பிரசாதத்துக்கு நன்றி! - -சங்கர சுப்பிரமணியன்.

 .

தமிழ் இணைத்தது என்று
தலை நிமிர்ந்து இருந்தேன்
அழையா விருந்தாளியாய்
எனை ஆக்கியதேன் தமிழே

தலை மறைவாய் நானில்லை
நிமிர்ந்த பார்வையுடன் நான்
நேரில் நின்றிருந்த போதும்
காணாமல் இருந்ததேன் தமிழே

அருகில் வந்து கை தொழுதேன்
சருகண்டி என்பது திருப்பதியில்
அங்கே அவர் சிலையாக நிற்பார்
முன் நிற்பவர் அப்படி சொல்வார்

இங்கு தமிழே நீ அமைதியானாய்
விரும்பி உன்னை வந்து பார்த்தும்
பராமுகமாய் நீ  ஏன் இருந்தாயோ
குற்றம் தமிழே உன்னிடம் இல்லை

எதிர்பார்த்து நின்றது என் குற்றமே
கோவிலுக்கு வந்தவன் கும்பிடவே
சாமி வந்து பேசுமென்றால் எப்படி
பிரசாதம் தந்ததற்கு மிக்க நன்றி!

-சங்கர சுப்பிரமணியன்.

No comments: