ஏதும் அறியாதோரடி எம்பாவாய்!


-சங்கர சுப்பிரமணியன்.





அப்பனே என்னைக் காப்பாற்றென
வேண்டினான் ஒருவன் அக்கறையாய்
கம்பிக் கதவுக்குள்ளே இருந்தவனோ
வேலவன் அண்ணன் வேழமுகத்தான்

பூட்டிய கதவுக்குள் அவனிருக்க
அங்கே வந்தான் மற்றொருவன்
அவரே பூட்டப்பட்டு இருக்கிறாரே
எப்படி காப்பாற்றுவார் என்றான்

ஆற்றங்கரை குளத்தங்கரைகளில்
அரசமரத்தடியில் அமர்ந்திருப்பார்
பூட்டப்படாமல் அங்கு வீற்றிருப்பார்
உதவிடுவார் அங்கு செல் என்றான்

உயிர்கொடுத்தும் ஊண்கொடுத்தும்
உதிரமும் தந்து நம்மைக் காப்பவரை
உள்ளேவைத்து வெளியே பூட்டிவிட்டு
காப்பாற்று என்றாலது என்ன நியாயம்?

வாழைப்பழத்தை நமக்கு தந்தவனிடம்
அதன் தோலையும் உரித்துதர சொல்லி
உரித்துத்தர கூலியாக ஒன்று செய்தால்
அதை கையூட்டன்றி வேறெப்படி சொல்ல

எல்லாமும் தந்து வழியும் காட்டியவனிடம்
வாழவை வாழவை என்று முறையிட்டால்
உணவை நமக்கு தந்தவனிடமே சென்று
ஊட்டிவிடு என்பதன்று வேறென்ன என்பீர்

தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருந்தக் கூலிதரும் என்பது எல்லாம்
ஏட்டுச் சுரைக்காய்தானோ எம்பாவாய்?
அவரும் ஏதும் அறியாதாரோடி எம்பாவாய்?

No comments: