தமிழ் சினிமா

யமன் 


தமிழ் சினிமாவில் எப்போதும் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பவர் விஜய் ஆண்டனி. இவர் இசையமைப்பாளராக இருந்து ஹீரோவாக அறிமுகமாகிய படம் நான். அப்படத்தின் இயக்குனர் ஜீவா ஷங்கர் நீண்ட வருடங்களுக்கு பிறகு மீண்டும் விஜய் ஆண்டனியுடன் இணைந்து இன்றைய ட்ரெண்டிற்கு ஏற்ற ஒரு அரசியல் கதையை படமாக கொடுத்துள்ளார். அரசியல் ஆட்டம் சூடுப்பிடித்ததா? பார்ப்போம்.

கதைக்களம்

விஜய் ஆண்டனி அப்பா அரசியலில் பெரும் புள்ளியாக உள்ளார். அவரை பதவிக்காக தங்க பாண்டி என்பவர் கொல்கிறார்.
அதை தொடர்ந்து விஜய் ஆண்டனியின் அம்மாவும் இறக்க, தாத்தாவின் அரவணைப்பில் வாழ்கிறார். ஒரு கட்டத்தில் பணத்திற்காக சிறை செல்கிறார் விஜய் ஆண்டனி.
அங்கிருந்து Ex எம்.எல்.ஏ தியாகராஜன் நட்பு கிடைத்து கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி, ஒரு கட்டத்தில் அரசியலுக்கு வரவும் முடிவு செய்கிறார். இவரின் அரசியல் ஆசைக்கு பலர் முட்டுக்கட்டாக இருக்கின்றனர்.
அதை அறிந்துக்கொண்ட விஜய் ஆண்டனி தன்னை சுற்றி நடக்கும் அத்தனை சூழ்சிகளையும் எப்படி முறியடிக்கின்றார் என்ற சகுனி ஆட்டமே இந்த எமன்.

படத்தை பற்றிய அலசல்

விஜய் ஆண்டனி எப்போதும் தனக்கு எது செட் ஆகும் என்பதை மிக தெளிவாக தெரிந்து வைத்துள்ளார், ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பு, அளவாக நடித்துள்ளார், அதிலும் அரசியவாதியாக அவர் மாற, ஆடும் ஆட்டம் அதிரடி காட்டுகின்றார், ஆனால், கொஞ்சமாவது கலகலப்பாக இருங்க சார், ரொம்ப டல்லாவே இருப்பது எப்போவுமே செட் ஆகுமா என்று தெரியவில்லை.
தங்கப்பாண்டி என்ற கதாபாத்திரத்தில் வரும் எம்.எல்.ஏ மிரட்டியிருக்கிறார், திருநெல்வேலி ஸ்லாங்கில் செம்ம ஸ்கோர் செய்கிறார். விஜய் ஆண்டனியை வீழ்த்த, அவர் செய்யும் வேலைகள் ரசிக்க வைக்கின்றது.
மியா ஜார்ஜ் முதன் முதலாக ஆடல், பாடல் என வேறு முகத்தை காட்டியுள்ளார், கொஞ்சம் இப்படியும் நடியுங்கள், விஜய் ஆண்டனிக்கு பிறகு 6 அடிப்பது தியாகராஜன் தான். ஏன் சார் இத்தனை நாட்கள் நடிக்கவில்லை என கேட்கத்தோன்றுகின்றது.
அதிலும் தன் சாதிக்காரர்களை வைத்து எதிரணியை வீழ்த்த நினைப்பது, பின் அவர்களையே காரியத்திற்காக கொல்வது, என அரசியவாதியாகவே கண்முன் தெரிகின்றார். படம் பார்ப்பதற்கு ஏதோ ராம்கோபால் வர்மா படம் போலவே உள்ளது.
மெதுவாக நகரும் கேமரா, காட்சியமைப்புகள் என ஜீவா ஷங்கர் கொஞ்சம் கமர்ஷியல் பார்முலாவில் வித்தியாசம் காட்டியுள்ளார். ஒளிப்பதிவும் அவரே என்பதால் அதிலும் பாஸ் மார்க் வாங்குகின்றார். ஆனால், மெதுவாக செல்லும் சில காட்சிகள் பொறுமையை சோதிக்கின்றது.

க்ளாப்ஸ்

எடுத்துக்கொண்ட கதைக்களம், இன்றைய சூழ்நிலையில் எளிதில் மக்கள் மனதில் பதியும்.
படத்தின் வசனம், அரசியல் விஷயத்தில் சொந்த மகனை கூட நம்பமாட்டார்கள், இது சகுனியும், சாணக்கயனும் விளையாட்ற ஆட்டம் போன்றவை ரசிக்க வைக்கின்றது.
குறிப்பாக கிளைமேக்ஸில் விஜய் ஆண்டனிக்கும், தியாகராஜனுக்கு வரும் கான்வர்சேஷன் செம்ம.

பல்ப்ஸ்

மெதுவாக நகரும் திரைக்கதை, விஜய் ஆண்டனி உடனே உடனே முன்னேறுவது கொஞ்சம் அழுத்தமாக காட்டியிருக்கலாம்.
மொத்தத்தில் எமன் வேகம் குறைவு என்றாலும் விவேகமானவன்
Direction: 
Production: 
Music: 


நன்றி CineUlagam