முதலில், சங்கத் தலைவர் திரு. ஆருமுகம் பெருமையனார் மற்றும் திருமதி பெருமையனார், மற்றும் இணை அமைப்பான தமிழ் மூத்த குடிமக்கள் நலச்சங்கத்தின் (Tamil Senior Citizens' Benovolent Society) தலைவர் திரு. சபாரத்னம் கேதாரநாதன் மற்றும் திருமதி சிவகௌரி கேதாரநாதன் ஆகியோரும் பங்கேற்று, நமது தென்னாசிய பாரம்பரியத்தினமான விளக்கேற்றத்துடன் நிகழ்ச்சியை ஆரம்பித்தார்கள்.
இந்த நிகழ்ச்சியை நடைமுறைப்படுத்த உதவிய ஆஸ்திரேலிய அரசாங்கத்தின்
Community Grants Hub அமைப்பின் Multicultural Grassroots Initiatives Funding Program வழியாக வழங்கிய பொருளாதார ஆதரவிற்கும் நன்றி.
பல்முகபண்பாட்டு நிகழ்ச்சியை உணர்வுபூர்வமாக உயிர்ப்புடன் கொண்டுவர உதவிய அனைத்து கலைஞர்கள்:
-
திருமதி வரலக்ஷ்மி ஸ்ரீதரன் மற்றும் அவருடைய இசைக் குழுவினருக்கு, சுருதி மற்றும் லயத்தில் அற்புதமான வீணை இசை.
-
நேபாள நண்பருடைய உணர்ச்சி பூர்வமான புல்லாங்குழல் இசை. -
மூத்த உறுப்பினர் திரு. சிவசூரியர் அவருடைய கர்நாடக இசை பாணியில் மௌத் ஆர்கன்.
-
திருமதி அமேஷா மற்றும் அவருடைய அர்ப்பணிப்பு கொண்ட குழு, ஐந்து தன்மைகள் — நீர், மண், ஆகாயம், நெருப்பு, காற்று — ஆகியவற்றை பிரதிபலிக்கும் choreographyக்கு இளம் கலைஞர்கள் மிகச் சிறப்பான பரதநாட்டியம்.
-
இலங்கை நடனக் குழு, கண்டிய நடனம் மற்றும் பரதநாட்டியம் ஆகிய இரண்டையும் இணைத்து அரங்கேற்றிய மறக்க முடியாத சிறப்புப் பெறும் நிகழ்வு.
No comments:
Post a Comment