கற்பகதருவாம் பனையினைக் கருத்தினில் இருத்துவோம் !          

        

                    [ சுவை பத்தொன்பது ]
             


                             

 
 
மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
   மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
   
மெல்பேண் .... அவுஸ்திரேலியா

 



பனையின் நாரைச் சாதாரணமாக எண்ணிய எங்களுக்கு - படுத்து உறங்கவும்

சுகமாக நித்திரை செய்யவும் கட்டிலின் ஆதாரமாய் ஆகி யே வந்திருக்கிறது என்னும் செய்தி - பனையின் நாரின் மீது மதிப் பினை ஏற்படுத்தி நிற்கச் செய்திட வைத்திருக்கிறதல்லவா ! தென் னையினைப் பிள்ளை என்று சொல்லி யே பேணி வளர்க்கிறோம். பனையினை முற்றத்திலோ , வீட்டின் அருகிலோ வைத்திருக்கவே மாட்டோம். ஆனால் தென்னையினை வீட்டைச் சுற்றியே வைத்திரு ப்போம். தென்னை மரங்கள் சூழவுள்ள தென்னந் தோப்புக்குள் வீடுகளை அமைத்து மகிழ்ந்திருப்போம். அதேவேளை பனந்தோப்புக்குள் வீடமைத்து இருப் போமா என்பது கேள்விக்குறியாகும். தென்னையி னைப் பேணும் அளவுக்கு பனையினைப் பேணுகிறோமா என்று எண் ணிப்பார்த்திட வேண்டும். ஆனால் இதைப்பற்றியே பார்க்கும் நிலை யிலே இல்லாமல் , பனையானது மிகவும் தாராளமாய் கொடுக்கும் அத்தனையையும் கொடுத்துத் திருப்தியடைந்த படியே இருக்கிறது. இதனால்த்தான் " மாநில மரமாய் " நிமிர்ந்து நிற்கிறது என்பது கரு த்திருத்த வேண்டிய விடயமெனலாம்.


படுத்துறங்கக் கட்டிலாய் அமையும் பனை நார் , இருக்கவும் பல வகையில் கதிரைகளுக்கு ஆதாரமாய் அமைகிறது.பனை நார் நாற் காலிகள் - சாய்வு நாற்காலிகள், கைப்பிடியுள்ள நாற்காலிகள்,சுழல் நாற் காலிகள் , என்று பல வகைகளாய் அமைந்து மக்களின் பயன் பாட்டுக்குக் கைகொடுத்து நிற்கிறது.

அதுமட்டுமல்லாமல் - லொறிகள், பேருந்துகள், ஓட்டுநரின் இருப்பிடமாகவும் பயனாகி நிற்கிறது. பனை நாரினால் செய்யப்படும் இருக்கைகள் நீண்ட தூர பயணத்தில் ஓட்டுநர்களுக்கு மிகவும் செளகரியமாக அமைகிறது. நீண்ட தூரப் பிரயாணமோ அல்லது தொடர்ந்து- நிதமும் பிரயாணம் செய்யும் பொழுது வாகனங்களின் இயந்திரத்தின் சூடும், தொடர்ந்து ஒரே இருப்பிடத்தில் அமரும் பொழுது ஏற்படும் சூடும் தணிப்பதற்கு , பனை நாரினால் ஆகிய இருக்கைகள் மிகவும் பொருத்தமானதாகவே இருக்கிறது.பனை நாரினால் ஆகிய இருக்கைகள் மிகவும் பாதுகாப்பானவை. அத்துடன் உடல் ஆரோக்கியத்துக்கும் உகந் தவை என்பது முக்கியமாகும். இன்று செயற்கை நாரான பிளாஸ்டிக் முன்னணிக்கு வந்து இயற்கையான பனை நாரினைப் புறந்தள்ளி விடும் நிலைக்கு

வந்திருக்கிறது. செயற்கை நார்கள் பார்ப்பதற்குக் கவர்ச் சியாய் இருந்தாலும் , இயற்கையான பனை நாரின் ஆரோக்கியத்துக்கு எந்த வகையிலும் ஈடாகாது என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை என்றுதான் சொல்ல வேண்டும்.

முதலாம் நிலையில் நிற்கின்ற அகணி நார் மிகவும் வலிமை மிக்கதால்த்தான் கட்டிலுக்கும் இருக் கைகளுக்கும் கைகொடுத்து நிற்கிறது.இதன் வலிமையினைக் குறித்து " ஆயிரம் அகணியால் கட்டிய வீட்டுக்கு ஆனையின் பலம் " என்று சொல்லும் ஒரு வழமையும் பழக்கத்தில் இருந்து வருகிறது.அது மட்டுமல்ல - " நார் முடி சேரல் " என்று தமிழ் மன்னனக்குப் பட்டம் சூட்டிப் பெருமைப் பட்டதாகவும் அறியமுடிகிறது.இதன்படி பார்க்கும் பொழுது பனை நாரை கிரீடமாய் அந்த மன்னன் அணிந்திருக்கிறான் என்பது தெரிய வருகிறதல்லவா. மன்னனின்

முடியாயும் இருக்கும் மகத்துவத்தைப் பனை நார் பெற்றி ருக்கிற தென்றால் - பனை மட்டையையோ , பனை நாரையோ சாதாரணமாகக் கருதிவிடல் கூடாது என்பதைக் கருத்திருத்தல் கட்டாயமாகும்.

முதலாம் நிலையில் வைக்கப்படும் அகணிநார் உரித்து எடுக்கப்பட்ட பின்னர்தான் இரண்டாம் தரத்தில் இருக்கும் புறணி நார் எடுக்கப்படுகிறது.முதலாந் தரம் எடுக்கப்பட்ட பனை மட்டையினை நிமிர்த்திப் போடாமல் குப்புறப் போட போடப்படுகிறது. அதன் பின்னர் கத்தியைக் கொண்டு மட்டையினது குறுக்காக மூன்று அங்குல அகலத்துக்குக் கிழித்தெடுக்கப்படுகிறது.கிழித்து எடுக்கப்பட்டு வரும் நார் மெதுவாக வார ப்படுகிறது.அப்பொழுது இரண்டாம் தரமுடைய புறணி நார் வருகிறது.வார்ந்து எடுக்கப்படும் நார் உலர வைக்கப்படுகிறது. உலர்ந்த நிலையில் இருக்கும் அந்தப் புறணி நாரினை சத்தகம் என்னும் கத்தி கொண்டு ,நாரின் உட்புறத்தில் காணப்படும் சோத்திகள் நீக்கப்படுகிறது . சோத்திகள் நீக்கப்பட்ட பின் , அந்த நார்

பிரம்பினால் வருகின்ற நாரைப் போல தோற்றத்தை அளித்து நிற்கும்.

இந்தப் புறணி நார் பல நிலைகளில் கைத்தொழிலுக்கான மூலப் பொருளாய் அமைகிறது என்பதும் குறிப்பிடப்பட வேண்டிய விடய மெனலாம். பலவித மான கூடைகள் செய்வதற்கு இந்த நார் கைகொ டுத்து நிற்கிறது.

கடகம் என்பது பல அளவுகளில் அமைகிறது.இதில் நாரின் பயன்பாடு மிகுந்த கடகமும் இருக்கிறது. பனை ஓலையினால் பின்னப்பட்டாலும் , பனை நாரின் முக்கிய இடத்தால்த்தான் இந்தவகைக் கடகம் சிறப்பானதாய் வந்தமைகிறது. பனை ஓலையினால் இளைக்கப்படுவதையும் கடகம் என்றுதான் பொது வாகச் சொல்லுவது வழக்கம். ஆனால் அதில் பனை நார் வந்து சேரும் பொழுது அது நார்க்கடகம் என் னும் பெயரால் அழைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத் தக்கதேயாகும்,


பதினெட்டு அங்குல வாய் விட்டமும் ஒன்பது அங்குல உயரமும் கொண்டதாய் நான்கு மூலைகளை உள்ளடக்கியதாய் பனை ஓலையினால்த்தான் இக்கடகம் முதலில் வந்து அமையும். இப்படி பனை ஓலை யினால் இழைக்கப்படும் கடகம் வலிமை குறைந்ததாகவே காணப்படும். இவ்வாறு இழைக்கப்பட்ட கடக த்தின் வெளிப்பகுதியில் நார் வந்து துணையாக அதுவும் நல்ல துணையாக வந்து கைகொடுத்து நிற்கும். ஏற்கனவே இழைக்கப்பட்ட பனை ஓலைக் கடகத்தின் வெளிப்பகுதி பனை நார் கொண்டு மீண்டும் இரண் டாம் முறை இழைக்கப்படுகிறது. பனை நார் கொண்டு மீண்டும் இழைக்கப்படுவதற்கு முக்கியமான காரணம் என்ன வென்றால் கடகத்துக்கு வலிமையினை ஊட்டுவதேயாகும்.

அப்படி நாரினால் உறிதியாக்கப்பட்டு வரும் பொழுதுதான் அது " நார்க்கடகம்

என்னும் பெயரினைப் பெற்று நிற்கிறது, இந்த நார்க்கடகம்தான் கட்டுமானப் பணிகளின் பொழுது மிகவும் பயனை நல்கும் விதத்தில் உதவி நிற்கிறது எனலாம்.கல்லை, மண்ணை சுமந்து செலுவதற்குக் கைகொடுக்கும் கடகமாய் இந்த நார்க்கடங்களே வந்து நிற்கின்றன.சாதாரண கடகங்களைவிட இக்கடங்கள் நீண்ட நாட்களுக்குப் பயன்கொடுத்து நிற்கும் என்பதை மனமிருத்துவது முக்கியமாகும். சாதாரண கடகங்கள் விலையை விட இந்த வகையான கடகங்கங்கள் சற்று கூடிய விலையில்தான் விற்கப்படுகின்றன.செயற்கையான பொரு ட்கள் வந்தாலும் இந்தவகை நார்க்கடகங்கள் இன்றும் பயன்பாட்டில் இருக்கின்றன என்பதும் நோக்கத் தக்கதாகும். எங்களின் சொத்தான பனையின் கொடையான நாரையும் ஓலையினையும் விட்டுவிடுவது பொருத்தம் இல்லாத செயலன்றோ ! நார்க்கடகங்களைக் கைவிடுவதால் அத்தொழிலில் ஈடு படுகின்ற தொழிலாளர்களும் நலிவடைவார்கள் அல்லவா ! அவர்களும் நம்மவர்கள் அல்லவா !


பனை நார் என்றதுமே பட்டங்களும் கண்முன்னே வந்து நிற்கின்றன.பட்டங்கள் விடுவதே பெரிய திரு விழாதான்.பட்டத்தை விரும்பாதவர்கள் இருக்கவே மாட்டார்கள்.



" பட்டம் விடுவோம் பட்டம் விடும்வோம் பாலா ஓடிவா

பாடிப்பாடி பட்டம் விடுவோம் பாலா ஓடிவா "


என்னும் பாட்டை நினைத்துப்பாருங்கள்.நாங்கள் படித்த பாடப் புத்தகங்களிலேயே இந்தப் பாட்டு இடம் பெற்றிருந்ததை நினைவூட்டிப் பாருங்கள். பட்டம் என்றாலே சிறியவருக்கும் விருப்பம். பெரியவர்களு க்கும் விருப்பம்.காற்றுக் காலங்களில் பெரிய வெளிகளைத் தேடி ஓடி பட்டங்களை விட்டோம் என்பதை யும் எண்ணிப் பாருங்கள். கொக்கன், பிராந்தன், எட்டு

மூலை, பாம்பன், என்று பட்டங்களை விடுவோம். இவற்றுடனெல்லாம் பனை நாரும் கூடவே நின்றிருந்தது என்பதுதான் முக்கியமாகும்.

பட்டங்களை அமைக்கும் பொழுது அதில் அழகினைச் சேர்த்திட வித்தியாசமாய் சிந்திந்து செயற் பட்டதையும் நினைத்துப் பார்த்திட வேண்டும்.படங்கள் பறந்து செல்லும் பொழுது தனித்துவமான ஒரு ஒலியினை எழுப்பி நிற்கும் வண்ணம் பட்டத்தை வடிவமைத்தார்கள். அப்படித்தனித்துவமாய் வருகின்ற ஒலியினை " விண் கூவுதல் " என்று பெயரிட்டு அழைத்ததை மனமிருத்திப் பார்த்தால் அந்தக் காட்சி மனதிலே படமாய் ஓடி நிற்கும்.இப்படி அமையும் விண் கூவும் பட்டம் என்பது தனித்துவமானதாகும். பனை மட்டையிலிருந்து உரித்து எடுக்கப்படும் நாரினை நெருப்புச் சூட்டில் அளவாகக் காட்டி விட்டு அந்த பனை நாரினை பட்டத்தின் பின்புறத்தில் இணைத்து விடுவார்கள். பட்டம் வானில் பறக்கும்போது - பட்ட த்துடன் இணைக்கப்பட்ட பனை நாருடன் காற்று உராயும் பொழுது நல்லவொரு ஒலி அங்கே ஏற்படும். இதைத்தான் " விண்

கூவுதல் " என்கிறோம். விண் கூவும் பட்டம் - வானில் பறக்கும் பொழுது , அப்பகு தியில் இருப்பவர்களை , அப்பகுதியால் போய் வருபவர்களை கட்டாயம் தலை நிமிர்ந்து பார்த்திடவே வைத்திடும்.மண்ணிலிருந்து விண்வரை பனை நார் வியாபித்திருக்கிறது என்றால் நாமனைவரும் பனை யையும் அதன் பயனான பனை நாரையும் வியந்து பார்த்திடாமல் இருக்கதான் முடியுமா !

நடக்கும் பொழுது பாதையில் இருக்கின்ற கல்லோ, முள்ளோ , எமது காற்பாதங்களைப் பாதிக்காமல் இருப்பதற்கு , பாதுகாப்பின் பொருட்டாகவே காலணிகள் கண்டு பிடிக்கப்பட்டது. தோலினால் ஆகிய கால ணிகள் கி. மு. 8,000-ம் ஆண்டு முதலே பயன்பாட்டில் இருந்து வந்திருக்கிறது என்பது தொல்லியல் கண்டு பிடிப்பின் வாயிலாக அறியக் கூடியதாக இருக்கிறது.காலின் பாதுகாப்பினைக் கருத்திற் கொண்டு தமிழ் நாட்டில் அந்த நாளில் - குமரி மாவட்டத்தில் இருந்தவர்கள் , பனை ஓலையினைப் பயன்படுத்தி காலணி களை உருவாக்கி அணிந்தார்கள் என்றும் அறியக்கிடக்கிறது.இத்தகைய காலணிகள் பெரியவர்களுக்கும், சிறியவர்களுக்கும் பொருந்திவரும் வகையில் செய்யப்பட்டன என்பது குறிப்பிடப்படவேண்டிய விடயம் எனலாம்.பனை நார் பற்றிச் சொல்ல வந்து விட்டு - பனை ஓலைக்குள் போய்விட்டதாக எண்ணிவிடாதீர் கள். பனை ஓலையினால் உருவாக்கப்பட்ட காலணிகளைக் கட்டிக் கொள்ளுவதற்குக் கைகொடுத்தது எது தெரியுமா அதுதான் " அகணி நார் ".
மண் சுமப்பவர்கள், சந்தைக்குப் பொருட்களைத் தலைச் சுமடாக எடுத்து வருகின்றவர்ககள் அப்பகுதியில் பனஞ் செருப்பினை அணிந்து பயன் பெற்றிருக்கிறார்கள்.பயன்படுத்தும் பொழுது பிய்ந்து விட்டால் புதிய செருப்பினைப் பெற்றுப் பயன்படுத்தும் வாய்ப்பும் நிறையவே இருந்திருக்கிறது.மூலப் பொருளைத் தேடி ஓட வேண்டிய அவசியமே இல்லை அல்லவா ? அருகில்தானே மூலப்பொருள் குவிந்துபோய் கிடக்கிறது. இந்தவகையான செருப்பினை அணிந்து கொண்டு இரு சக்கர வாகனத்திலும் பயணிக்கலாம் என்னும் செய்தியும் மனதுக்கு மகிழ்ச்சியாய் இருக்கிறதல்லவா !

காலைக் கடிக்கும் செருப்புகள் பற்றி யாவரும் அறிவோம்.ஆனால் காலை ஒருபோதுமே கடிக்காத செருப்புத்தான் இந்தப் பனஞ்செருப்பு. அகணி நாரால

கட்டப்படும் பொழுது கால்களுக்கும் நல்ல இதமாயும் பதமாயும், இச்செருப்பு அமைகிறது.செயற்கை முறையிலான பிளாஸ்டிக் செருப்புகளுக்குப் பதிலாக இச்செருப்புகளை அணிவதை அனைவரும் எண்ணிப் பார்க்கவேண்டும்.நவநாகரிகத்துக்கு ஒத்துவரமாட்டாமல் இருந்தாலும் - இச்செருப்பை அணிவதால் எவ்வித பாதிப்பும் கால் பாதங்களுக்கு வந்துவிடாது என்பதை மனமெண்ணிப் பார்த்திடல் வேண்டும். பனை ஓலைச் செருப்பு இன்றும் பயன் பாட்டில் இருக்கிறதா என்று கேட்க நினைக்கிறீர்களா ? குமரி மாவட்டத்தைச் சேர்ந்த அருணாசலம் என்பவர் பனஞ் செருப்பினைச் செய்து விற்பனைக்கு விடுகிறார்.தமிழ் நாட்டில் திருநெல்வேலி மாவட்ட த்தில் ஏரல் என்னும் பகுதியில் இருக்கின்ற மக்கள் சிலர் பனஞ் செருப்பினைப் பயன்பாட்டில் வைத் திருக் கிறார்கள். நாட்டார் தெய்வ வழிபாடுகளில் இந்த மக்கள் ஆர்வ முடையவர்கள். அந்த வழிபாட்டினைப் பக்தி பூர்வமாக அவர்கள் செய்து வருகிறார்கள். அந்தத் தெய்வங்களுக்காக அவர்கள் நோன்பு இருக்கும் காலங்களில் பனஞ் செருப்புகளையே பயன்படுத்துகிறார்கள் என்பது குறிப்படப்படவேண்டிய விடய மென லாம்.பனஞ் செருப்பு என்பது எங்கள் கலாசாரத்தின் அடையாளம் அல்லவா ! அந்தப் பனஞ் செருப்பி னைப் பிணைத்திருக்கும் பனை நாரும் எங்களின் பண்பாடுதான் அல்லவா !

.

No comments: