போர் நிறுத்தத்திற்கு மத்தியிலும் லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: காசாவில் குண்டு மழை
போர்க் களத்தில் வெல்வதால் பயனில்லை: ஜோ பைடன்
நிஜ்ஜார் கொலை: மோடி, தோவலுடன் தொடர்புபடுத்தும் அறிக்கைகளை மறுத்த கனடா
போர் நிறுத்தத்திற்கு மத்தியிலும் லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: காசாவில் குண்டு மழை
லெபனானில் போர் நிறுத்தத்திற்கு மத்தியிலும் எல்லைப் பகுதிகளில் இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தி இருப்பதோடு காசாவில் தொடரும் தாக்குதல்களில் நேற்றும் மேலும் 22க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
எல்லை கிராமம் ஒன்றில் இஸ்ரேல் நேற்று நடத்திய தாக்குதலில் இருவர் காயமடைந்திருப்பதாக லெபனான் அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா இடையே ஓர் ஆண்டுக்கு மேல் நீடித்த மோதலைத் தொடர்ந்து கடந்த புதன்கிழமை போர் நிறுத்தம் அமுலுக்கு வந்த ஒரே நாளிலேயே இஸ்ரேல் அங்கு தாக்குதல்களை நடத்தியுள்ளது.
மர்கபா கிராமத்தில் உள்ள சதுக்கம் ஒன்றின் மீது எதிரிகள் இலக்கு வைத்து நடத்திய தாக்குதலில் இருவர் காயமடைந்ததாக லெபனான் அரச ஊடகம் கூறியது. அதேபோன்று தெற்கு எல்லையில் இருந்து மூன்று சிறு நகரங்களில் இஸ்ரேலிய டாங்கிகள் நேற்று தாக்குதல் நடத்தியதாக லெபனான் பாதுகாப்பு தரப்பை மேற்கோள்காட்டி அரச ஊடகம் தெரிவித்துள்ளது.
இதில் லெபனான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான எல்லையைக் குறிக்கும் நீலக் கோட்டுப் பகுதியின் இரண்டு கிலோமீற்றருக்குள் இருக்கும் மார்கபே, வசானி மற்றும் கர்ப்சுபா பகுதிகளிலேயே இஸ்ரேலிய டாங்கிகள் தாக்குதல் நடத்தியுள்ளன. அமெரிக்கா மற்றும் பிரான்ஸின் மத்தியஸ்தத்துடன் எட்டப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கையின்படி தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேலிய துருப்புகள் 60 நாட்களுக்குள் வெளியேற வேண்டும். இந்நிலையில் லெபனானின் எல்லையை ஒட்டிய கிராமங்களில் உள்ள மக்கள் தமது வீடுகளுக்கு திரும்புவதை அனுமதிக்க வேண்டாம் என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இராணுவத்தை அறிவுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் இந்த எல்லைப் பகுதிகளில் நடமாட்டங்களுக்கு இஸ்ரேலிய இராணுவம் தடை விதித்துள்ளது. இந்தப் போர் நிறுத்தத்தை மீறி சந்தேகத்திற்கு இடமான வாகனங்கள் வந்ததாக இஸ்ரேல் குற்றம்சாட்டியுள்ளது. மறுபுறம் தெற்கு லெபனானில் தமது கிராமங்களுக்கு திரும்பும் மக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதாக ஹிஸ்புல்லா அமைப்பைச் சேர்ந்த லெபனான் பாராளுமன்ற உறுப்பினர் ஹசன் பத்லல்லா குற்றம்சாட்டியுள்ளார்.
தெற்கு எல்லையில் போர் காரணமாக வெளியேறி இருந்த குடும்பங்கள் தமது உடைமைகளை பார்ப்பதற்காக அங்கு திரும்புவதற்கு முயன்று வருகின்றன. எனினும் எல்லைக் கிராமங்களில் இஸ்ரேலிய துருப்புகள் நிலைகொண்டிருப்பதோடு அங்கு ஆளில்லா விமானங்களைக் கொண்டு கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில் லெபனானில் இருந்து இஸ்ரேலிய துருப்புகள் வாபஸ் பெறுவதை தொடர்ந்து அவதானித்து வருவதாக ஹிஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது. தமது போராளிகள் இஸ்ரேலிய எதிரிகளின் நோக்கம் மற்றும் தாக்குதல்களை கையாள்வதற்கு முழு பலத்துடன் இருப்பதாகும் ஹிஸ்புல்லா குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை காசாவில் இஸ்ரேலின் சரமாரித் தாக்குதல்கள் தொடர்ந்தன. மத்திய காசாவில் தாக்குதல்கள் தீவிரம் அடைந்திருந்ததோடு இஸ்ரேலிய டாங்கிகள் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் ஆழ ஊடுருவி வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
வடக்கு காசாவின் பெயித் லஹியாவில் உள்ள கமால் அத்வான் மருத்துவமனைக்கு அருகிலும் வீடு ஒன்றின் மீதும் இஸ்ரேல் நடத்திய இரு வேறு தாக்குதல்களில் ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளனர். தெற்கு நகரான கான் யூனிஸில் மோட்டார் வாகனம் ஒன்றை இலக்கு வைத்து நடத்தப்பட்ட மற்றொரு தாக்குதலில் மேலும் நால்வர் கொல்லப்பட்டுள்ளனர்.
காசாவில் உள்ள வரலாற்று அகதி முகாம்களில் ஒன்றான நுஸைரத்தில் இஸ்ரேலிய போர் விமானங்கள் நடத்திய பல முனை வான் தாக்குதல்களில் பல கட்டடங்கள் மற்றும் பள்ளிவாசல்களை சூழவிருக்கும் வீதிகள் சோதமடைந்துள்ளன. இந்தத் தாக்குதல்களில் குறைந்தது ஏழு பேர் கொல்லப்பட்டதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நுஸைரத்தின் மேற்குப் பகுதியில் இடம்பெற்ற செல்குண்டுத் தாக்குதலில் பெண் மற்றும் ஒரு குழந்தை என இருவர் கொல்லப்பட்டிருக்கும் அதேநேரம் அருகில் இருக்கும் வீடு ஒன்றின் மீது இடம்பெற்ற வான் தாக்குதலில் மேலும் ஐவர் கொல்லப்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
காசாவின் எகிப்து எல்லையை ஒட்டிய ரபாவில் இஸ்ரேலிய டாங்கிகள் நகரின் வட மேற்கை நோக்கி முன்னேறி வருவதாக குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
காசாவில் கடந்த ஓர் ஆண்டுக்கு மேலாக நீடிக்கும் இஸ்ரேலின் தாக்குதல்களில் 44,282க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டிருப்பதோடு 104,800க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். நன்றி தினகரன்
போர்க் களத்தில் வெல்வதால் பயனில்லை: ஜோ பைடன்
இஸ்ரேல்ஹ-மாஸ் இடையிலான மோதலில் ஏதாவது ஒரு தரப்பு வெற்றி பெறுவதால் மட்டும் அந்தப் பகுதி மக்களுக்கு பாதுகாப்பு கிடைத்துவிடாது என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
லெபனான் இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்தத்தை உறுதி செய்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இது குறித்து கூறியதாவது
இஸ்ரேல்-ஹிஸ்புல்லா இடையிலான போர் தொடங்கியது முதல், தங்கள் சொந்த நாட்டில் அகதிகளாக வாழும் கட்டாயத்துக்கு 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் தள்ளப்பட்டனர். அதேவேளை லெபனானில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் அகதிகளாக வாழும் நிலை ஏற்பட்டது.
போர்க்களத்தில் வெல்வதால் மாத்திரம் இஸ்ரேல், லெபனான் மக்களுக்கு நீடித்து நிலைக்கக் கூடிய பாதுகாப்பு கிடைக்காது. இப்போரை நிறுத்த இஸ்ரேல், லெபனான் அரசுகளுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ளுமாறு எமது அதிகாரிகளுக்கு உத்தரவிட்டேன்.
இந்நிலையில், இஸ்ரேல்–ஹிஸ்புல்லா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது இரு தரப்பினா் இடையிலான விரோதத்தை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் இஸ்ரேல்–லெபனான் எல்லையில் மோதலை முடிவுக்குக் கொண்டு வரும். இஸ்ரேலின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதை அமெரிக்கா அனுமதிக்காது என்றுள்ளார். நன்றி தினகரன்
நிஜ்ஜார் கொலை: மோடி, தோவலுடன் தொடர்புபடுத்தும் அறிக்கைகளை மறுத்த கனடா
NIA இனால் நியமிக்கப்பட்ட பயங்கரவாதி ஹர்தீப் நிஜ்ஜார் மரணத்துக்கும், பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோருக்கும் இடையே தொடர்பை ஏற்படுத்த முயன்ற கனடாவைத் தளமாகக் கொண்ட குளோப் அண்ட் மெயில் நாளிதழில் வெளியான செய்திக்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்த சில நாட்களுக்குப் பிறகு. , கனடா உத்தியோகபூர்வமாக அறிக்கைகளை மறுத்துள்ளது.
கடந்த ஆண்டு கனடாவில் கலிஸ்ட்ரர்ஸ்ட் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்தியாவின் பங்கு இருப்பதாக “நம்பகமான குற்றச்சாட்டுகள்” தன்னிடம் இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியிருந்தார். இந்தியா அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளது, அவற்றை “அபத்தமானது” மற்றும் “உந்துதல்” என்று கூறியதுடன், கனடா தனது நாட்டில் தீவிரவாத மற்றும் இந்தியாவுக்கு எதிரான சக்திகளுக்கு இடம் கொடுப்பதாக குற்றம் சாட்டியது.
முன்னதாக, காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டது தொடர்பான விசாரணையில் கனேடிய அரசாங்கத்தால் “ஆர்வமுள்ள நபர்கள்” என்று அறிவிக்கப்பட்ட பின்னர் கனடாவில் இருந்து ஆறு தூதர்களை இந்தியா திரும்ப அழைத்தது. நிஜ்ஜார் கடந்த ஜூன் 18 ஆம் திகதி பிரிட்டிஷ் கொலம்பியாவின் சர்ரேயில் உள்ள குருத்வாராவிற்கு வெளியே கொல்லப்பட்டார். நன்றி தினகரன்
No comments:
Post a Comment