உலகச் செய்திகள்


பௌத்த துற­வி­க­ளான தாய்­லாந்து குகைச் சிறார்கள்

அதிக வெப்பம் காரணமாக ஒரு வாரத்தில் மட்டும் 65 பேர் பலி!!!

சிங்­கத்தின் வாலுடன் விளை­யா­டா­தீர்கள் - ஹஸன் ரோஹானி

காட்டு தீயில் 24க்கும் மேற்பட்டோர் பலி : பலியானோர் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம்!!!

கனடாவில் துப்பாக்கி தாக்குதல்- பலர் பலி என அச்சம்

கலாமின் 3ஆம் ஆண்டு நினைவு தினம் 

அமெரிக்காவை அழித்துவிடுவோம்; ஈரான் பகிரங்க மிரட்டல்

116 தொகுதிகளில் இம்ரான் வெற்றி; உத்தியோகபூர்வ அறிவிப்பு


பௌத்த துற­வி­க­ளான தாய்­லாந்து குகைச் சிறார்கள்


25/07/2018 தாய்­லாந்து குகை­யொன்றில் சிக்­கிய நிலையில் மீட்­கப்­பட்ட சிறார்­களில் 11 பேர் பௌத்த துற­வி­க­ளாக தற்­கா­லி­க­மாக துற­வறம் பூண­வுள்­ளனர். அதே­வேளை அவர்­களின் பயிற்­று­நரான 25 வயது இளைஞர் முழு­மை­யான பிக்­கு­வாக துற­வறம் பூண­வுள்ளார். இது தொடர்­பான வைபவம் இன்று நடை­பெ­ற­வுள்­ளது.
தாய்­லாந்தின் வைல்ட் போவர் எனும் 16 வய­துக்­குட்­பட்ட கால்­பந்­தாட்ட அணியைச் சேர்ந்த 12 சிறு­வர்­களும் பயிற்­று­நரும் தாம் லுவாங் எனும் குகைக்குள் கடந்த ஜூன் 23 ஆம் திகதி நுழைந்த பின்னர் வெள்ளம் கார­ண­மாக வெளியே வர முடி­யாமல் தவித்­தனர். 9 நாட்­களின் பின் கடந்த 2 ஆம் திகதி பிரித்­தா­னிய சுழி­யோ­டி­களால் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டனர். அதன்பின் 13 பேரும் வெற்­றி­க­ர­மாக மீட்­கப்­பட்­டனர்.   

இந்­நி­லையில், மேற்­படி சிறு­வர்­களில் 11 பேர் தற்­கா­லி­க­மாக துற­வி­க­ளா­வ­தற்குத் தீர்­மா­னித்­துள்­ளனர். மேற்­படி சிறு­வர்கள் 11 முதல் 16 வய­துக்­குட்­பட்­ட­வர்­க­ளாவர்.
இவர்கள் துற­வறம் பூணும் வைபவம் இன்று புதன்­கி­ழமை நடை­பெறும் என சியாங் கராய் மாகா­ணத்தின் ஆளுநர் பர்சோன் பிரத்­சகுல் தெரி­வித்­துள்ளார்.
குகை­யி­லி­ருந்து மீட்­கப்­பட்ட மற்­றொரு சிறுவன் பௌத்தர் அல்­லாத கார­ணத்தால் அவர் இதில் பங்­கு­பற்­ற­வில்லை எனவும் ஆளுநர் பிரத்­சகுல் தெரி­வித்­துள்ளார்.
தாய்­லாந்­தி­லுள்ள பௌத்த ஆண்கள் தமது வாழ்க்­கையின் ஒரு கட்­டத்தில் துற­வறம்; பூணு­வது,பெரும்­பாலும் தற்­கா­லி­க­மாக பாரம்­ப­ரி­ய­மா­க­வுள்­ளது.
இச்­சி­று­வர்கள் பல்வேறு ஆச்சிரமங் களில் ஆகஸ்ட் 4 ஆம் திகதிவரை 9 நாட்கள் தங்கியிருந்து தியானத்திலும் வழிபாடுகளிலும் ஈடுபடுவர் என அறி விக்கப்பட்டுள்ளது.  நன்றி வீரகேசரி 


அதிக வெப்பம் காரணமாக ஒரு வாரத்தில் மட்டும் 65 பேர் பலி!!!
24/07/2018 ஜப்பானில் ஏற்பட்டுள்ள கடும் வெப்பம் காரணமாக கடந்த வாரத்தில் மாத்திரம் 65 பேர் உயிரிழந்துள்ளதாக ஜப்பான் வானிலை மையம் தெரிவித்துள்ளது. 
டோக்கியோ நகருக்கு அருகில் உள்ள குமகாயா நகரில் நேற்று வெப்பநிலை மிக அதிகமாக காணப்பட்டதாகவும் அது 41.1 செல்சியஸாக பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 
2013 ஆம் ஆண்டு பதிவான 41 செல்சியஸ் வெப்பநிலையே ஜப்பானில் பதிவான அதிக கூடிய வெப்பநிலையாக காணப்பட்டது. 
பல நகரங்களிலும் வெப்பநிலை சுமார் 40 செல்சியஸாக காணப்படுவதுடன் வெப்பத்தால் பாதிக்கப்படும் சூழ்நிலையை தவிர்த்து குளிரூட்டப்பட்ட இடங்களில் இருக்கும் படியும், அதிகம் தண்ணீர் அருந்தும் படியும் ஜப்பான் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மக்களை அறிவுறுத்தியுள்ளது. 
22,000க்கும் அதிகமானவர்கள் அதிக வெப்பநிலை காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன

நன்றி வீரகேசரி சிங்­கத்தின் வாலுடன் விளை­யா­டா­தீர்கள் - ஹஸன் ரோஹானி
23/07/2018 அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்பின் ஈரா­னுக்கு எதி­ரான பகை­மை­யான   கொள்­கைகள்   கார­ண­மாக அமெ­ரிக்கா அனைத்துப் போர்­க­ளுக்கும் தாய் போன்ற  பாரிய போரொன்றை  எதிர்­கொள்ள நேரிடும் என ஈரா­னிய ஜனா­தி­பதி ஹஸன் ரோஹானி எச்­ச­ரிக்கை விடுத்­துள்ளார்.
"ஈரா­னு­ட­னான போர் அனைத்துப் போர்­க­ளுக்கும் தாய் போன்று அமையும் என்­பதை அமெ­ரிக்கா அறிந்து கொள்ள  வேண்டும்"  என் அவர்  கூறினார்.
ஈரா­னிய அணு­சக்தி  நிகழ்ச்சித் திட்டம் தொடர்பில் அந்­நாட்­டுடன் 2015  ஆம் ஆண்டு செய்து கொள்­ளப்­பட்­டி­ருந்த  சர்­வ­தேச அணு­சக்தி உடன்­ப­டிக்­கை­யி­லி­ருந்து தனது நாட்டை வாபஸ் பெறு­வ­தற்கு டொனால்ட் ட்ரம்ப்  தீர்­மானம் எடுத்­த­தை­ய­டுத்து ஈரா­னா­னது  அமெ­ரிக்­கா­வி­ட­மி­ருந்து அதிக அழுத்­தங்­க­ளையும்  தடை­க­ளையும் எதிர்­கொள்ளும் நிலைக்குத் தள்­ளப்­பட்­டுள்­ளது.
இந்­நி­லையில் நேற்று ஈரா­னிய இரா­ஜ­தந்­தி­ரிகள் மத்­தியில் உரை­யாற்­றிய  ஹஸன் ரோஹானி, "திரு­வாளர் ட்ரம்ப் அவர்­களே,   சிங்­கத்தின் வாலுடன் விளை­யா­டா­தீர்கள். அது துன்­பத்­திற்கு மட்­டுமே வழி­யேற்­ப­டுத்தித் தரும்"  என்று தெரி­வித்தார்.
"ஈரா­னு­ட­னான சமா­தானம்  அனைத்து சமா­தா­னத்­திற்கும் தாய் போன்று அமை­வ­துடன்  ஈரா­னு­ட­னான போர்  அனைத்துப் போர்­க­ளுக்கும் தாய் போன்று அமையும் என்­பதை  அமெ­ரிக்கா அறிந்து கொள்ள வேண்டும்" என அவர் மேலும் கூறினார்.
1979  ஆம் ஆண்டு இஸ்­லா­மிய புரட்­சியின் பின்னர் இரு நாடு­க­ளுக்­கு­மி­டை­யி­லான சமா­தானம்  அபூர்­வ­மான ஒன்­றாக  இருந்து வரு­வ­தாக  அவர் குறிப்­பிட்டார்.
ஈரானில் இஸ்­லா­மிய  அர­சாங்­கத்தின் ஸ்திரத்­தன்­மையைக் குலைக்க  அமெ­ரிக்கா முயன்று வரு­வ­தாக  வெளி­யான அறிக்­கைகள் குறித்து  ஹஸன் ரோஹானி  விப­ரிக்­கையில், "ஈரா­னிய  பாது­காப்பு மற்றும் அக்­க­றை­க­ளுக்கு எதி­ராக  ஈரா­னிய தேசத்தை தூண்டி விடும் நிலையில் நீங்கள் இல்லை"  எனத் தெரி­வித்தார்.
பிர­தான  எண்ணெய் கப்பல் போக்­கு­வ­ரத்துப் பாதை­யான  ஹொர்மஸ் நீரிணை மற்றும்  வளை­குடா பிராந்­தி­யத்தில்  ஆதிக்­கத்தைக் கொண்ட  நாடு என்ற வகையில் ஈரானின்  எண்ணெய் ஏற்­று­ம­தி­களை   எந்­நாடும் தடுக்க முடி­யாது  என அவர் ஏற்­க­னவே அமெ­ரிக்­கா­வுக்கு சவால் விடுத்­தி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.
ஈரா­னிய உச்ச நிலைத் தலைவர்  ஆய­துல்லாஹ் அலி கமெய்னி  ஈரான்  தனது சொந்த எண்ணெய் ஏற்­று­ம­தி­களை எந்த நாடா­வது தடுக்க முயற்­சிக்கும் பட்­சத்தில்  வளை­குடா பிராந்­தி­யத்­தி­லி­ருந்து அவ்­வா­றான நாட்­டிற்கு செல்­லலும்  அனைத்து எண்ணெய் ஏற்­று­ம­தி­க­ளுக்கும் முட்­டுக்­கட்டை போடும்  என்ற   ஹஸன் ரோஹா­னியின்  கருத்­துக்கு  நேற்று முன்­தினம் சனிக்­கி­ழமை  ஆத­ர­வ­ளித்­தி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.
இந்­நி­லையில் ஈரா­னிய  உயர்­மட்ட  இரா­ணுவக் கட்­டளைத் தள­ப­தி­யொ­ருவர்  டொனால்ட் ட்ரம்பின் அரசாங்கம் ஈரானுக்குள்  ஆக்கிரமிப்பை மேற்கொள்ள  தயாராகி வருவதாக எச்சரித்துள்ளார்.
"எதிரியின்  நடத்தையை முன்கூட்டியே எதிர்வுகூற முடியாதுள்ளது"  என  இராணுவ ஊழியத் தலைவர்   ஜெனரல் மொஹமட் பாகேரி  தெரிவித்தார்.
"தற்போதைய அமெரிக்க அரசாங்கம்  இராணுவ அச்சுறுத்தலொன்று  தொடர்பில் பேசுவதைக் காண முடியாத போதும்,  எமக்குக் கிடைத்த  பெறுமதி மிக்க  தகவலொன்றின் பிரகாரம்  ஈரானிலான இராணுவ ஆக்கிரமிப்புக்கு   தயாராக அமெரிக்க இராணுவத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதை அறிய முடிகிறது"  என அவர்  கூறினார்.
அமெரிக்காவின் புதிய தடைகள் காரணமாக  இந்த வருட இறுதிக்குள்  ஈரானின் எண்ணெய் ஏற்றுமதிகள் மூன்றில் இரண்டு மடங்கிற்கும் அதிகமான அளவில் வீழ்ச்சியடையக் கூடிய நிலை நிலவுவதாக  தெரிவிக்கப்படுகிறது.  நன்றி வீரகேசரி காட்டு தீயில் 24க்கும் மேற்பட்டோர் பலி : பலியானோர் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம்!!!
24/07/2018 கிரீஸ் நாட்டின்  ஏதென்சின் மேற்கு கடற்கரை வனப்பகுதில் ஏற்பட்ட காட்டு தீயில் சிக்கி இது வரையில் 24க்கும் மேற்பட்டோர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
கிரீஸ் தலைநகர் ஏதென்சின் மேற்கு கடற்கரை வனப்பகுதில் திடீர் காட்டு தீ விபத்து ஏற்பட்டது. வேகமாக பரவிய காட்டு தீ மரங்கள் இருக்கும் மற்ற பகுதிகளுக்கும் வேகமாக பரவி வருவதால் அப்பகுதி முழுவதும் கடும் புகைமூட்டமாக காட்சியளிக்கிறது. 
குறித்த விபத்து நிகழ்ந்த பகுதியை ஒட்டியுள்ள சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் 200க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயில் கருகி சேதமடைந்துள்ளது. 
வனப்பகுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் அவ்வழியாக கார்களில் சென்ற பயணிகள் பலர் சிக்கினர். குறித்த விபத்தில் இது வரையில் 24க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 100க்கும் மேற்பட்டவர்கள் கடுமையான தீக்காயம் அடைந்திருப்பதாகவும், இதனால்  பலியானோர் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும் கிரீஸ் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.  நன்றி வீரகேசரி கனடாவில் துப்பாக்கி தாக்குதல்- பலர் பலி என அச்சம்
23/07/2018 கனடாவின் டொரன்டோ நகரில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டவர் உட்பட இருவர்  கொல்லப்பட்டுள்ள அதேவேளை 15ற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.
டொரன்டோவின் கன்போர்த் மற்றும் லோகன் அவன்யூ பகுதிகளில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
 இளம் பெண்ணொருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கி பிரயோகத்திற்கான காரணம் இது வரை தெரியவராத அதேவேளை காயமடைந்த பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்ற வேளை அப்பகுதியில் குடும்பத்தினருடன் உணவகத்தில் காணப்பட்ட நபர் ஒருவர்  15 வெடிப்புசத்தங்கள் கேட்டன அவை பட்டாசு போல சத்தங்கள் தென்பட்டன பின்னர் மக்கள் அலறத்தொடங்கினர்  என டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.  நன்றி வீரகேசரி 

கலாமின் 3ஆம் ஆண்டு நினைவு தினம் 

27/07/2018 மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் 3ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. 
இதையொட்டி அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள ராமேசுவரம் பேய்க்கரும்பில் உள்ள நினைவிடம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
நினைவிடத்தில் உள்ள அப்துல்கலாம் சமாதி அருகில் இன்று அவரது குடும்பத்தினர் சிறப்பு பிரார்த்தனை நடத்தி மலரஞ்சலி செலுத்தினர்.
அப்துல்கலாம் நினைவிடத்தில் அறிவியல் மையம் அமைப்பதற்கு மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது பேரன் சேக் சலீம் தெரிவித்துள்ளார்.
 பேரன் சேக் சலீம்  மேலும் தெரிவித்ததாவது,
அப்துல்கலாம் நினைவிடத்தை தேசிய நினைவிடமாக மத்திய அரசு அறிவித்து இருந்தது. முதற்கட்டமாக நினைவிடத்தில் அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு அடங்கிய மணி மண்டபம் கடந்த ஆண்டு திறக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து கோளரங்கம், நூலகம், அறிவியல் மையம் ஆகியவற்றை அமைப்பதற்கு மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுவரை குறித்த நினைவிடத்தை 33 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர். அப்துல்கலாமின் 3ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று உலக நன்மைக்காகவும், அவரது ஆத்மா சாந்தியடையவும் குடும்பத்தினர் சிறப்பு பிரார்த்தனை செய்தோம் என தெரிவித்துள்ளார்.  நன்றி வீரகேசரி 
அமெரிக்காவை அழித்துவிடுவோம்; ஈரான் பகிரங்க மிரட்டல்

27/07/2018 அமெரிக்கா ஈரானை தாக்கினால், அமெரிக்காவிடமுள்ள அனைத்தையும் அழித்து விடுவோம் என்று ஈரான் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளது.
அமெரிக்கா ஈரானுடன் செய்து கொண்ட அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தில் இருந்து விலகிய அமெரிக்கா, ஈரான் மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளது. 
ஈரானை பொருளாதார ரீதியாக தனிமைப்படுத்தும் வேலைகளையும் தொடங்கியுள்ளது. இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. இதன் காரணமாக இரு நாடுகளுக்குமிடையே பதற்றமான சூழல் நிலவுகிறது.
ஈரான் ஜனாதிபதி ஹசன் ரூஹானி தனது நாட்டின் வெளியுறவு அதிகாரிகள் கூட்டத்தில் நேற்று முன்தினம் கருத்து தெரிவித்த போது அமெரிக்காவுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கும் விதமாக பேசினார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ட்ரம்ப் டுவிட்டரில், ஈரான் ஜனாதிபதிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
“இனி எந்தக் காலத்திலும் அமெரிக்காவை மிரட்டக்கூடாது. இதையும் மீறி மிரட்டினால், வரலாற்றில் இதுவரை சந்தித்திராத பேரழிவை ஈரான் சந்திக்க நேரிடும். உங்களது மிரட்டல்களை நீண்டகாலமாக அமெரிக்கா பொறுத்துக்கொண்டு சும்மா இருக்காது. உங்களுடைய அறிவில்லாத வார்த்தைகள் வன்முறையையும், மரணத்தையும்தான் ஏற்படுத்தும். எனவே எச்சரிக்கையாக இருங்கள்” என காட்டமாக குறிப்பிட்டு இருந்தார் ட்ரம்ப். 
டிரம்பின் இந்த சவாலை ஏற்றுக்கொள்ளும் வகையில் ஈரானும் பதிலடி கொடுத்துள்ளது. ஈரான் நாட்டினை தாக்க அமெரிக்க முயற்சி செய்தால், அமெரிக்காவிடம் இருக்கும் அனைத்தையும் அழித்து விடுவோம் என ஈரான் சிறப்பு படை கமாண்டோ காசிம் சோலிமனி பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.
‘ட்ரம்ப் போரை தொடங்கினார் என்றால் இஸ்லாமிய குடியரசு அதனை முடித்து வைக்கும்’ என்று மேஜர் ஜெனரல் கசிம் சபதம் ஏற்றுள்ளதாக ஈரானின் செய்தி நிறுவனமான டாஸ்னிம் செய்தி வெளியிட்டுள்ளது.   நன்றி வீரகேசரி 
116 தொகுதிகளில் இம்ரான் வெற்றி; உத்தியோகபூர்வ அறிவிப்பு

28/07/2018 பாகிஸ்தானில் இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி 116 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதாக உத்தியோகப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானில் கடந்த 25 ஆம் திகதி பாராளுமன்றத்தின் 272 தொகுதிகளுக்கும், 4 மாகாணங்களுக்கும் தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் இம்ரான் கானின் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி சுமார் 115 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் மூலம் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த தேர்தல் முடிவுகளை நவாஸ் ஷரிப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி உட்பட சில எதிர்க்கட்சிகள் ஏற்க மறுப்பு தெரிவித்து வருகின்றன. தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றம் சாட்டியுள்ளன. அதே சமயம் எவ்வித முறைகேடுகளும் நடக்கவில்லை என பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இந்த தேர்தல் முடிவுகளை அதிகாரப்பூர்வமாக பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  அதில் 272 தொகுதிகளில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் 116 தொகுதிகளில் இம்ரான் கானின் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி வெற்றி பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது.
66 தொகுதிகளில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
இத்துடன் மாகாண தேர்தலின் முடிவுகளை அறிவித்துள்ள தேர்தல் ஆணையம், பஞ்சாப் மாகாணத்தில் சுமார் 129 தொகுதிகளில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
சிந்து மாகாணத்தில் 76 தொகுதிகளில் பாகிஸ்தான் மக்கள் கட்சியும், கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் 66 தொகுதிகளில் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியும், பலோசிஸ்தான் மாகாணத்தில் 15 தொகுதிகளில் அவாமி கட்சி வெற்றி பெற்றுள்ளதாகவும் பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. நன்றி வீரகேசரி 


No comments: