v மூவேந்தர் தாலாட்ட முச்சங்கத்தே கிடந்து
பாவேந்தர் செந்நாவில் நடை பழகி  மொழி
பயின்று இன்றுவரை செம்மொழியாய் இலங்கிவாழும் தமிழ் மொழியின் தனி விழா!
v சேர 
சோழ  பாண்டிய தலை நகரங்களை உள்ளடக்கி
இளங்கோ அடிகளால் எழுதப்பெற்ற  முழுமையான
முத்தமிழ்க் காப்பியம் சிலப்பதிகாரம்!
v ஒரு பண்பட்ட சமுதாயம் எப்படி வாழ்வாங்கு
வாழ வேண்டும்   என்ற உண்மைகளை
எடுத்துக்காட்டும் முதற்  காவியம்
சிலப்பதிகாரம்!
v காப்பியங்களுக்கான இலக்கண அமைப்பு அனைத்தும் பொருந்தும் வண்ணம் இயற்றப்பெற்றதுடன் பழங்கால நாடகப் பான்மையை அறிவதற்கு மிகவும் துணை செய்யும் ஒரே நாடகக் காப்பியம் சிலப்பதிகாரம்!
v இலக்கியச்  சுவையும் 
பொருட்செறிவும் தெளிவான இனிய எளிய நடையும் பலவித அணிநலன்களும்   பொதிந்த தமிழன்  காப்பியம் சிலப்பதிகாரம்!
v அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்
               உரைசால் 
பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்துதல்
             ஊழ்வினை உறுத்துவந்து ஊட்டும்
இந்த மூன்று   கருப்பொருள் களையும் 
சிறந்த முறையிலே சித்தரிப்பதொடு இன்பியலையும் துன்பியலையும்
வெளிப்படுத்தும்  மகத்தான  காப்பியம் சிலப்பதிகாரம்!
v ஆம்!  
நெஞ்சை அள்ளும் தீந்தமிழ்க் காப்பியம் என
மகாகவி பாரதி அவர்களால்   விதந்துரைக்கப்பெற்றது! 
தென்னவன்
பாவையை,  செம்பியன் பூவையை, மன்னவன் சேரன்  மனங்கவர் கோதையை மகிழ்ந்து பாடிய இளங்கோ
அடிகளாரின் தமிழ்க் காவியம்!
          ஒப்பற்ற 
சிலப்பதிகாரத்தைப் பற்றிப் பொதுவாக 
எமது சிட்னிவாழ் தமிழ் அன்பர்களும் குறிப்பாகத் தமிழ்ப் பிள்ளைகளும்
அறிந்து கொள்ளவேண்டும் என்ற  உயர்நோக்குடன்
இந்தச் சிலப்பதிகார விழா சிட்னியிலே மூன்றாவது முறையாக அரங்கேற உள்ளது. 
          ஆகவே, தமிழ் ஆர்வலர்களே! தமிழ் இளைஞர்களே! நீங்கள்
உங்கள் உறவினர்களுடன் பெருந்திரளாக வந்து மகாநாட்டினைச் சிறப்புச் செய்வதுடன்
சிலப்பதிகாரத்தின் சிறப்பை யெல்லாம் செந்தமிழ் அறிஞர்களின் வாயிலாகச் செவிமடுத்து மகிழும் வண்ணம்
வேண்டுகிறோம்.
திரண்டு வாரீர்! செந்தமிழ் கேட்பீர்!
தமிழால் இணைவோம்!
சரித்திரம் படைப்போம்!
இடம் - தமிழர் மண்டபம் - 21 ரோஸ் கிறசன்ற் - ரீஜன்ஸ் பார்க் -  நியூ சவுத் வேல்ஸ் 2143
திகதி -  - நவம்பர் 30 ஆம் திகதியும்  - 
டிசம்பர் 1 ஆம் திகதியும்
நேரம் - மாலை 4 மணியிலிருந்து ……
தமிழ் இலக்கியக் கலை மன்ற மேலாண்மைக்
குழு உங்களை அன்புடன் அழைக்கிறது.
மகாநாடு தொடர்பாக மேலதிக தகவல்களை அறியத் தொடர்பு கொள்ள வேண்டியவர்கள்:
தலைவர் கலாநிதி இ . மகேந்திரன் - 0450209724
செயலாளர் திரு ப. பஞ்சாட்சரம் - 0434006841;
இணைச் செயலாளர் திரு கு. கருணாசலதேவா
- 0418442674 
--------------------------------------------------------------------------------------------

No comments:
Post a Comment