இலங்கைச் செய்திகள்

 வட, கிழக்கு மனிதப்புதைகுழிகள் மற்றும் இனப்படுகொலைக்குமாக நீதிகோரி முல்லையில் கையெழுத்து போராட்டம் வட, கிழக்கு மனிதப்புதைகுழிகள் மற்றும் இனப்படுகொலைக்குமாக நீதிகோரி முல்லையில் கையெழுத்து போராட்டம்

கிளிநொச்சியில் மனித புதைகுழிகள், இனவழிப்புக்கு சர்வதேச விசாரணையை வலியுறுத்தி கையெழுத்து போராட்டம்

வவுனியாவில் சர்வதேச நீதி கோரி கையெழுத்து போராட்டம்

ராஜித சேனாரத்னவுக்கு விளக்கமறியல்!

ஒரு இலட்சத்து 30 ஆயிரம் தமிழ் மக்களின் கையொப்பத்துடன் ஐ.நா செல்கின்றது "நீதியின் ஓலம்"

கோட்டாபய ராஜபக்ஷவுக்கு குற்றப் புலனாய்வு திணைக்களம் அழைப்பு




வட, கிழக்கு மனிதப்புதைகுழிகள் மற்றும் இனப்படுகொலைக்குமாக நீதிகோரி முல்லையில் கையெழுத்து போராட்டம் வட, கிழக்கு மனிதப்புதைகுழிகள் மற்றும் இனப்படுகொலைக்குமாக நீதிகோரி முல்லையில் கையெழுத்து போராட்டம்

29 Aug, 2025 | 02:05 PM

செம்மணி உட்பட இலங்கையின் வடக்கு, கிழக்கு மண்ணில் இனங்காணப்பட்ட மனிதப் புதைகுழிகள் மற்றும் நடைபெற்ற தமிழ் இனப்படுகொலைகளுக்கும் நீதியைக் கோருவதற்காக தமிழ்த் தேசியக் கட்சிகள் மற்றும் பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் கையெழுத்துச் சேகரிக்கும் செயற்பாடு வடக்கு, கிழக்க மாகாணங்களின் பல பகுதிகளிலும் இடம்பெற்றுவருகின்றன. 

அந்தவகையில் குறித்த கையெழுத்துச் சேகரிக்கும் செயற்பாடு முல்லைத்தீவு நகரில் வெள்ளிக்கிழமை (29) கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் ஞா.ஜுட்சன் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது. 

இந்நிலையில் இந்தக் கையெழுத்திடும் செயற்பாட்டில்


வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், முன்னாள் வடமாகாண விவசாய அமைச்சர் கந்தையா சிவனேசன், கரைதுறைப்பற்று பிரதேச சபையின் தபிசாளர் சி.லோகேஸ்வரன், முன்னாள் கரைதுறைப்பற்று தபிசாளர் க.விஜிந்தன், மாந்தை கிழக்கு உபதபிசாளர் வரதன் பிரதேச சபை உறுப்பினர்களான அமலன், பவுள்ராஜ், குணம் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள், கட்சி உறுப்பினர்கள்,  பங்குத்தந்தையர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தார்கள்.  













நன்றி வீரகேசரி 



கிளிநொச்சியில் மனித புதைகுழிகள், இனவழிப்புக்கு சர்வதேச விசாரணையை வலியுறுத்தி கையெழுத்து போராட்டம்

29 Aug, 2025 | 01:01 PM

செம்மணி உட்பட வடக்கு கிழக்கில்  காணப்படும் மனித புதைகுழிகள் மற்றும் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனவழிப்பு நடவடிக்கைக்கு சர்வதேச விசாரணையை வலியுறுத்த வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட கையெழுத்த போராட்டம் வெள்ளிக்கிழமை (29) கிளிநொச்சி மாவட்டத்திலும் மேற்கொள்ளப்பட்டன.

தமிழ்த்தேசிய கட்சிகள் மற்றும் பொது அமை


ப்புக்கள் இணைந்து  ஏற்பாடு செய்யப்பட்ட இக் கையெழுத்து போராட்டமானது கிளிநொச்சி பொதுச் சந்தைக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டன. 

இதன் போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார்,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர்,  ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் பங்காளி கட்சிகளின் உறுப்பினர்கள் பொது மக்கள்  என பலரும் கலந்துகொண்டு கையெழுத்திட்டனர்.



































நன்றி வீரகேசரி 






வவுனியாவில் சர்வதேச நீதி கோரி கையெழுத்து போராட்டம்

29 Aug, 2025 | 12:43 PM

செம்மணி உட்பட இலங்கையின் வடக்கு கிழக்கு மண்ணில் உள்ள மனித புதைகுழிகள் மற்றும் இனப்படுகொலைக்காக சர்வதேசத்திடம் நீதி கோரி கையெழுத்து போராட்டமானது வெள்ளிக்கிழமை (29) வவுனியா, இலுப்பையடியில் இடம்பெற்றிருந்தது.

தமிழ்த்தேசிய கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் குறித்த போராட்டமானது இடம்பெற்றிருந்தது.

இப்போராட்டத்தில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர்


ப.சத்தியலிங்கம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், மாநகர மேயர் சு.காண்டீபன் உட்பட பலரும் கலந்து கொண்டு கையொபப்மிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

























நன்றி வீரகேசரி 




ராஜித சேனாரத்னவுக்கு விளக்கமறியல்!

29 Aug, 2025 | 01:18 PM

பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன கொழும்பு மேல்நீதிமன்றில் இன்று வெள்ளிக்கிழமை (29) காலை ஆஜரானதை தொடர்ந்து அவரை  விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேல்நீதிமன்ற நீதவான் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், ராஜித சேனாரத்னவை கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று ஆஜர்ப்படுத்துமாறும் அதுவரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறும் கொழும்பு மேல்நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பில் தன்னை கைதுசெய்யுமாறு பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவை தற்காலிகமாக இரத்து செய்யுமாறு கோரி முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன நீதிமன்றில் மனு தாக்கல் செய்திருந்தார். 

ஆனால் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் மனுவை நீதிமன்றம் நிராகரித்தது.

இந்நிலையில், முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன கொழும்பு மேல்நீதிமன்றில் இன்றைய தினம் காலை ஆஜரானதை தொடர்ந்து அவரை கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துமாறும் அதுவரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

பின்னர் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டதையடுத்து அவரை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நன்றி வீரகேசரி 





ஒரு இலட்சத்து 30 ஆயிரம் தமிழ் மக்களின் கையொப்பத்துடன் ஐ.நா செல்கின்றது "நீதியின் ஓலம்"

28 Aug, 2025 | 04:44 PM

ஒரு இலட்சத்து 30 ஆயிரம் தமிழ் மக்களின் கையொப்பத்துடன் "நீதியின் ஓலம்"  ஐ.நா. வுக்கு செல்லவுள்ளதாக தாயகச் செயலணி அமைப்பின் வடக்கிற்கான இணைப்பாளர் ஜெயசித்திரா தெரிவித்தார்.

ஒன்பது கோரிக்கைகளை முன்வைத்து "நீதியின் ஓலம்"  கையொப்பப் போராட்டம் கடந்த 23 ஆம் திகதி சனிக்கிழமை வடக்கு கிழக்கில் ஆரம்பமானது.

குறிப்பாக இப்போரட்டத்தின் பிரதான நிகழ்வு மனிதப்


படுகொலையின் புதைகுழிச் சாட்சியான யாழ்ப்பாணத்தின் செம்மணியில் ஆரம்பமாகி வியாழக்கிழமை  முற்பகல் 10.30 மணிக்கு அதே இடத்தில் நிறைவுற்றது.

தாயகச் செயலணி அமைப்பினரால் தமிழினப் படுகொலைக்கு சர்வதேச நீதி கோரலை வலியுறுத்தி கடந்த 5 நாள்களாக முன்னெடுக்கப்பட்ட நீதியின் ஓலம்" எனும், கையொப்பப் போராட்டம் வியாழக்கிழமை  நிறைவுக்கு வந்தது.


குறித்த போராட்டத்தில் வடக்கு கிழக்கின் பல்வேறு பிரதேசங்களில் மக்களின் கையொப்பங்கள் சேகரிக்கப்படன.

எழுமாறாக பெறப்பட குறித்த கையொப்ப போராட்டத்தில் சுமார் 130 ஆயிரத்துக்கும் அதிகமானோர்  கையொப்பமிட்டிருந்தனர்.

முன்பதாக கடந்த ஐந்து நாட்களாக தமிழர்


தாயகமெங்கும் முன்னெடுக்கப்பட்ட இந்த கையொப்பப் போராட்டத்தினூடாக  இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட செம்மணி உட்பட்ட அனைத்து மனிதப் புதைகுழிகளுக்கும் முழுமையான சர்வதேச நீதிவிசாரணை நடைபெற வேண்டும் என்பதுடன் எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனிதவுரிமைகள் பேரவையில் இலங்கை மீது வலுவான தீர்மானம் கொண்டு வந்து, அனைத்து நாடுகளும் தெளிவான நிலைப்பாடு எடுக்க வேண்டும் என இந்த போராட்டம் வலியுறுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி 






கோட்டாபய ராஜபக்ஷவுக்கு குற்றப் புலனாய்வு திணைக்களம் அழைப்பு

31 Aug, 2025 | 09:11 AM

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க, இரண்டு தனித்தனி முறைப்பாடுகள் தொடர்பாக வாக்குமூலம் அளிக்க குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

காலி முகத்திடலில் நடைபெற்ற போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கட்டுப்படுத்தத் தவறியமை தொடர்பில் முன்னாள் பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னகோன் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில், கோட்டாபய ராஜபக்சவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், அவர் ஆஜராக வேண்டிய திகதி இதுவரை அறிவிக்கப்படவில்லை.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இங்கிலாந்து பயணம் தொடர்பாக அரச நிதி தவறாக பயன்படுத்தப்பட்டதாக உள்ள குற்றச்சாட்டில், வாக்குமூலம் அளிக்க சமன் ஏக்கநாயக்க ,  நாளை திங்கட்கிழமை (01)   குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு அழைக்கப்பட்டுள்ளார்.  நன்றி வீரகேசரி 






No comments: