சாதனை விமானப் பயணம்
மத முறைப்படி ஆடை அணியத் தவறியதற்காக பெண்ணுக்கு சித்திரவதை செய்து மரணதண்டனை
84 வயதில் 4வது முறையாக மாடல் அழகியை மணந்த இங்கிலாந்து பத்திரிகை அதிபர்
ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத்தடை
பயணித்த விமானத்தின் சக்கரப் பகுதியில் 11 மணி நேரமாக தொங்கிய சடலம்
மூன்றரை வருடங்களாக மம்மி நிலையில் பேணப்பட்ட சீனத் துறவியின் உடல்
இந்தோனேஷியாவில் தொடர் குண்டு வெடிப்பு, துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் : மூவர் பலி
சாதனை விமானப் பயணம்
11/01/2016 பிரித்தானியாவிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு திறந்த சிறிய ரக விமானமொன்றில் 14,600 கடல் மைல் தூரம் பயணித்து பிரித்தானிய சாகஸ கலைஞரான திரேசி கேர்டிஸ் ரேலர் சாதனை படைத்துள்ளார்.
அவர் (53 வயது) 1942 போயிங் ஸ்ரியர்மான் ஸ்பிறிட் விமானத் தில் பார்ன்பரோவிலிருந்து கடந்த ஒக்டோபர் மாதம் பயணத்தை ஆரம்பித்து சிட்னி நக ரில் தற்போது தரை யிறங்கியுள்ளார். நன்றி வீரகேசரி
11/01/2016 ஐ.எஸ். தீவிரவாத குழுவைச் சேர்ந்த பெண் உறுப்பினர் ஒருவர், சிரியாவைச் சேர்ந்த யுவதியொருவருக்கு மத ரீதியான ஆடைகளை அணியத் தவறிய குற்றச்சாட்டில் சித்திரவதை செய்து மரணதண்டனை நிறைவேற்றியுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் சனிக்கிழமை செய்திகளை வெளியிட்டுள் ளன.மேற்படி 21 வயதான யுவதி மத முறைப்படி உடலை மூடி ஆடை அணியாது செல்வதைக் கண்ட ஐ.எஸ். தீவிரவாத குழுவைச் சேர்ந்த ஒவும் பாரூக் என்ற பெண் உறுப்பினர், அவரை அடித்து உதைத்து சித்திரவதை செய்து மரணதண்டனை நிறைவேற்றியதாக அவரது குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர் அரா நியூஸ் ஊடகத்துக்கு தெரிவித்துள்ளார். நன்றி வீரகேசரி
84 வயதில் 4வது முறையாக மாடல் அழகியை மணந்த இங்கிலாந்து பத்திரிகை அதிபர்
13/01/2016 இங்கிலாந்து பத்திரிகை அதிபர் 84 வயது முர் டோக் தன்னை விட 30 வயது குறைந்த நடிகையை 4-வது திருமணம் செய்கிறார்.
இங்கிலாந்தின் பிரபல மான ஒரு பத்திரிகையின் அதிபர் ரூபெர்ட் முர்டோக். இவருக்கு வயது 84. இவருக்கு ஏற்கனவே 3 பெண்களுடன் திருமணம் நடந்துள்ளது. அவர்கள் மூலம் 6 குழந்தைகள் உள்ளனர். இவரது 3-வது மனைவி வெண்டி டெங் (46). இவர் மூலம் கிரேஸ் (14), சொலோக் (12) என்ற 2 குழந்தைகள் உள்ளனர். இவரை கடந்த 2013-ம் ஆண்டு முர்டோக் விவாகரத்து செய்தார்.
இந்த நிலையில் முர்டோக் ஜெர்ரி ஹால் என்ற 59 வயது நடிகையும், முன்னாள் மாடல் அழகியின் காதல் வலையில் விழுந்தார். ஜெர்ரியும் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆனவர். இவருக்கு எலிசபெத், ஜேம்ஸ், ஜார்ஜியா மற்றும் காபிரியல் ஜாக்கர் என்ற 4 குழந்தைகள் உள்ளனர்.
முர்டோக்-ஜெர்ரி ஹால் ஜோடி கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஒருவரை ஒருவர் சந்தித்து அன்பை பகிர்ந்து கொண்டனர். அதன் பின்னர் ஆஸ்திரேலியா சென்று காதல் வானில் சிறகடித்து பறந்த இவர்கள் திருமணம் செய்ய முடிவு செய்தனர். அதை தொடர்ந்து கடந்த வாரம் இவர்களது திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.இந்நிலையில், காதல் ஜோடி சமீபத்தில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த 73-வதுகோல்டன் குளோப் திரைப்பட விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டு பரபரப்பை ஏற்படுத்தினர்.
ரூபெர்ட் முர்டோக்கின் முதல் மனைவி பாட்ரிகா புக்கர், 2-வது மனைவி அன்ன போர்ல், 3-வது மனைவியின் பெயர் வெண்டி டெங், முர்டோக்கின் மூத்த மகன் லாசெலான். இவருக்கு 44 வயது ஆகிறது.
நன்றி வீரகேசரி
ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத்தடை
13/01/2016 ஜல்லிக்கட்டு போட்டிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியதை எதிர்த்து தொடரப்பட்ட 13 மனுக்கள் மீதான விசாரணைகளையடுத்து நேற்று ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்தது.
இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் எங்கும் நேற்று போராட்டங்கள் வெடித்ததோடு அலங்காநல்லூரில் இரு இளைஞர்கள் தீக்குளிக்க முயற்சித்தமை பரபரப்பை ஏற்படுத்தியது.
பொங்கலை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அனுமதியை மத்திய அரசு கடந்த வெள்ளிக்கிழமை வழங்கியது. இதனை எதிர்த்து விலங்குகள் நலவாரியம் உள்ளிட்ட தரப்பினர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த 13 மனுக்கள் மீதான விசாரணை நீதிபதி தாக்கூர் தலைமையிலான அமர்விலிருந்து நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ரமணா ஆகியோர் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டு நேற்று விசாரணை நடைபெற்றது.
விலங்குகள் நலவாரியம் சார்பாக வழக்கறிஞர் அரிமா சுந்தரம் வாதிட்டார். அவர் தமது வாதத்தில், ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து ஏற்கனவே உள்ள அறிக்கையை மீற முடியாது. புதிய அறிக்கையில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க புதிய அம்சத்தை சேர்த்தது சரியல்ல என்று கூறினார். மத்திய அரசு சார்பில் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹக்கி ஆஜராகி வாதாடினார்.
புதிய அறிக்கையில் காளைகள் வதை தொடர்பாக கவனத்தில் கொண்டுள்ளோம் என்று அவர் தெரிவித்தார். மேலும் ஜல்லிக்கட்டுக்கு தேவையெனில் உச்சநீதிமன்றம் நிபந்தனை விதிக்கலாம் என்றும் அவர் கூறினார். தமிழக அரசு சார்பில் ராஜேஸ்வர ராவ், சேகர் நாப்டே ஆகியோர் ஆஜராகினர்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் ஜல்லிக்கட்டு போட்டிக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். அனுமதியளித்த மத்திய அரசின் அறிக்கைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, "காட்சிப்படுத்தப்படும் விலங்குகள்" பட்டியலில் உள்ள காளையை நிபந்தனையுடன் ஜல்லிக்கட்டு போட்டியில் ஈடுபடுத்த வகை செய்யும் அரசாணையை மத்திய அரசு கடந்த 8 ஆம் திகதி வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.
பொங்கலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இருப்பினும் மீண்டும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மனுதாக்கல் செய்யப்பட்டு தீர்ப்பு கிடைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு தமிழக மக்கள் மத்தியில் நிலவிவருகிறது. நன்றி வீரகேசரி
பயணித்த விமானத்தின் சக்கரப் பகுதியில் 11 மணி நேரமாக தொங்கிய சடலம்
மூன்றரை வருடங்களாக மம்மி நிலையில் பேணப்பட்ட சீனத் துறவியின் உடல்
இந்தோனேஷியாவில் தொடர் குண்டு வெடிப்பு, துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் : மூவர் பலி
நன்றி வீரகேசரி
14/01/2016 பிரேசிலிலிருந்து பிரான்ஸின் பாரிஸ் நகருக்கு பயணித்த விமான மொன்றின் சக்கரப் பகுதி யில் தொங்கிய நிலையில் நபரொருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
திங்கட்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவம் குறித்து சர்வதேச ஊடகங்கள் புதன்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன.
பிரேசிலின் சாயோ போலோ நகரிலிருந்து மேற்படி எயார் பிரான்ஸ் விமானம் புறப்பட்ட போது, குறிப்பிட்ட நபர் ஐரோப்பாவுக்கு சட்டவி
ரோதமாக செல்லும் முயற்சியில் அந்த விமானத்தின் சக்கரப் பகுதியில் மறைந்து கொண்டிருந்திருக்கலாம் எனவும் அவர் அந்தப் பயணத்தின் ஆரம்பத்திலேயே மரணமடைந்திருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது.
அவரது சடலம் அந்த போயிங் 777 விமானத்தில் தொடர்ந்து 11 மணி நேரம் தொங்கிக் கொண்டிருந்துள்ளது. நன்றி வீரகேசரி
மூன்றரை வருடங்களாக மம்மி நிலையில் பேணப்பட்ட சீனத் துறவியின் உடல்
14/01/2016 மம்மி நிலையில் பேணப்பட்ட சீனத் துறவியொருவரது உடல் மத வைபவமொன்றையொட்டி பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
மூன்றரை வருடத்துக்கு முன்னர் உயிரிழந்த துறவியான பு ஹோயுவின் உடல் உருளை வடிவான கொள்கலனில் இதுவரை காலமும் பாதுகாக்கப்பட்டு வந்தது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை தென் கிழக்கு சீனா வின் புஜியான் மாகாணத்தில் குவான்ஸொயு எனும் இடத்திலுள்ள ஆலயத்தில் மேற்படி துறவியின் உடல் பொதுமக்கள் பார்வையிடுவதற்காக காட்சிப்படுத்தப்பட்டது.
இது தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் புதன்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன.
துறவியின் உடல் வைக்கப்பட்டிருந்த கொள்கலன் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்ட போது அதனுள் அவரது உடல் நன்கு பேணப்பட்ட நிலையில் காணப்பட்டது. நன்றி வீரகேசரி
அந்த உடலை பேணுவதற்காக அதனை மூடியிருந்த கரியும் சந்தணமும் நிபுணர்களால் கவனமாக அகற்றப்பட்டது.
இதன்போது அங்கு கூடியிருந்த பெருந்தொகை யான மதகுருமார் அந்த துறவிக்கு மரியாதை செலுத்தினர்.
'புனித சதை' என அழைக்கப்படும் மேற்படி துற வியின் உடலானது அந்நாட்டு பாரம்பரிய வழக்கப் பிரகாரம் தங்க உள்ளடக்கங்களால் மூடப்பட்டு பௌத்த சிலையொன்றாக மாற்றப்படவுள்ளது.
புஜியான் மாகாணத்திலுள்ள ஜின்சியாங் நகரில் 1919 ஆம் ஆண்டில் பிறந்த பு ஹோயு, தனது 13 ஆவது வயதில் துறவியானார் நன்றி வீரகேசரி
இந்தோனேஷியாவில் தொடர் குண்டு வெடிப்பு, துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் : மூவர் பலி
14/01/2016 இந்தோனேஷியாவின் தலைநகரான ஜகார்த்தாவில் 6 குண்டு வெடிப்புகள் மற்றும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த சம்பவத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.
இதில் இலங்கையர்களுக்கு எந்த வித பாதிப்பும் இல்லை என இந்தோனேஷியாவில் உள்ள இலங்கைக்கான தூதரகம் தெரிவித்துள்ளது.
நன்றி வீரகேசரி