.
சிவஞானச்சுடர்
பல்மருத்துவகலாநிதி
பாரதி
இளமுருகனார்
(வாழ்நாள் சாதனையாளர்) 
வண்ணமயில் ஊர்தியிலே வடிவழகன்
முருகனவன்
கண்ணனைய வள்ளியொடு
கரங்கோத்துத் திருப்பொலியப்
பண்சுமந்த திருமுறையைப்
பன்னிரெண்டு செவிகளினால்
விண்ணிருந்து செவிமடுக்கும்
வியனுருவைத் தொழுவோமே!
சண்முககவ சந்தன்னைச் சந்தமிகு
திருப்புகழை  
எண்ணமெலாம் சரவணனை
எண்ணிமெய்யு ருகிநிற்ப  
மண்ணில்நல் லவண்ணமவன்
வாழவைப்பான் எனநம்பிக்  
கண்ணுதலான் அருள்வடிவின்
காதுமாந்த இசைத்திடுவீர்!
செம்மைவாழ்வு வாழாது
தெரிந்திருந்தும் பலவழியில்
தீங்கியற்றி வருவோரும் செய்பாவம்
தீர்த்திடவா
அம்மையப் பரோடவரின் அருட்சத்;தி வெளிப்பாட்டை  
ஆசரித்துப் பத்தரைப்போல்
அனுசரிப்பர் விரதங்கள்?.  
இருபதொடு ஏழுவகை விரதங்கள்
இருந்தாலும்   
இயற்றுமொரு விரதத்தால்
ஏற்றபலன் கிடைத்திடுமோ?
உருகிநின்று உடல்வருத்தி
ஒருவிரதம் இருப்பவரின்;   
உள்ளத்தில் அழுக்கிருந்தால்
ஒருபலனும் கிடைக்காதே!
உள்ளத்தில் தூய்மையும்
உயிர்களுக்கு எவ்விதத்தும்
எள்ளளவில்;  தீங்கிழையா ஏற்றமிகு மனப்பாங்கும் 
கள்ளங்கப டத்தோடு  காமவெகுளி என்றுமற்ற 
வெள்ளைமனம் உள்ளோர்க்கே விரதங்கள் பயனளிக்கும்!
நெஞ்சந்தான் இன்சொற்கள்
நித்தமும் உ குக்கவேண்டும்!
வஞ்சத்தனம் ஆகாது வாய்மையும்
நிலைக்கவேண்டும்!
கொஞ்சமேனும் கருணைகுறை
யாதிருப்பின் பிஞ்ஞகன்றன்         
செஞ்சரணம் அருளருளும்! செய்விரதம் பலனளிக்கும்! 
ஒருநாளோ ஏழுநாளோ உணவின்றி
உடல்வருத்திப்
பெருமானை வேண்டுவது
பெருவிரதம் ஆகாதே!
திருவான செம்பொருளைச்
சீர்பெருக்கும் பரம்பொருளை
ஒருகணமும்; மறவாத உளப்பாடே நல்விரதம்!
கைபுனைந்து இயற்றிடாதோர்
கவினுறுசீர்  வனப்புமிகு 
மைபுனைந்த மால்மருகன்
மாதவத்து முருகன்றனை
வைபுனைந்த திருக்கைவேல்
ஒளிகாலும் வேலவனை
மெய்புனைந்து கணம்நீங்கா  மெய்ப்பாடே நல்விரதம்!
விரும்பியதை நிறைவேற்ற
விட்டகனா நனவாக்க
வரும்பசியை நினையாது
திருந்தியதோர்; மனதுடனே
பொருந்துமொரு விரததமதைத்  தெரிந்துபலர் இயற்றியருள்
பெருக்கிடுவர்! பேறுபல பெற்றுயர்ந்து வாழ்ந்திடுவர்!
பொங்கரவன் வாமபாகம்
பொற்புமிகு  சிவசத்தி   
அங்கையர்க் கண்ணியொடு
அருள்வடிவாய்த் தோற்றிட்ட
ஐங்கரனோ(டு) அறுமுகனை  வழிபாடு செய்வதெலாம்
ஆதிசிவன் தனைவணங்குஞ்
செயலன்றோ அறிந்திடுவீர்!
கணமேனும் மறவாது சிந்திக்கும்
செயல்தனையே
தெள்ளத்தெளி வானபெரும்
விரதமாயேற் றருள்புரிவர்!
தெரிந்துசெயும்  விரதங்களில்; அதிசிறந்த திதுவன்றோ?
அன்பொன்றே  சிவமென்று அறிந்தொழுகு வோரெல்லாம்
அன்புருவே ஆனசிவம் ஆகிவிடு
வாரன்றோ? 
அன்பேசிவ  மானவர்க்கு அகிலமுமே சொர்க்கமன்றோ?
அன்பாற்சிவ மானபின்னர்;; அவர்களுக்கேன் விரதங்கள்?
--------------------------------------------------------------------------------------------------
சண்முக கவசம் – கந்தசட்டிக் கவசம்
ஒலிப்பதைவிடச் சண்முக கனவசத்தை ஒலிப்பதே சாலச் சிறந்தது எனச் சிவஞானநெறிச்
செல்வர்கள் திருவாய்மொழிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  
கண்ணுதலான் – சிவபெருமான்     ஆசரித்து - அநுட்டித்து      
இருபதொடு ஏழுவகை விரதங்கள் – புராணங்களிலே 27 வகையான விரதங்கள்
குறிப்பிடப்பெற்றுள்ளன              வெகுளி – சினம்
பிஞ்ஞகன்றன் – சிவன்       செஞ்சரணம் – திருப்பொற் பாதம்    செம்பொருள் - கடவுள்  
வை - கூர்மை     காலும் – வெளிப்படுத்தும்    
மை – கருமை      மால்மருகன் – விட்டுணுவின் மருமகன்
(முருகன்)   கவினுறு – அழகுமிக்க பொங்கரவன் – சிவன்  வாமபாகம் - இடப்பக்கம்  பொற்புமிகு – பொலிவு மிகுந்த     பேறு – பயன் ஐங்கரன் – விநாயகன்   காலகண்டன் – சிவன்  அன்புரு – அன்பே உருவமாகி
தங்கள் தங்கள்
விருப்பத்திறங்கு வணங்கிவரும் விநாயகர் முருகப்பெருமான் வைரவர் வீரபத்திரர் ஆகிய
கடவுளர் எல்லாம் முழுமுதற் கடவுளான சிவபெருமானின் அருட்சத்தி வடிவங்களே. அதேபோல
சரசுவதி இலக்குமி துர்க்கை அம்மன் காளி போன்ற பெண்கடவுளர்கள் எல்லாம் சிவசத்தியின்
அருட்டிரு வடிவங;களாகும்.
| 
   மனம் பொறிவழி போகாது நிற்றற் பொருட்டு  உணவை
  விடுத்தேனுஞ் சுருக்கியேனும் மனம்  வாக்கு காயம் என்னும்
  மூன்றினாலும் கடவுளை மெய்யன்போடு விதிப்படி வழிபடுதல் விரதமாகும் என்பது ஐந்தாம்
  சைவசமய குரவர் என்ற
  பெருமைக்குரிய சிவத்திரு ஆறுமுகநாவலர் அவர்களாலே வரையறை  செய்யப்பெற்றது.  | 
  
   ”  | 
 



No comments:
Post a Comment