பேட்டை பார்த்தேன். - செ .பாஸ்கரன்


Image may contain: 1 person, smiling, closeup

.

நேற்று நானும் பெட்டை பார்த்தேன் மன்னிக்கவும் பேட்டை பார்த்தேன். ரஜனியின் படம் என்றாலே திரை அரங்கிற்கு காசைக் கொடுத்து தலையிடியை வாங்க விரும்பாமல் போவதை தவித்துக் கொள்வேன். இம்முறை மிக ஆவலாக போனதற்கு காரணம் கார்த்திக் சுப்புராஜ் என்ற இயக்குனர்.
முன்பெல்லாம் நடிகருக்காக இல்லாமல் இயக்குனர்களுக்காக படம் பார்த்த காலம் இருந்தது. பீம்சிங், ஸ்ரீதர் , பாலுமகேந்திரா, பாரதிராஜா, மகேந்திரன் என்று. இப்ப இயக்குனர் மார் கூடி குப்பை கொட்டிக்கொண்டிருக்கினம் . அண்மைகால வரவுகளில கார்த்திக் சுப்புராஜ் , மிஸ்கின், வெற்றிமாறன் போன்ற இயக்குனர்கள். சின்ன நம்பிக்கை காட்டினார்கள்.
அதால தம்பி கார்த்திக் சுப்புராஜ் அண்ணா ரஜனிய என்ன ஆட்டு ஆட்டப் போறார் எண்டு நினைச்சுக்கொண்டு போனான் மனசில பாரதிராஜா சிவாஜிய முதல் மரியாதையில புளிஞ்சது போல இவரும் ரஜனிய புளிஞ்செடுத்துப் போடுவார், சிலவேள கார்த்திக் சுப்புராஜுக்கு ரஜனியோட இதுதான் கடைசிப் படமாக இருக்கும் எண்டு கன்னா பின்னா எண்டெல்லாம் கற்பனையை ஓடவிட்டுக் கொண்டு போகேக்க காரையும் ரோட் சைடில ஏத்திப்போட்டன்.
ரஜனி அருமையான நடிகன் , முள்ளும் மலரும் , ஆறிலிருந்து அறுபது வரை, புவனா ஒரு கேள்விக்குறி இப்பிடி பல படங்களைச் சொல்லெல்லாம் .
அங்க போனா அனிருத்தின்ர அடியில காது கீதெல்லாம் அதிர்த்து போச்சு. சரி காதுக்க அடைப்பானப் போட்டு பார்க்க தொடங்கினான். அண்ணன் ரஜனியை ரோபோவால இறக்கி துப்பாக்கியோடை அலைய விட்டான் பொடியன் இந்தியன் ஆமி தோத்துப்போம், ரெண்டுகையால துவக்க சுழட்டிக்கொண்டு பொறி பறந்ததில மண்ட விறச்சுப்போச்சு.
கொஞ்ச நேரமாவது காளியா விடடிருந்தா பரவாயில்ல படம் இல்லாட்டியும் பகிடியாய் இருந்திருக்கும். பேட்டைய கொண்டுவந்து கொல்லத்துவங்கீற்றான்கள்
அமிதாப்பச்சன் எண்ட ஒரு நடிகன் இவற்ற வயதுதானிருக்கும் அவற்ற வசுக்கேற்ற மாரி அருமையான படங்கள் தாறார். குறிப்பா பிளாக். இவருக்கு பார்க்க நேரமிருக்காதுதானே அரசியல்லையும் சொதப்பவேணும்.
ரெண்டு வடிவான பெட்டையளின்ர பேர் டைடடில்ல போட்டிருந்தது. வந்தத கண்டனான் பிறகு காணேல்ல சரியா நடிக்க தெரியாதாக்கும் அனுப்பிப் போட்டினம்.
போனதே இயக்குநருக்காக நான் அவர விட்டுப்போட்டு அங்கால போயிற்றன். ஒரு நப்பிகையை தந்தவர் இந்த கார்த்திக் சுப்புராஜ்
பீட்சா, ஜிகர்தண்டா , இறைவி போல படங்களால அந்த நம்பிக்க தமிழ் மக்களுக்கு இருந்தது. கமலஹாசன் கூட இவர் மேல அந்த நப்பிக்கை உள்ளதாக குறிப்பிட்டிருந்தார். வசூல் குவியுதாம் அதால இனி பல படங்கள் இவருக்கு கிடைக்கும் என்பது உறுதி . சங்கருக்கு அடுத்த இடம் கிடைக்கலாம் . ஆனா நெறியாள்கையில் ஒரு நம்பிக்கை நட்சத்திரம் துலைந்துவிட்டது எண்டதுதான் என்வருத்தம் .
படம் முழுக்க தேடிப்பார்த்தான் கார்த்திக் சுப்புராஜ காணயில்ல கண்டா சொல்லுங்கோ.
நடித்திருக்கிறவர் வில்லனாக வந்த நவாசுதீன் சித்திக் பாராட்டுக்கள்.
இது என்பார்வை மட்டுமே.

No comments: