பாரதிசெய்த வீணையை மீட்டிய என் விரல்கள்!



-சங்கர சுப்பிரமணியன்.




நல்லதோர் வீணைசெய்து
அதிலெழும் ஒலிதனை பிழையெனில் பொருளுள்ளதோ

நல்லதோர் வீணைசெய்து
அதிலெழும் ஒலிதனை பிழையெனில் பொருளுள்ளதோ

சொல்லடி சிவசக்தி - எனை
பகுத்திடும் அறிவொடு படைத்துவிட்டாய்

சொல்லடி சிவசக்தி - எனை
பகுத்திடும் அறிவொடு படைத்துவிட்டாய்

நல்லருள் தாராயோ
நல்லருள் தாராயோ இந்த
மானிடர் பகுத்திங்கு வாழ்வதற்கே

நல்லருள் தாராயோ இந்த
மானிடர் பகுத்திங்கு வாழ்வதற்கே

சொல்லடி சிவசக்தி - இதைப்
புரிந்துமே வாழ்ந்திட புரிகுவையோ

சொல்லடி சிவசக்தி - இதைப்
புரிந்துமே வாழ்ந்திட புரிகுவையோ

நல்லதோர் வீணைசெய்து
அதிலெழும் ஒலிதனை பிழையெனில் பொருளுள்ளதோ

இயற்கையை வணங்கிடல்போல் - வாழ்ந்து
மறைந்தோரை போற்றிட மனம் கேட்டேன்

இயற்கையை வணங்குதல்போல் - வாழ்ந்து
மறைந்தோரை போற்றிட மனம் கேட்டேன்

மறவறு மனங்கேட்டேன் - நடப்பது
வினைப்பயனென அறியும் குணம்கேட்டேன்

மறவறு மனங்கேட்டேன் - நடப்பது
வினைப்பயனென அறியும் குணம்கேட்டேன்

உச்சியில் இடிவீழ்ந்திடினும் - சிவ
சக்தியை நினைந்திடும் குணங்கேட்டேன்

உச்சியில் இடிவீழ்ந்திடினும் - சிவ
சக்தியை நினைந்திடும் குணங்கேட்டேன்

நிலையிலா வாழ்வறிந்தேன் - இதை
சொல்வதில் ஏதேனும் பிழையுள்ளதோ

நிலையிலா வாழ்வறிந்தேன் - இதை
சொல்வதில் ஏதேனும் பிழையுள்ளதோ

நல்லதோர் வீணைசெய்து
அதிலெழும் ஒலிதனை பிழையெனில் பொருளுள்ளதோ

நல்லதோர் வீணைசெய்து
அதிலெழும் ஒலிதனை பிழையெனில் பொருளுள்ளதோ


No comments: