கற்பகதருவாம் பனையினைக் கருத்தினில் இருத்துவோம் ! [ சுவை ஐந்து ]


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
 மெல்பேண் ... அவுஸ்திரேலியா


உருக்கு வாளேந்திப் பகைசெற் றுலகினை

ஓம்பும் மணிமுடி மன்னவன் போல்

கருக்கு வாளேந்திக் கலியை அழித்திந்தக்

காசினியைக் காக்கும் ஞானப் பெண்ணே


  பெண்பிளையும் தண்பனையும் பேணி வளர்த்தால்
     வருடம் பண்ணிலொரு பத்தில்  பயன் கொடுக்கும் "

  "  நட்டாயிரம் வருடம் நாநிலத்தில் காய்த்து நிற்கும்

       பட்டாயிரம் வருடம் பாழ்போகா "

    " திங்கட் குடையுடைச் சேரனும் சோழனும்

      தென்னவனும் ஓளவை சொற்படியே
       மங்கல மாயுண்ட தெய்வப் பனம்பழம் "

        " முப்பாசந் தீர்த்த முனிவர்மொழி வாய்மைபோல்

           எப்போதும் நின்று பயனீயும் "

 


கறுத்து நிமிர்ந்து உரமேறி உயர்ந்து வான்பார்த்து நிமிர்ந்து நிற்கின்ற கற்பகதருவாம் பனை பற்றித்தான் இப்பாடல்கள் வியந்து நிற்கின்றன. கூரையாய்வேலியாய்படலையாய்மனித உணவாய்கால்நடைத் தீனியாய்,பாயாய் படுக்கையாய் அலங்காரப் பொருட் களாய்ஏடாய் காவலாய்மருந்தாய்விருந்தாய்பண்பாட்டின் அடை யாளமாய்  , என்று பல நிலைகளில் தன்னைப்  பயனாக்கி முடியாத கட்டத்தில் விறகாக நின்று பெருங் கொடை யினை நல்கிடும் " நவீன கர்ணனாய் " எங்களின் கற்பகதருவான பனை விளங்குகிறது என்பதைக் கருத்திருத்தல் அவசியமாகும்.

  கற்பகதருவாம் பனையின் வரலாறு மிகவும் தொன்மையானது எனலாம். திவாகர நிகண்டில் பனை பற்றிய பெயர்கள் தொகுத்துக் காட்டப்பட்டிருக்கி றது.தமிழின் முதுபெரும் சொத்தான தொல்காப் பியத்தில் - மடல்ஓலைஏடுபாளைஈர்க்கு, குலை போன்ற சொல்


லாடல்களைக் காணமுடிகிறது.தமிழ்ப் பிராமிக் கல்வெட்டுகள் கிறித் துவுக்கு முற்பட்டதாகும். அக்கல்வெட்டிலும் பனை என்னும் சொல் இடம் பெற்றிருக்கிறது என்றும் அறிய முடிகிறது.

   தமிழ் மன்னர்கள் பனையினைப் பேணி வந்திருக்கிறார்கள் என்றும் வரலாற்றால் அறிய முடிகிறது. பொருளாதார மேம் பாட்டுக்குப் பனை பேருதவியாக அமைந்திருக்கிறது.சோழ மன்னர்கள் பனையினை எல்லைப் புறங்களில் வளர்ப்பதற்கு ஊக்கங்கங் கொடுத்திருக்கிறார்கள்.

மாவும் பலாவும் கமுகும் பனையுங் கொடியும் உள்ளிட்ட பல்லுருவில் பயன் மரம் இடவும் நடவும் " என்று சோழர்காலத்துச் செப்பேட்டில் காணப்படுகிறது. " பயன் மரம் " என்னும் நிலையில் பனை இடம் பெற்றிருப்பது கருத்திருத்த வேண்டிய விடயம் அல்லவா !

  பனையின் கொடையாக அமைவது நுங்கு.அதன் சுவையினை


அருந்தியவர்கள் உணருவார்கள். அறி யாதார் சுவைத்தால் அதன் அருமை அகம் அமரும்.நுங்கினைச் சுவைத்த பின்னர் வெட்டப்பட்ட இரண்டு நுங்கின் பாதிகளை ஒரு குச்சியால் இணைத்து அதன் நடுவில் கவரான நீளமான குச்சியைப் பயன்படுத்தி வண்டிலாய் ஓட்டிச் சிறுவர்கள் மமிழ்ந்தார்கள்,தெருத் தெருவாய் இதனை உருட்டி மகிழ்வது ஒரு விளை யாட்டாக இருந்திருக்கிறது. இதனை இன்றைய இளைய தலைமுறையினர் அறிந்திருக்க மாட் டார்கள். பெரியவர்களில் எத்தனை பேருக்கு இந்த விளையாட்டு நினைவில் இருக்கிறதோ தெரியாது ! ஆனால் இந்த விளையாட்டு பழைய காலத்தில்  விளையாடப் பட்டிருக்கிறது என்பதனை -

பெருமடல் பெண்ணைப் பிணர்ந்தோட்டு குடவாய்க்

  கோடிப் பின்னல் வாங்கித் தளரும் பைங்குரும்பை " 

என்று கலித்தொகை காட்டுவதும் நோக்கத்ததாகும்.

  வேரிலிருந்து பனையின் பயன்கள் பல்கிப் பெருகியே


இருக்கின்றன. இதனால்த்தான் கற்பகதரு என்னும் அடைமொழியே ஏற்பட்டது எனலாம். பழைய காலத்தில் ஊர்கள்தோறும் பல குளங்களை வெட்டினார்கள் .குளங்களை வெட்டினால் மட்டும் நீர் மட்டம் உயர்ந்து விடாது.நீர் மட்டம் உயர்வதற்குச் சில மரங்கள் உதவியாய் அமைந்தன. அப்படியான மரங்களுள் ஒன்றுதான் எங்கள் கற்பகதரு வாம் பனை ஆகும்.குளங்களைச் சுற்றி ஆயிரக் கணக்கில் அக்காலத்தில் பனை மரங்களை வளர்த்தார்கள். பொதுவாக எல்லா மரங்களுமே வேர்களைப் பக்கவாட்டில் மட்டுமே பரப்பக் கூடியன. ஆனால் பனைமரம் மட்டுமே வேரினை செங்குத்தாக நிலத்தின் உள்ளே செலுத்தி வளரும். பனையின் வேர் செங்குத்தாக நிலத்தடியில் காணப்படும் நீரினை நோக்கியே செல்லும்.நீரை நோக்கி நேராகச் செல்லும் குழாய் போல பனையின் வேர்கள் அமைந்திருப்பதால் - நிலத்தடியில் உள்ள நீரை தரைப் பகுதிக்கு கொண்டு வரும் நீர்ப்பாசனப் பொறியாளராக பனையின் வேர் விளங்கி நின்றது.பனையின் வேரின் இந்தப் பெருஞ்செயலினால் நீரானது குளங்களில் நிரம்பவும்நிலத்தில் வழிந்தோடவும்,ஆறுகளில் நீர் நிறையவும் வழிவகுத்து நிற்கிறது எனலாம். பனையால் ஏற்படும் நீர்

முகாமைத்துவத்தை அறிவது அவசியம் அல்லவா ! புயலினின்றும் பாதுகாப்பினை அளிக்கவும் பனைகள் உதவியாய் இருக்கின்றன. வெள்ளப் பெருக்கைத் தடுக்கும் நிலையிலும் பனைகள் கைகொடுத்திருக்கின்றன. நாட்டின் பாதுகாப்பு அரணாய் அக்காலத்தில் பனை மரங்களை எல்லைகளில் நட்டு வைத்தார்கள் என்பதையும் அறிய முடிகிறது.

  பத்துப்பாட்டு என்கிறோம். எட்டுத்தொகை என்கிறோம். மேற்கணக்கு கீழ்க்கணக்கு என்றெல்லாம் சொல்லுகிறோம். காவியங்கள் என்கி றோம் . இதிகாச புராணங்கள் என்கிறோம்.ஐம்பெரும் காப்பியங்கள் என்று பெருமையுடன் அழைகின்றோம். இவை அத்தனையும் எங்க ளுக்கு இன்று கிடைத்திருக்கிறது என்றால் அதற்குக் காரணமாய் அமைந்தது கற்பகதருவாம் பனை என்பதை மட்டும் மறந்து விடக் கூடாது. ஆழ்வார் பாடல்களோ நாயன்மார் பாடல்களே சோதிடம்வைத்தியம் தொடர்பான விஷயங்களோ எங்களுக்குக் கிடைத்திருக் கிறது என்றால் அதற்கு


அருந்துணையாய் அமைந்தது பனைதான் என்பதை எவருமே மறுத்துரைத்து விட முடியாது. பனைக்கும்  இலக்கியத்துக்கும் என்னதான் இருக்கிறது என்று எண்ணுகிறீர்களா பனை இல்லாவிட்டால்  - நாங்கள் பெருமைப்படுத்திக் காட்டிக் கொண்டிருக்கும் அத்தனையும் எப்பவோ மறைந்திருக்கும். ஆனால் அவற்றை எல்லாம் எங்கள் பரம்பரைக்கே அளித்த பெருமை பனையின் கொடையான பனை ஓலைக்கே " உரித்தாகும். ஏட்டில் எழுதப்படா விட்டால் நாங்கள் எல்லாவற்றையும் இழந்திருப்போம். பனை என்பது மரம் அல்ல ! அது வரமாகும் ! பனை ஓலையினை நாம் சாதாரணமாக எடை போட்டு விடக் கூடாது. செய்திகளைப் பறிமாறப் பயன்பட்டது பனை ஓலைதான். இதலனால்த்தான் ஓலை எழுதுதல் திருமணப் பட்டோலை எழுதுதுதல்என்னும் வழக்கும் வந்தது எனலாம். இன்று பல இடங்களில் "பட்டோலை " எழுதுதல் என்பது நடைமுறையில் இருப்பதும் நோக்கத்தது.

  ஏட்டில் எழுதப்பட்ட வேளையில் - அவ்வோலைகளுக்குக் கென்று தனித்த விசேடமான பெயர்களும் இருந்திருக்கின்றன. திருமணத் துக்கு அனுப்பப்படும் ஓலை,இறப்பினைத் தெரிவிப்பதற்கான ஓலைக்கு " நீட்டோலை " என்னும் பெயரும் - படி அதாவது நகல் எடுத்து நிற்கும் ஓலைக்கு " மூல ஓலை " என்றும்ஆவணங்கள் இடம் பெற்ற ஓலைக்கு " சுருள் ஓலை " என்றும் எந்தவித பழுதுமில்லா ஓலைக்கு " குற்றமற்ற ஓலை " என்றும் செய்தி களைக் குறிக்கும் ஓலைகளுக்கு " நாளோலை " என்றும் அரச ஆணையினைத் தாங்கிவரும் ஓலைகளுக்கு " திருமந்திர ஓலை "


என்றும் அக்காலத்தில் அழைக்கப்பட்டது. திருமணம் இறப்புக்கு " நீட்டோலை " என்னும் பெயர் பயன்படுத்துப்பட்டாலும் அவற்றுக்குக் கென்று தனி ஓலைகளும் இருந்திருக்கின்றன. " மணவினை ஓலை " திருமணத்தையும் - " சாவோலை " இறப்பையும் காட்டிட அமைந் திருந்தது என்பதை அறிகிறோம்.

நீட்டோலை வாசியான் நின்றான் குறிப்பறியான்

   மாட்டாதவன் மரம் "  -

ஆவீன மழை பொழிய இல்லம் வீழ ...... என்னும் பாட்டில் ..... " சாவோலை கொண்டொருவன் முன்னேவர " என்று வருவது - ஓலை பற்றிய நிலைக்கு எடுத்துக்காட்டுகளாய் இருக்கிறது அல்லவா.

  எங்களின் முன்னோர் தங்களின் மனத்தெழுந்த பல அறிவுக் கருவூலங்களை எல்லாம் - தமக்குப் பின்னால் வருகின்ற பரம் பரையும் அறிய வேண்டும் என்பதற்காக - எடுத்துக்கொண்ட அளப்பரும் பணிதான் ஏட்டில் யாவற்றையும் எழுதி வைத்தமை எனலாம். அவர்கள் அகத்தில் மட்டும் இவ்வரிய சிந்தனை ஏற்ப ட்டிருக்கா விட்டால் நாம் பலவற்றை இழக்கும் நிலைக்கு ஆளாகி யிருப்போம் என்பதை மனமிருத்தல் அவசியமாகும்.களி மண்ணில் எழுதினால் காலத்துக்கும் நிற்காது. கற்களில் எழுதுவது பெருங் கடினமாகும். மரப்பட்டைகளும் நின்று நிலைக்காது. விலங்குகளின் தோல்களில் எழுதுவது அறத்துக்கு ஒவ்வாதததுஎனவே இலகுவாய் கிடைப்பதும் பெருஞ் சிரமம் இல்லாததுமான பனை ஓலையினைத் தேர்ந்தெடுத்தார்கள். அவர்களின் அந்த அறிவு பூர்வமான செயலினை எவ்வளவு பாராட்டினாலும் தகும் எனலாம். காகிதத்தில் அச்சடிக் கப்பட்ட நூல்கள் வந்தாலும் இன்றும் பழைய ஏட்டுச் சுவடிகள் கால த்தையும் கடந்து நிற்கின்றன என்றால் எங்களின் முன்னோர்களை கட்டாயம் கருத்திருத்த வேண்டியது அவசியம் அல்லவா !

  ஓலைச் சுவடிகளைத் தயாரிப்பது சற்றுக் கடினமானதுதான். மிகவும் கவனமாய் அதனைக் கையாழுதல் வேண்டும்.எல்லாப் பனையின் ஓலைகளையும் ஏட்டுக்குப் பயன்படுத்திட முடியாது. " கூந்த பனை " என்னும் பனையின் ஓலையே ஏட்டுக்கு ஏற்றதாக அமைந்திருந்தது. இதனை " தாழிப்பனை " என்றும் அழைத்தனர். இந்தவகையான பனை மரங்கள் சற்று வித்தியாசமானவை. ஏனைய பனை மரங்கள் போல் இவைகள் இருக்க மாட்டா. இந்த வகையான பனைகள் வாழ்நாளில் ஒரே ஒரு முறைதான் பூக்கும் தன்மை வாய்ந்தனவாம். இந்தப் பனைகள் அறுபத்து ஐந்து அல்லது எழுபது ஆண்டுகள் சென்ற பின் தான் பூக்கும். ஒரு முறை பூத்த பின்னர் இவ்வகைப் பனைகள் காய்ந்து விடுமாம். ஏடுகள் எவ்வாறு தயாரிக்கப்பட்டன ! ஏடுகளில் எவ்வாறு எழுதினார்கள் ! ஏடுகளை எவ்வாறு பேணினார்கள் என்பதையெல்லாம் அறியும் ஆவல் எழுகிறதா விரைவில் ஏடுகளைத் தேடுவோம் !

 

                                     ( இன்னும் வரும் )

No comments: