தமிழ் திரைப்பட வரலாற்றில் முதல் சாதனை - "ஆந்தை"

 .காரைக்காலைச் சேர்ந்தசிங்கப்பூரில் வசிக்கும் எழுத்தாளர் மில்லத் அகமது  "ஆந்தைஎன்ற படத்தைத் தயாரித்துள்ளார்.  இந்த படம் வருகிற பிப்.16ல் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதுஇந்நிலையில் இந்தப் படத்தில் இவர், "நடிப்புகதைதிரைக்கதைவசனம்பாடல்பாடலுக்கு குரல்பின்னணி குரல்நடனம்தயாரிப்பு மற்றும் இணை இயக்கம்என தமிழ் திரைப்பட வரலாற்றில் முதல் படத்தில் பத்து துறைகளைச் செய்வது இதுவே முதல் முறை என்ற சாதனையை பெற்றுள்ளார்.

 

இந்தச் சாதனையைப் பாராட்டி லண்டன் உலக சாதனைப் புத்தகம் மற்றும் இந்தியா உலக சாதனைப் புத்தகம்  அங்கீகரித்து பதிவு செய்து உலக சாதனையாளர் சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள்புதுச்சேரி மாநிலத்திலிருந்து திரைப்படத் துறையில் சாதித்தவர் என்ற பெயரும் பெற்றார்.

 

இதனிடையேபுதுச்சேரி முதலமைச்சர் என்ரங்கசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றார்அப்போது ஆந்தை திரைப்படம் வெற்றி பெற்றுமேலும் பல நல்ல திரைப்படங்களைத் தரவேண்டும்என்று வாழ்த்து கூறி ஆசிர்வதித்தார்மில்லத் அகமது 2021ஆம் ஆண்டு ஐந்து வார்த்தையில் சிறுகதை எழுதி உலக சாதனைச் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

முதலில் ஆந்தை திரைப்படத்தில் கதைதிரைக்கதைவசனம்பாடல்கள்இணை இயக்கம் என ஐந்து துறைகள் மட்டுமே செய்தேன். "ஊத்து ராவாபாடல் பதிவின்போது இசையமைப்பாளர் ராம் அவர்கள் பாடலில் வரும் டயலாக் போர்ஷனை என்னைப் பேச சொன்னார்பேசினேன் நன்றாக இருந்ததால் அப்படியே வைத்துக் கொண்டோம்பிறகு பாண்டிச்சேரியில் சில காட்சிகளும்ஒரு பாடல் காட்சியும் சூட் செய்ய வேண்டியிருந்ததுஅதற்கு இயக்குநரால் வர இயலாத சூழ்நிலையால் நான் சென்று இயக்கினேன்அப்போது சைக்கோ பாடலுக்கு நானே நடனம் அமைத்தேன்நன்றாக வந்திருக்கிறது படம் பார்த்தால் உங்களுக்கே தெரியும்

பிறகு டப்பிங் பேசும் போது ஒரு போலிஸ் கேரக்டர்ஒரு பைக்காரர்ஓபனிங் பெண் பற்றிய வசனம் மற்றும் சுகாதார அறிவுரையும் பேசியுள்ளேன்இந்த படத்தில் நடித்தும் இருக்கிறேன்ஆக ஒன்பது துறைகள் வந்துவிட்டதுஇறுதியாக இந்தத் திரைப்படத்தில் ஆரம்பத்தில் இருந்த தயாரிப்பாளர்களால் தொடர்ந்து பயணிக்க இயலாத காரணத்தால் நானே தயாரிப்பாளர் ஆகிவிட்டேன்படத்தை முடித்தப்பிறகு பார்த்தால் 10 துறைகள் செய்து விட்டேன்பொதுவாக முதல் படத்தில் நான்கு அல்லது ஐந்து துறைகள் மட்டுமே செய்வார்கள்இதனை லண்டன் உலக சாதனைப் புத்தகம் மற்றும் இந்தியா உலக சாதனைப் புத்தகம் ஆகியவற்றிற்கு தெரிவித்தோம்அவர்கள் ஆய்வுசெய்து இறுதியில் இந்தச் சாதனையை அங்கீகாரம் செய்தார்கள் என்று கூறினார்.1 comment:

millat said...

தமிழ்முரசிற்கு மிக்க நன்றி :)