நல் வழியில் நடைபயின்றார் நல்லைநகர் நாவலர் பெருமான் !


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் .... அவுஸ்திரேலியா                                                        

      

நல்லைநகர் என்றாலே எல்லையில்லா இன்பம்


வரும்.வல் வினைகள் போக்குகின்ற வடிவேலன் உறை யும் இடம்.அந்தவிடம் அமைந்த விதம் அனைத்துக்கும் பெருமைதான்.சொல்ல வல்ல ஒருவர் பிறக்கின்றா ர். அவர் பெயருடன் நல்லைநகரும் இணைந்து விடுகிறது. நல்லை நகர் சேர்ந்ததனால் அவர் புகழ் பெற் றாரா அல்லது அந்தக் கந்தப் பெருமான் அருள் கிடைத்ததால் அவர் புகழ் பெற்றாரா என்று எண்ணி நிற்கும் அளவுக்கு அவர் சிறந்தோங்கி விளங்கினார். அப்படி விளங்கியவர்தான் நல்லைநகர் ஆறுமுக நாவலர் பெருமான்.

 


கந்தப்
  பெருமானைத் தன் சிந்தையில் இருத்தி - தன் வாழ்க்கைப் பாதையினை அவர் அமைத்து அதன் வழியில் நடந்தார் எனலாம். கந்தப் பெருமானை மனம்முழுக்க எண்ணிய இருந்த காரணத்தால் கந்த புராணத் தை உயிராக நாவலர் பெருமான் கருதினார். " கந்த புராண கலாசாரம் " என்னும் வகையில் ஒரு புதுமையான கலாசாரம் தோன்றி இன்றளவும் ஈழத்தில் யாழ்மண்ணில்  இருப்பதற்கு மூலகாரணமாய் நாவலர் பெருமானே அமைந்தார் என்பதை அனைவரும் அகத்தில் இருத்துவது அவசியமாகும்.

  நாவலர் பெருமானை ஐந்தாங் குரவர் என்று ஏற்றிப் போற்றும் ஒரு நிலையும் காணப்படுகிறது. சமய குரவர் என்னும் பொழுது சம்பந்தர்அப்பர்சுந்தரர் மணிவாசகர் வந்து அமைகிறார்கள். யாவருக்கும் இது தெரிந்த விடயந்தான். ஆனால் ஐந்தாம் நிலையில் ஒருவரை இவர்களு டன் எப்படி இணைப்பது எவ் வாறு இப்படி ஒரு சிந்தனை எழுந்தது என்றெல்லாம் எண்ண வைக்கிறதல்லவா ! இங்குதான் நாவலர் தேர்ந்தெடுத்து நடந்த பாதையினைப் பார்க்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.சமய குரவர்கள் என்ன செய்தார்கள் அவர்களைக் கோவிலில்களில் வைத்து அவர்களுக்குக் குருபூசை செய்வதற்குக் காரண ந்தான் என்ன பூசிக்கப்படுகிறார்கள் கொண்டாடப்படுகிறார்கள் ,உயர்நிலையில் வைக்கப்படுகிறார்கள் - என்றால் அவர்கள் நிச்சயம் சமூதாயத்துக்கு மிகவும் உவப்பான அவசியமான செயல்களைச் செய்திருப் பவர்களாகத்தான் இருப்பார்கள் என்பது புலனாகி நிற்கிறதல்லவா !

  சமயகுரவர்களில் முன்னிற்பவர் சம்பந்தப்பெருமான். அவரின் சம காலத்தவர் அப்பர் பெருமான். இவர்கள் இருவரும் எங்கள் இன் தமிழை இதயத்தில் வைத்து ஏந்தினார்கள். அது போல் சைவவத்தையும் இதயத் தில் இருத்தி வைத்தார்கள். சைவம் ஒரு கண்ணாயும் தமிழ் மற்றக் கண்ணாயும் இவர்கள் கொண்டார்கள் என்றால் அது மிகையாகாது.மாற்று மதமும் வேற்றுக் கலாசாரமும் தமிழையும் தமிழ்ப் பண்பாட்டை யும் சைவத்தையும் அடக்கி ஒடுக்கி அழிக்கின்ற வகையிலே வந்த பொழுது - அவற்றை அகற்றிட        " நாமார்க்கும் குடியல்லோம் " என்னும் துணிவுடன் வந்தவர்கள்தான் சம்பந்தரும் அப்பரும். சம்பந்தர் இளையவர்.அப்பர் முதிர்ந்தவர். இளமையும் அனுபவமும் இணைந்து ஒரு பெரிய போராட்டமே தமிழ கத்தில் நடந்தது. அந்தப் போராட்டாத்தின் முதல் படைத் தளபதிகளாய் ஆண் டவனைத் துணையாக்கி நின்றவர்கள்தான் சம்பந்தரும் அப்பரும் ஆவர்.

  எதனை ஏற்பது எதனை விடுவது எது பயனானது என்று மயக்குற்று நின்ற மக்களுக்குத் தலைமை தாங்கி அவர்களை நல்வழியில் நடத்திச் சென்றவர்கள் சம்பந்தரும் அப்பருமே என்பதை மறுத்துரைத்து விடல் இயலாது.சம்பந்தரும் அப்பரும் அக்காலத்தில் பிறந்திருக்கா விட் டால் எங்கள் சைவமும்தமிழுமே காணாமலே போயிருக்கும். செய்யெனச் சொல்லாமல் தாமே முன்னின்று செயலாக்கி நின்றார்கள். கோவி ல்கள் எழுந்தன. சைவம் தளைத்ததுபிழைத்தது. அவர்களின் பின்னால் சுந்தரர் வருகிறார். மணிவாசகர் வருகிறார். இவர்களும் தங்காலத்துக்கு எது ஏற்றதோ அதனைச் செவ்வனவே செய்து சைவத் தையும் தமிழையும் நிலைபெற வைக்கிறார்கள்.

 சமய குரவர்கள் நால்வரின்பின் ஐந்தாம் குரவராக நாவலரைக் கொள்வதற்கு உரிய காரணங்களை அறிவது மிகவும் அவசியமாகும். அதற்கு நாவலர் பெருமானைப் பற்றித் தெரிந்து கொள்ளுவது முக்கிய மாகும்.

  சைவத்தைத் தலைமேற் கொண்ட குடும்பம் நாவலர் பெருமான் குடும்பம். ஆசார அனுட்டானங்களைக் கடைப்பிடித்த குடும்பம்  எம் பெருமானை  நீளநினைந்த குடும்பம். சைவம் தமிழ் இரண்டையும் கண்ணா ய்க் கருதிய குடும்பம் அவர் குடும்பம். அந்தக் குடும்பத்தில் பிறந்ததே திருவருள் என்றுதான் எண்ண வேண்டி இருக்கிறது. பிறப்பும் குடும்பச் சூழலும் வளரும் பருவத்திலேயே நாவலரை நல்ல வழியில் பய ணப்படுவதற்கு உரிய கருவை இதயத்தில் பதித்து விட் டது என்று தான் சொல்ல வேண்டும்.திண்ணைப் பள்ளிக்கூடத்தில் தமிழ் இலக்கியங்களைஇலக்கணத்தை சைவத்தை  எல்லாம் கற்றிட நாவலரின் தந்தையார் உறுதுணையாக விளங்கினானர். இளமையில் கல்வி சிலையில் எழுத்து என்பது போல - நாவ லரின் இளமையில் போடப்பட்ட நல்ல உரமானது அவரின் வருங்கால வாழ்வினுக்குசெயற்பாடுகளுக்கு நற்பாதையாய் அமைந்திருந்தது என்பது உண்மையாகும்.

  நாவலர் அவர்கள் வாழ்ந்த காலம் அன்னியர் ஆட்சியின் காலமாகும். அவர்களின் மதம்,கலாசாராம்மொழி செல்வாக்கினைச் செலுத்துவதற்கு முன்வந்த காலமாகும்.அன்னியரை அடிபணிந்தால் அனை த்துமே கிடைக்கும் என்னும் நிலை காணப்பட்ட காலமுமாகும்.அன்னிய அரசுக்கு யார் விசுவாசமாகச் செயற்படுகிறார்களோ அவர்களே நல்ல வசதிகளைவாய்ப்புகளைப் பெற்று வாழும் வாழ்க்கை நிலவியது என்பதும் மனங்கொள்ளத்தக்கது.இந்தச் சூழலில் நாவலர் பெருமான் ஆங்கிலப் பாடாசாலையில் கல்வி கற்கவேண்டி ஏற்படுகிறது. தற்பொழுது யாழ் மத்திய கல்லூரியாய் விளங்கும் கல்லூரியில்த்தான் நாவ லரின் ஆங்கிலக் கல்வி தொடங்கியது. நாவலர் எதையுமே நினையாமல் கற்பதைக் கருத்தாய் எண்ணிக் கற்று யாவரும் மதிக்கும் மாணவனாய் நிமிர்ந்து நின்றார். அன்னிய மொழியான ஆங்கிலத்தில் நல்ல புலமையினையும் பெற்றுக் கொண்டார்.கற்ற பாடசாலையிலேயே கற்பிக்கும் ஆசானாக ஆகும் வாய்ப்பும் அவருக்கு வாய்த்தது.ஆங்கிலம்தமிழ்சமஸ்கிருதம் என்று கற்று தன்னுடைய மொழி ஆற்றலை நாவலர் பெருமான் வளர்த்துக் கொண்டார். கிறீத்தவ பாடசாலை. கிறீத்தவ பாதிரிமார் ஆசிரியர். கிறீத்தவமே அங்கு முழுவதுமாய் இருந்தது. ஆனால் அவை எவையுமே தன்னைத் தொடாதவாறு நாவலர் தம்மைக் காத்து சிறந்த சைவமகனாய் ஆகியே நின்றார். இப்படி அமைந்ததற்கு அடிப்படை காரணம் நாவலர் மனதில் உதித்த நற்பாதை என்றுதான் எண்ண வேண்டி இருக்கிறது.

  சமய குரவர்கள் வரவில்லையேல் எங்கள் சைவம் இல்லாமலே போயிருக்கும். சமயகுரவர்களின் வருகை அக்காலத்துக்கு அவசிய மானதாகவே அமைந்தது.ஐந்தாம் குரவராய் போற்றப்படும் நாவலர் வந்திருக்கா விட்டால் எங்கள் சைவமும் இல்லாமல் போயிருக்கும். அன்னியர் ஆளுகையினால் அவர்களின் மதமான கிறீத்தவம் மேலோங்கும் நிலை காணப்பட்டது. அந்த மேலோங்கலால் எங்கள் சைவம் தன்னிலை இழந்து போகாமல் - நிலைபெறச் செய்தவர் நாவலர் பெருமானே ஆவர்.இதனால் ஐந்தாம் குரவராய் சைவத்தைக்காத்திட நாவலர் அன்னியர் ஆட்சிக் காலத்தில் வந்து அமைகிறார் என்பதுதான் உண்மையாகும்.

  சைவமும் தமிழும் இணைபிரியாதன. சமயகுரவர்கள் தமிழையே மூச்சாக்கி அதன் வாயிலாகவே சைவ த்தின் மேன்மைகளை உணர்ந்திடச் செய்தார்கள். அத்தனையும் திருமுறைகளாக மலர்ந்தன.பண்ணமைந்த தமிழ்ப் பாடல்களாய் மக்கள் மனங்களில் பதிந்து மாற்றத்தை ஏற்படுத்தின. இவையனைத்தும் நாவலர் பெருமான் உள்ளத்தில் நிறைந்தே இருந்தது. சமயகுரவர் காலத்தில் பாடல்கள் மூலமாகவே கருத்துக் களை வெளிப்படுத்துவது வழமையாய் இருந்தது. ஆனால் நாவலர் காலம் அதற்கு உவப்பானதாக இருக் கவில்லை. அதனை நன்கு மனதிற் கொண்ட காரணத்தால் புதுப்பாதை வகுத்து அதன் வழியில் நாவலர் பெருமான் நடக்கத் தொடங்கினார். அந்தப் பாதைதான் வசன நடையாகும்.சைவத்தின் மேன்மைகளை மக்கள் மனத்தில் பதியவைக்க நாவலரின் சிறப்பான வசனநடை கைகொடுத்தது மட்டுமல்லாமல் வெற்றி யினையும் அளித்தது எனலாம்.அவர் தமிழில் வசனத்தைக் கையாண்ட விதத்தைக் கண்ட பரிதி மாற் கலைஞரான தமிழறிஞர் அவரை " வசனநடை கைவந்த வல்லாளர் " என்று வியந்து போற்றினர்.

  கோவில்கள் தோறும்  அடியார்கள் பின் தொடர சமயகுரவர்கள் திருமுறைகளைப் பாடினார்கள். அது அக்காலத் தேவையாய் ஆகியது. ஆனால் நாவலர் தன்காலத்துக்கு எது ஏற்றதோ அதனைக் கையிலெடு த்து - கோவில்களில் தொடர் விரிவுரைகளை அறிமுகமாக்கி நின்றார். நாவலரைத்தான் முதல் மேடைப் பேச்சாளர் என்றும் கொள்ளலாம். தற்போதைய மேடைப் பேச்சுக்கு வித்திட்டவராகவும் நாவலர் பெருமான் வந்தமைகிறார் என்பது கருத்திருத்த வேண்டியதேயாகும்.சைவசமயக் கருத்துக்களைப் புலப்படுத்த புராண ங்களைக் கையிலெடுக்கிறார் நாவலர் பெருமான். புராணங்களை விரிவுரையாக மக்களுக்கு எடுத்து விள க்குகிறார். அவரின் சொல்லாற்றலும் , பேச்சாற்றலும் மக்களை அவர் வசமாக்கி நிற்கிறது. அவர் எடுத்த முயற்சி வெற்றியாய் அமைகிறது. பேச்சுடன் நின்றுவிடாமல் மிகவும் எளிமையான் வசனநடையில் புரா ணங்களுக்கு விளக்கங்கள் எழுதி அவற்றை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கிறார்.அச்சுக்கூடத்தை நிறுவி அதில் சைவ , தமிழ் நூல்களைப் பதிப்பித்து ஒரு புரட்சியினையே செய்து விடுகிறார்.இது அவர் தேர்ந்தெடுத்த நல்ல பாதையாய் அமைகிறது எனலாம்.

  இலவசமாய் கல்வியினை அளிக்கும் புதுப்பாதையினை நாவலர் பெருமான் தொடங்கி வைக்கிறார். படிக்கும் மாணவர்களுக்கான பாட நூல்களைத் தாமே எழுதி அவற்றை அச்சடித்தும் கொடுக்கின்றார். மாணவர்களின் கல்வி உளவியலை மனதிற் கொண்டு நாவலர் பெருமானின் பாடநூல்கள் அமைந்தி ருந்தன என்பதுதான் மிகவும் முக்கியமாகும்.தமிழகத்தில் தமிழ்ப்பாட நூல்கள் அக்காலத்தில் வந்தாலும் - அவையெல்லாவற்றையும் விட நாவலர் பெருமானின் பாடநூல்களே சிறந்தது என்று தமிழ் நாட்டவரா லேயே ஏற்றுக் கொள்ளப் பட்டிருக்கிறது என்பது மனங்கொள்ளத்தக்கதாகும். இலக்கியத்தை , இலக்க ணத்தை, இலகுவாக்கிடும் வகையில் நாவலரின் செயற்பாடுகள் அமைந்திருந்தன என்பதை மறுத்துரை த்து விடல் முடியாது. செய்யுளாய் அமைந்திருந்த இலக்கணத்தை யாவரும் விளங்கும் வகையில் அவர் காலத்தில் வசனநடையில் கொண்டுவந்து கொடுத்தமை நாவலரின் புதுப்பாதைதானே !

  ஐந்தாம் குரவராக விளங்கும் நாவலர் அஞ்ஞா நெஞ்சனாகவும் விளங்கியிருக்கிறார். தம்மை எதிர்கொ ள்ள வந்த அரசின் ஆணையினையே துச்சமாக எண்ணி " நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் " என்று வீரமாய் எதிர்து நின்றவர் சமயகுரவரான அப்பர் பெருமான். அப்பர் வழியிலே நமது ஐந்தாம் குரவரும் நடை பயில்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.தன் கருத்துக்கு ஒவ்வாதவற்றை , நீதிக்குப் பாதிப்பானவற்றை , சமூகத்துக்குப் பொருந்தாவற்றை , சைவத்தைத் தூஷிப்பவற்றை : அஞ்ஞாமல் எதிர் க்கின்ற போராளியாக அதாவது கண்டனக் கதாநாயகனாக நாவலர் பெருமான் விளங்கினார் என்பது உண் மையாகும்.சைவத்தைத் தாழ்த்தியவர்களை எதிர்த்தார். வால்பிடிப்பாரை எதிர்த்தார். உண்மையினை உணராமல் ஊதுகுழலாய் ஆகி நிற்பாரை எதிர்த்தார். போலிச் சைவர்களை, போலிக் கிறீத்தவர்களை, எதிர்த்தார். அதுமட்டுமல்ல சமயம் அறியாத குருமாரையும் சாடினார். கண்டனங்களை சிறு துண்டுப் பிர சுரமாக வெளியிட்டார். அத்தனையும் அவரின் தர்ம ஆவேசத்தையே வெளிச்சமாக்கி நின்றது.கண்டனக் கணைகளை வீறுடன் விடுபவராய் ஐந்தாம் குரவரான நாவலர் பெருமான் இருந்தார் என்பதை யாவருமே ஒத்துக் கொள்ளுவார்கள்.

  குருவினைப் பேணுவதில் பெரும் அக்கறை மிக்கவர் நாவலர் பெருமான். குரு சொல்லினைத் தட்டாமல் விவிலியத்தை மொழி பெயர்த்துக் கொடுத்து - மிகச்சிறந்த மொழி பெயர்ப்பு என்னும் அங்கீகாரத் தையும் வாங்கிக் கொடுத்தார். அத்துடன் அவர் நின்றுவிடுகிறார். விவிலியத்தை மொழிபெயர்க்கும் வகையில் அவர் அந்தக் கிறீத்தவ வேத நூலினை மனத்தில் நன்கு பதித்தவராகவே ஆகியிருக்கிறார். அதனால் சைவத்தை எதிர்க்கும் கிறீத்தவ பிரசாரகருக்கு ஏற்ற மறுமொழியினை அளித்திடும் அறிவாற்றல் நாவலர் பெருமானிடம் நிரம்பியே இருக்கும் நிலை ஏற்பட்டுவிட்டது. தனது சமயத்தையும் , மற்றைச் சமயத்தையும் நன்றாய் அறிந்து உணர்ந்த காரணத்தால் நாவலர் பெருமான் தன் காலத்தில் கதாநாயகனாகவே ஆகி நின்றார் என்பதை மறுத்துரைத்துவிடல் முடியாது அல்லவா !  

    ஆறுமுகம் என்னும் பெயருடன் தமிழகம் சென்றவர் யாழ்ப்பாணம் திரும்பிடும் வேளை " நாவலர் " என்னும் பட்டத்தினைத் தனதாக்கி  ஆறுமுக நாவலர் என்னும் புதுப் பெயருடன் வருகிறார்.நாவன்மையி னை மெச்சி திருவாவடுதுறை ஆதீனம் இப்பட்டத்தை ஈழத்துத் தமிழ்ப் பெரியாரான ஆறுமுகத்துக்கு வழங் கியிருக்கிறது.பட்டம் என்னவோ அவருடன் இணைந்து கொண்டு விட்டது.அது அவருக்கு மிகவும் பொரு த்தமான பட்டமாகவும் அமைந்தது என்பதும் உண்மையாகும்.ஆனால் நாவலர் பெருமான் அதனால் தன்னி லையில் மாற்றமுறவில்லை. தன்பாதை எதுவோ அதன்வழியிலேதான் பயணப்பட்டார்.அவர் விரும்பி இரு ந்தால் ஏதாவது ஒரு ஆதீனத்துக்குக் தலைவராய் ஆகி இருக்கலாம்.ஆளணியுடன் வாழ்ந்திருக்கலாம்.அப் படியான எண்ணம் நாவலர் பெருமானிடம் தோன்றவே இல்லை என்பதைக் கருத்திருத்தல் வேண்டும். யாழ்ப்பாணத்தில் கூட தனியனாகவே நின்று செயற்பட்டார். தன் பெயரிலே சபையோ , ஆதீனமோ நிறுவி டவும் அவர் நாட்டங் கொள்ளவில்லை. "என்கடன் பணி செய்து கிடப்பதே " என்பதே அவர் வகுத்து நட ந்த பாதையாகி அமைந்தது எனலாம்.

தேடிச் சோறுநிதந் தின்று - பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ

  என்று பாரதி முழங்கியதற்கு ஒப்பாய் நாவலர் பெருமானின் செயற்பாடுகள் அனைத்துமே அமைந்திருந் தன என்பதை நாமனைவருமே மனத்தில் பதித்திடல் அவசியாமாகும்.தனக்குச் சரியெனப் பட்டதை யாருக் குமே அஞ்சாமல் செய்து நின்றவர்தான் எங்கள் வரலாற்று நாயகனாகிய ஐந்தாம் குரவர் நாவலர் பெரு மான்.பழமைக்குள் மூழ்கிடாமல் தன்காலத்துக்கு எது உகந்ததோ அதனை மனமிருத்தி செயற்பட்டவர் தான் நாவலர் பெருமான். அதேவேளை மரபினையும் மறந்தாரில்லை என்பதும் நோக்கத்தக்கதாகும். நாவலர் காலத்து நிலைமைக்கு ஏற்ப அவரின் சமயச் சிந்தனை , தமிழ் பற்றிய சிந்தனை, கல்வி பற்றிய சிந்தனை , ஒழுக்கம் பற்றிய சிந்தனை யாவுமே  அமைந்திருந்தது.

  இலக்கணம் , சமயம் , காப்பியங்கள் என்னும் வகையில் நாற்பத்து நான்கு நூற்களைப் பதிப்பித்திருக் கிறார்.இலக்கணம் தொடர்பாகவும் சைவசமயம் தொடர்பாகவும் இருபத்து நான்கு நூல்களை ஆக்கி இரு க்கிறார்.அத்துடன் அமையாது பதினாறு நூல்களுக்கு உரையும் எழுதியிருக்கின்றார்.வியப்பாக இருக்கிறத ல்லவா ? இவ்வளவும் யாருக்காகச் செய்தார் ? யாவுமே மண்ணும் மக்களும் பயனுற வேண்டும் என்னும் உயரிய சிந்தனையால் செய்தார் என்பதுதுதான் உண்மையாகும்.இல்லறத்தினுள் புகுந்து விடாமல் பிரம்சா ரியத்தைக் கடைப்பிடித்து நல்லறமாய் நாவலர் பெருமான் செய்திருக்கிறார் என்பதால் அவர் ஒரு யுகபுரு ஷராகவே விளங்குகிறார் எனலாம்.

  தமிழ் உரைநடையின் தந்தையாய், தமிழ் மறுமலர்ச்சியின் முன்னோடியாய், சுவடிகளை பதிப்பிப்பதிலும் முன்னோடியாய், மிகவும் சிறந்த தமிழ் வசனநடை வல்லாளராய், சைவசமயத்தின் பெருங்காவலராய் , நல்லைநகர் ஒளிவிளக்காய் நவலர் பெருமான் திகழ்ந்திருக்கிறார். சைவத்தையும், தமிழையும், காத்த தோடு சைவத்துக்கு எவையெவை இன்றியமைதானவோ அவற்றையும் காத்திட வைக்கும் வகையில் நல்லை நகர் நாவலர் பெருமான் தன்னுடைய பாதையினை வகுத்து அதன் வழியில் பயணப்பட்டிருக் கிறார் என்பதை மறுத்துரைத்து விடல் இயலாது.ஐந்தாம் குரவராய் அவரை ஏற்றுவதும் , போற்றுவதும், குரு பூசை நடத்தி அவரை உயர்வாகப் பார்ப்பதும் மிகவும் உகந்த செயலே யாகும்.அவர் தேர்ந்தெடுத்து நடந்த பாதைகாரணமாக அவரை இன்று இலங்கையின் தேசியவீரனாக , தேசியப் பெருமகனாக , அரசாங் கமே அங்கீகரித்து நிற்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.முத்திரையில் நாவலர் பெருமான் திருமுகத்தை யாவரும் பார்த்திட வைத்திடும் கைங்கரியமும் இலங்கை அரசினால் ஆகியிருக்கிறது.அனைத்துக்கும் அடிப்படை நாவலர் பெருமான் " நல்வழியைத் தேர்ந்தெடுத்து அதன் வழியில் நடந்ததுதான் "  என்பதே உண்மையாகும்.

நல்லைநகர் ஆறுமுக நாவலர் பிறந்திலரேல்

சொல்லு தமிழெங்கே சுருதியெங்கே - எல்லவரும்
ஏத்து புராண ஆகமங்கள் எங்கே ப்ரசங்கம் எங்கே
ஆத்தன் அறிவு எங்கே அறை. 

No comments: