இலங்கையின் முதலாவது பணக்காரர் என்ற பெருமையை பெற்றவர் அவர். பெரும் தொழிலதிபராக திகழ்ந்த அவருக்கு ஜப்பான் அரசாங்கமே கடன் கொடுக்க முன் வந்தது. அப்பேற்பட்ட திறமையும் , ஞானமும் கொண்ட அவருக்கு எம் ஜி ஆர் நடிப்பில் ஒரு படம் தயாரிக்கும் ஆவல் ஏனோ ஏற்பட்டு விட்டது. தமிழகத்தில் சினிமா விநியோகத்துறையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தன் சகோதரர் மகன் தேவராஜ் குணசேகரனிடம் படத்தை தயாரிக்கும் பொறுப்பை ஒப்படைத்தார். ஹிந்தியில் ராஜேஷ் கண்ணா இரட்டை வேடத்தில் நடித்து ஹிட்டான சச்சா ஜூட்டா படத்தின் கதையை தமிழில் படமாக்க எம் ஜி ஆர் ஏற்கனவே வாங்கி வைத்திருந்தார். அதையே படமாக்குவதென முடிவானது. எம் ஜி ஆரின் இமேஜுக்கு ஏற்றாற் போல் படத்துக்கு நினைத்ததை முடிப்பவன் என்று பெயரிடப் பட்டது. ஆனால் படத்தின் தயாரிப்பாளருக்கு நினைத்தை முடிப்பவன் என்ற பேர் நினைத்த விதத்தில் கிடைத்து விடவில்லை . 1971ம் ஆண்டு படத்துக்கு பூஜை போடப்பட்டு ஆறே மாதத்துக்குள் தயாராகி விடும் என்று எதிர்பார்க்கப்பட்ட படம் நான்காண்டுகள் கழித்தே திரைக்கு வந்தது!
கிராமத்தில் கால் ஊனமுற்ற தங்கை சீதாவுடன் வாழ்ந்து வரும்
வாத்தியக் கலைஞனான சுந்தரம் அவளின் கல்யாணத்துக்காக பொருளீட்ட நகரத்துக்கு வருகிறான். அங்கு அவனைப் போன்று தோற்றம் கொண்ட கொள்ளைகாரன் ரஞ்சித்தின் பார்வையில் அவன் படுகிறான். சுந்தரத்திடம் சாமர்த்தியமாக பேசும் ரஞ்சித் தனக்கு உடல் நிலை சரியில்லை என்பதால் சில காலம் தன்னைப் போலவே நடித்து உதவும் படி கேட்கிறான் . பதிலுக்கு சாரதாவின் கல்யாணத்துக்கு வேண்டிய பணத்தை தருவதாக வாக்களிக்கவே சுந்தரம் ஒப்புக் கொள்கிறான். இதனிடையே போலீசார் ரஞ்சித்தை பிடிக வலை வீசுகிறார்கள். ஆனால் சுந்தரத்தை ரஞ்சித் என்று எண்ணி அவனை மடக்க பார்க்கிறார்கள். இந்த முயற்சியில் ஈடுபடும் போலீஸ் அதிகாரி லீலாவுக்கும், சுந்தரத்துக்கு இடையில் காதல் மலர்கிறது. அதே சமயம் சுந்தரத்தை தேடி நகருக்கு வரும் சீதாவை கொடியவர்களிடம் இருந்து போலீஸ் அதிகாரி மோகன் காப்பாற்றுகிறான். ரஞ்சித்தோ சுந்தரத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள சீதாவை கடத்தி வருகிறான். சுந்தரம், ரஞ்சித் இடையே மோதல் வலுக்கிறது. யார் உண்மையான ரஞ்சித் என்பதை கண்டுபிடிக்க முடியாமல் போலீசும் , நீதிமன்றமும் திணறுகிறது. இதுதான் படத்தின் கதை.

படத்தில் நம்பியார், அசோகன் இருவரும் இருந்தும் எம் ஜி ஆருக்கு வில்லன் எம் ஜி ஆர் தான். நம்பியாரும், அசோகனுக்கு நல்லவர்களாக வந்து ஆச்சரியப்படுத்துகிறார்கள். அதிலும் எம் ஜி ஆருடன் எண்பதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்த அசோகன் , எம் ஜி ஆருடன் இறுதியாக நடித்த படம் இதுவாகும். அதே போல் ரிக்ஷாகாரன் படம் தொடங்கி பல படங்களில் எம் ஜி ஆருடன் ஜோடி சேர்ந்து நடித்த மஞ்சுளா எம் ஜி ஆருடன் ஜோடியாக நடித்த கடைசி படம் இதுவாகும்.
படத்தில் சீதாவாக சாரதா நடித்திருந்தார். மிகையில்லாத நடிப்பு. எம்
ஜி ஆருக்கு மஞ்சுளா, லதா என்று இரண்டு ஜோடிகள். நடிப்பில் எப்படியோ, கவர்ச்சியில் இருவரும் போட்டி போடுகிறார்கள். தேங்காய் சீனிவாசன் சில காட்சிகளில் வந்தாலும் கவருகிறார். இவர்களுடன் வி . கோபாலகிருஷ்ணன், வி . எஸ் .ராகவன், சுந்தரிபாய், எஸ் .வி .ராமதாஸ், எஸ் . என் . லஷ்மி, பூர்ணம் விசுவநாதன், காந்திமதி ஆகியோரும் நடித்தனர்.

இரட்டை வேடங்களில் நடிப்பது எம் ஜி ஆருக்கு சர்வ சாதாரணம். இதிலும் குறை வைக்கா வண்ணம் நடித்திருந்தார். சண்டைக் காட்சிகளிள் அவரின் வேகம் கவர்ந்தது. பூ மலை தூவி வசந்தங்கள் பாடி பாடலில் அவரின் ஸ்டைல் அருமை. தானே தானே தன்னான தானா பாடலில் எம் ஜி ஆரின் துள்ளல் நடிப்பு பிரமாதம். ஆனால் இவற்றுக்கு அப்பால் போய் படத்தின் திரைக் கதையிலும் தனது கை வண்ணத்தைக் காட்டியிருந்தார் அவர். ஹிந்தியில் ரஞ்சித்தை கொலைக்காரனாக, கொடூ
ரமானவனாக காட்டியிருந்தார்கள் . ஆனால் தமிழில் அதனை மாற்றியிருந்தார் . அதுமட்டுமன்றி படத்தின் முடிவில் தாய் செண்டிமெண்டலையும் சேர்த்து தன் இமேஜை தக்க வைத்துக் கொண்டார் எம் ஜி ஆர்.
படத்தின் பாடல்களை ஏ. மருதகாசி , கண்ணதாசன், வாலி, புலமைப்பித்தின், ஆகியோர் எழுத எம் . எஸ் .விஸ்வநாதன் இசையமைத்தார். கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும் , ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து, தானே தானே தந்தானத்தானா பாடல்கள் அரை நூற்றாண்டுக்கு பின்னரும் மனதில் இடம் பிடித்துள்ளன.
எம் ஜி ஆருக்கு வசனம் எழுதுவதில் திறமையுள்ள ஆர். கே. சண்முகம் இதிலும் தன்னை நிரூபித்திருந்தார். படத்தை வி.ராமமூர்த்தி, ஏ . சண்முகம் இருவரும் ஒளிப்பதிவு செய்தனர். எம் ஜி ஆரின் ஆஸ்தான இயக்குனரான ப . நீலகண்டன் படத்தை டைரக்ட் செய்தார்.
இந்த படம் தயாரான காலகட்டத்தில் தயாரிப்பாளர் எம் ஜி ஆர் மீது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினார். மொத்தமாக ஒரே பேமென்டில் ஏழு இலட்சம் ரூபாயை வாங்கி விட்டு சொன்னது போல் ஆறு மாதத்தில் படத்தை முடித்து தரவில்லை, லதா, மஞ்சுளாவுக்கு அதிகளவில் ஊதியம் கொடுக்கும் படி வற்புறுத்தினார் , புதிதாக தன்னிடம் வந்த ஸ்ரீதருக்கு மிக குறுகிய காலத்தில் படம் நடித்துக் கொடுத்தார் , மணியனுக்கு அடுத்தடுத்து மூன்று படங்கள் நடித்துக் கொடுத்து விட்டு இந்தப் படத்தை நான்காண்டுகள் இழுத்தடித்தார் என்றெல்லாம் புகார் சொல்லப்பட்டது. இதனால் படத்தின் தயாரிப்பாளரான இலங்கை தொழிலதிபர் தான் இலங்கையில் நடத்தி வந்த பிரபல தமிழ் தினசரியில் எம் ஜி ஆர் தொடர்பான எந்த செய்தியும் வெளிவரக் கூடாதென வீரமாக கட்டளையிட்டார். ஓராண்டு காலம் இது அமுலில்இருந்தது. இவ்வாறெல்லாம் இழுப்பட்டு ஐம்பது ஆண்டுகளுக்கு முன் வெளியான நினைத்ததை முடிப்பவன் எம் ஜி ஆரின் வெற்றிப் படங்களில் ஒன்றானது!
No comments:
Post a Comment