கார்த்திகாவின் நாட்டியாஞ்சலி 2015

.

கடந்த 31.10.15 சனி மாலை கார்த்திகா ஆடற் கலையகத்தினரின் நாட்டியாஞ்சலி விழா Wentworth வில் RedGum மண்டபத்தில் நடைபெற்றது. அன்று சிட்னி நகரில் பல நிகழ்சிகள் நடைபெற்ற போதும் மண்டபம் நிறைந்த கூட்டம் வருகை தந்திருந்தது.

நடன நிகழ்ச்சி தமிக்கா சாஇனத்தின் அறிவிப்புடன் ஆரம்பமானது. தமிக்கா பல வருடங்களுக்கு முன் கார்த்திகாவின் மாணவியாக ஆடியவர். இன்றோ தனது மகள் கார்த்திகாவுடன் நடனம் கற்பதாகவும் தனது 10 வயது மகளை எனக்கு காட்டினார். குரு பக்த்தியை தனது குரல் மூலம் வெளிப்படுத்துவதாக கூறி சிரித்தார்.


கார்த்திகா இன்று இரண்டாவது தலைமுறைக்கு நடனம் கற்பிற்கும் ஆசிரியை, பெருமைப் பட வேண்டிய விஷயம் தான். வலுவூராரின் மாணவியாக கொழும்பு மேடையில் அவர் ஆடியது என்மனதில் தோன்றியது. அவர் ஆடிய நகதிருத்தியம் இன்பரும் பேசப்படுகிறது. இவ்வாறு நான் சிந்தனையில் ஆழ்ந்திருக்க மண்டப ஒழி அணைந்து இசை ஆரம்பமாக மேடையை நோக்கி கண்கள் நகர்ந்தன.அலாரிப்புடன் நிகழ்ச்சி ஆரம்பமானது. சிறுமியர் முகம் மலர ஆடியதே ஆரம்பம் களை கட்டியது. தமிக்காவின் மகளை அங்கே கண்டேன். நாளைய பெரிய நர்த்தகிகளாக வருபவர்கள் இவர்கள் என ஆடலின் அழகு காட்டியது. அடுத்து சின்னஞ் சிறு கண்ணன் என மேடையை வளைத்து சிங்காரமாக ஆடினார் அந்த பட்டாம் பூச்சிகள்.
கார்த்திகா ஒருவரையும் சிந்திக்க இடம் கொடுக்கவில்லை. அடுத்தடுத்த நிகழ்சிகள் மேடையில் தோன்றின. சினிமா போனது தொடர்பறாது ஆடல்கள் தோன்றிய வண்ணமே இருந்தது.

அடானா இராகத்தில் அமைந்த ஜதீஸ்வரம் வலுவூராரின் பாணியிலான அடைவுகள், கண் இமைக்கும் நேரத்தில் தோன்றி மறையும் சிலை ஒத்த நிலைகள். ஆம் வைஜயந்திமாலா, பத்மா சுப்பிரமணியம், சித்திரா விஸ்வேஸ்வரன் என்ற பெயர் பெற்ற நர்த்தகிகளை உருவாக்கியவர் வலுவூறார். அந்த குருவிடம் கற்ற கார்த்திகா இன்று சிட்னியில் அதே பாணியிலான நடனத்தை மாணவியருக்கு கற்று தருகிறார்.

பால முரளி கிருஷ்ணாவின் இசையில் உருவாகிய கணேஷ கவுத்துவம் ஆடியவர்கள் திவ்யனா, சகானா இவர்கள் இருவரும் துல்ய வெண்ணிற ஆடையில் முழு முதற் கடவுளின் பல கோலங்களை காட்டி விறு விறுப்பான ஆடலை ஆடியது இசை மேதையின் ஆக்கத்திற்கு அற்புதமாக அமைந்தது.


கண்களைக் கவரும் வண்ண வண்ண உடைகளுடன் தம் ஆடலை நன்கு உணர்ந்து மாணவியர் ஆடினர். அவர் அவர் பங்குக்கு thiraimaiyaaka ஆடிய போதும் இங்கு நான் சிறப்பாக தோன்றிய ஆடல்களையே கூற முடியும். பரதம், குச்சிப்புடி நடன வகைகள் மாறி மாறி ஆடப்பட்டது. குச்சிப்புடியிலான சிவா நடனம் ஆடிய ஜாஸ்வின், நிக்கிடா புரிந்து உணர்ந்து ஆடினார். குச்சிப்புடியின் அழகு பார்ப்போரை வியக்க வைக்கும் நளினம் மிகுந்தது.
'மரகதமணி வேலா' குச்சிப்புடி அரங்கிலே பிரபலமான பால' கோபால தரங்கம்' பால கோபாலன் தங்கத் தாம்பாளத்தில் தலையிலே செம்பை ஏந்தி ஆடியதாக ஆடப்படுவது. கார்த்திகாவின் தேர்ந்த சிஷ்யை அனிடா கிறிஸ்டி ஆடினார். உடலின் குழைவு தளர்ச்சி அபிநயத்துடன் அடைவுகள் இணைவது குச்சிப்புடிக்கே உரிய தனித்துவம். இறுதியாக விறு விருப்பான ஆடல் அதை அடுத்து செம்பை தலையில் தாங்கி தாம்பாளத்தின் விளிம்பிலே கால்களை பதித்து தலையில் தாங்கி தாம்பாளத்தின் விளிம்பிலே கால்களை பதித்து ஜாதிகளை தாளம் பிசகாது ஆடுவது பார்ப்போரை மெய்சிலிர்க்க வைக்கும் விந்தை. ஆடிய அனிதாவிற்கு பாராட்டுகள்.

இடைவேளையின் பின் மல்லாரியுடன் நிகழ்ச்சிகள் ஆரம்பமானது. 'மாண்டவன் வந்தானடி' பிரபலமான பாடல் திவ்யானா பரம், பத்மினி ஆடியதை ஆடினார். எப்படித்தான் ஆடப்போகிறார் என எண்ணினேன். நாட்டிய பேரொளி பத்மினி ஆடிய அத்தனை ஆடலையும், ஆடி பிரமாதம் என வியக்க வைத்தார். மண்டபத்தின் பெரும் கர ஒலி அவரை அங்கீகரித்தது.

வழுவூரார் பாணியிலான நாகதிருத்தியம் பாம்பாட்டி சித்தரின் 'நாதர் முடிமேல்' புண்ணாக வராளி இராகத்தில் ஒழிக்க ஜாஸ்வின், நிக்கிட்டா நாகமாக வளைந்து 'நாட்டிய சாஸ்த்திர' நூலில் விளக்கும் பலவகையான கர்ணங்கள் தோன்றி மறைந்தன. நாகமா வளையும் போதெல்லாம் மண்டபத்திலே கர ஒலி அவர்களை உனக்கு விக்கவா, அல்லது அவர்களே போற்றவா?


சலங்கை ஒலி சினிமாவில் ஷைலஜா ஆடிய 'ஓம் நமசிவாய' சகானா யுவராஜனால் ஆடப்பட்டது. நிகழ்ச்சியில் தனக்கொரு தனி இடம் வேண்டும் என்பது போல ஆடினார். ஆம் அவர் சிறந்த நர்த்தகியே தான்.

'ஆடற் கலையே' என M.L. வசந்தகுமாரியின் குரல் ஒலிக்க நிலக்சனா பரம் பாடினார். குதித்து வளைந்து எதையும் ஆடுவேன் என்பது போல அபாரமாக ஆடியவர் "பாவம், இராகம், தாளம்' என்ற பாடல் வரிகளுக்கு காட்டிய அபிநயம் பாரில் உள்ளோர் எல்லாம் போற்றும் பரதகளையாக மிளிர்ந்தது.
இறுதியாக இரு ஹிந்தி ஹிட், Bollywood பாடல்களுக்கான ஆடல்கள். ஓஹோ கார்த்திகா சாஸ்திரீய பரதம், குச்சிப்புடி ஆடினால் போதாதா? Bollywood வேண்டுமா? எதையும் செய்து காட்டுவோம் என்ற மனோ பாவமா? அல்லது துணிச்சலா? எது எப்படியோ அருமையான நாட்டிய நிகழ்வு ரசித்தோம்.


இறுதியாக ஆஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்பு கூட்டுதாபனத்தினர் கார்த்திகா கணேசருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர். மண்டபம் நிறைந்த கூட்டம் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தது. கார்த்திகா ATBC மூலம் பிரபலமானவர். அவரது நேயர்கள்தான் அங்கு கூடி இருந்தனர் போலும். கார்த்திகா என் சில வார்த்தைகள் தன்னும் பேசவில்லை என அங்கலாயித்தனர்.
No comments: