உலக சைவப் பேரவை அவுஸ்திரேலியா வாரம் தோறும் சிவத்தோடு நாம் என்னும் நிகழ்வினையும், மாதந்தோறும் திருமுறை முற்றோதல், கந்தபுராண பாராயணம், சைவ சித்தாந்த வகுப்புகளையும் நடாத்தி வருவது நீங்கள் அறிந்ததே. திருமுறை முற்றோதலுக்கும், கந்தபுராண படனத்துக்கும் சமய ஆர்வலர்கள் பொருள் சொல்வது நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது. இவைகள் அனைத்தும் செய்யுள் வடிவில் உள்ளதால், மொழியிலக்கணத்தையும், செய்யுள்களின் அமைப்புகளை புரிந்து கொள்ள யாப்பு இலக்கணத்தையும் பயில நம்மில் பலர் ஆர்வமாகவுள்ளார்கள்.
இதனை கருத்திற்கொண்டு கந்தபுராணத்திற்கு பல முறை பொருள் சொல்லிவரும் சைவப்புலவர் முரு. சேமகரன் (கவிஞர் கல்லோடைக் கரன்) அவர்களிடம் மொழியிலக்கணத்தையும், அதனைத் தொடர்ந்து யாப்பு இலக்கணத்தையும் கற்கவுள்ளோம்.
ஆரம்பத்தில் எழுத்திலக்கணத்திற்கு அறிமுகமும் (எழுத்து, சொல், பொருள்) தொடர்ந்து எழுத்ததிகாரமும் (நூல்மரபு, மொழிமரபு), பிறப்பிலக்கணம், புணர்ச்சியிலக்கணம் போன்றவையும் மேலும் யாப்பிலக்கண வகுப்புக்களும் நடைபெறவுள்ளன.
20 முதல் 25 ஒரு மணி நேர வகுப்புக்கள் ZOOM வழியாக நடாத்த உத்தேசித்துள்ளோம்.
முழு வகுப்புக்களுக்கும் $20.00 கட்டணம். வகுப்புக்கள் 22/10/2025 முதல் ஒவ்வொரு புதன்கிழமையும் மாலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை நடைபெறும்.
பங்குபற்ற விரும்பியவர்கள் பின்வருபவர்களைத் தொடர்புகொள்ளுமாறு அன்புடன் வேண்டிக்கொள்கின்றோம். ZOOM விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
திரு. விஜய் சிங் Tel: 0478 313 200 திரு. சி. வனதேவா Tel: 0480 123 656
திரு. க. சபாநாதன் Tel: 0408 432 680
அன்புடன்,
க சபாநாதன்,
செயலாளர் WSCA
No comments:
Post a Comment