம்பிக்க வேண்டியது தான்
என்பதால் இதுவே எமக்கு பிள்ளையார் சுழியாகிறது எனக் கொளN; வாம்.
இந்த எழுத்தாளர் மகாநாடு பற்றிய சர்ச்சை எழுந்திராவிட்டால் இன்னமும் சில கதைகள் வந்து
சேர்ந்திருக்கலாம். ஆனால் எந்த எழுத்தாளரும் இதற்காகத் தான் நான் கதை அனுப்பவில்லை என தங்கள்
கருத்தை தெரிவிக்கவில்லை. மௌனம் - சம்ம்மதத்த்திற்கு;கு அறிகுறி என்று பள்ளியில் கற்றதற்கு பின்பு. . .
அதற்கு வேறும் அர்த்தங்கள் உள்ளன என்பதை போராட்டக் காலத்திலும், அதன் பின்பு அண்மையில்
இலங்கைக்கு சென்றிருந்த பொழுதும். . . இப்பொழுதும் அறியக் கூடியதாய் இருக்கின்றது.
இலங்கையில் நடைபெற இருக்கும் எழுத்தாளர் மகாநாட்டை பகிஸக் ரிக்க வேண்டும் என்ற தொனி பலமாக
வெளிநாடுகளிலும், குறிப்பாக இந்திய இணையத் தளங்களிலும் தனிநபர்கள் அனுப்பும் இமெயில்களிலும்
பார்க்க கூடியதாக இருக்கின்றது. நாட்கள் நெருங்க நெருங்க இனன் மும் அதிகமாகும் என்பது உறுதி.
”நாம் உண்ணும் ஒவ்வொரு அரிசியிலும் சரி. . . நாம் வாழும் நாடுகளில் கடலில் கொண்டு போய் தொன்
கணக்காக கொட்டப்படும் மாவிலும் சரி அரசியல் கலந்திருக்கிறது”. அவ்வகையில் செம்மொழி மாகாநாடு
நடைபெறுவதற்கும் சரி, தற்பொழுது இலங்கையில் நடைபெறும் எழுத்தாளர் மகாநாட்டிற்கும் சரி குறைந்த
பட்சம் அதை நடத்துவதற்கு அனுமதி பெறும் அளவில் ஆவது அரசியல் இருக்கும். அதை தவிர்க்க முடியாது.
அதை தாண்டி எவ்வளவு தூரம் அரசியல் பாய்ந்திருக்கிறது அல்லது அரசியல் பிண்ணனியுடன்
நடாத்தப்படுகிறது என்பதை அந்த மகாநாட்டுக்குப் பின்னால் தான் அறிய முடியும் - செம்மொழி மகாநாடு பற்றி
அதன் பின்பு வந்து கொண்டிருக்கும் விமர்சனங்கள் போல.
ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட தொழிற்புரட்சியை தொடர்நது; கிறிஸ்துவம் என்பது பலமிழந்தது அல்லது ஓரம்
கட்டப்பட்டது. ஆனால் கிறிஸ்துவம் இருந்த இடத்தை எதுவுமே நிரப்பாததால் மனோதத்துவ ஆலோசர்களும்,
மனோதத்துவ வைத்தியர்களும் வைத்தியசாலைகளும் அதிகமானது கண்கூடு. வெற்றிடம் நிரப்பப்பட வேண்டும்
என்பது விதி. அது எதனால் நிரப்பப்படுகின்றது என்பதனை பொறுத்துதான் ஒரு சமூகத்தின் எழுச்சியும்
வீழ்ச்சியும் தங்கி இருக்கிறது.
எதையுமே இலகுவாக புறக்கணிக்கலாம். ஆனால் எதை நாங்கள் முன் வைக்கின்றோம் என்ற கேள்வி இந்த
இணையத்தளங்களளையும் மின்னஞ்சல்களையும் பார்க்கும் பொழுது என்னுள் எழாமல் இல்லை. எதிர்ப்பு,
புறக்கணிப்பு, பகிஸ்கரிப்பு என்பதோடு மட்டுமில்லாமல் அடுத்தது எனன் செய்ய வேண்டும் என்பதனையும்
எழுதினால் அது மிக ஆரோக்கியமானதாகவும் பலனுடையதாகவும் இருக்கும் என்பது என்னுடைய தாழ்மையான
அபிப்பிராயம்.

No comments: