சாதுக்களின் சாணக்கியம்: பொன் குலேந்திரன்



காலத்தோடு மாறும் மதம் கலந்த
அரசியல், சாணக்கியம்,
இன்று புது பரிணாமம் எடுக்கிறது.
இதை இந்தியா, இலங்கையில் காணலாம்
மதம் என்பது ஒரு போதை மருந்து,
காரல் மார்க்ஸ் சொன்னது உண்மை.
சிங்களம் மட்டுமே என்ற பிக்கு,
ஒப்பந்தங்களை கிழித்து எறிந்த பிக்கு,
இப்போ தமிழ் மேல் தோன்றிய திடீர் பற்றினால்
கல்முனையில் தனித்தமிழ் பிரதேசம் கேட்டு
உண்ணாவிரதம் இருக்கிறான் சாது .
வடக்கும் கிழக்கும் ஓன்று இணைய,
சாது உண்ணாவிரதம் இருக்கலாமே,
செய்வானா?
சமூக ஊடகங்ளில் சாது
தமிழ் பேசுகிறான்.
கையிள் ஐ போனுடன்.
போஸ் கொடுக்கிறான்.
காலம் போனால்.
வேஷ்டியும் சால்வையும் அணிவான்
கைதட்டுவார்கள் லாபம் தேடும்
தமிழர்கள் ஒரு சிலர்.
தமிழ் கோவில்களை இடித்தவன்,
இந்து மதமும் புத்தமும்
இப்போ ஓன்று என்கிறான்.
கதிர்காமம் இந்து புத்தர் கோவில் என்கிறான்.
விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் என்றவன்
இப்போ அவர்களுக்குப் புகழ் மாலை சூட்டுகிறான்
புத்த பிக்குகளின் நல்ல சுத்துமாத்து
தமிழர் காதுகளில் பிக்கு பூ வைக்கிறான்.
எமாற்றப் படுகிறார்கள்
சிந்திக்கத் தெரியாத தமிழர்கள்.
புத்த பிக்குகளுக்கு தமிழர் மேல்
என்ன அப்படி திடீர் கருணை.?
புத்தர் சிலைகளை கோவில்களில் வைத்து விட்டு
தமிழர் காணிகளை ஆக்கிரமித்து விட்டு.
தமிழ் இனக்னக்கலவரங்களை தோற்றுவித்தவர்களை
சாது என்று சொல்ல அவர்கள்
அவர்கள் சாதுவானவர்கள் அல்லவே.
தமிழ் பேசும் இரு இனங்களைப் பிரிப்பதே
சாதுக்களின் சாணக்கியம்
பிரிட்டிஷின் பிரித்து வாழ்ந்த கொள்கையை
சாதுக்கள் இப்போ பின் பற்றுகிறார்கள்.
வெள்ளையனை தூற்றிய பின் .
சிறுபான்மை இனங்கள் ஓன்று சேர்ந்தால்,
தமது புத்த ஆட்சிக்குப் பங்கம் என்று
சாதுக்குத் தெரியதா என்ன ?
வேகத்தோடு இயங்குகிறது
புத்த பலத்தின் வேகம்
பொன் குலேந்திரன் (கனடா)
நன்றி வண்ணக்கம்london.
Posted in இலக்கியச் சாரல்Tagged 















No comments: