உலகச் செய்திகள்


ரஷ்ய விமானம் வெளிக்கார­ணி­க­ளா­லேயே நடு­வானில் பிள­வ­டைந்து விழுந்து அனர்த்­தத்­துக்­குள்­ளா­கி­யுள்­ளது

தென் சூடான் விமான விபத்தில் 40 பேர் பலி

ஆப்­கானில் திரு­ம­ணத்­துக்கு அப்­பா­லான உற­வுக்­காக இளம் பெண்­ணுக்கு கற்­களால் எறிந்து மர­ண­தண்­டனை













ரஷ்ய விமானம் வெளிக்கார­ணி­க­ளா­லேயே நடு­வானில் பிள­வ­டைந்து விழுந்து அனர்த்­தத்­துக்­குள்­ளா­கி­யுள்­ளது

03/11/2015 எகிப்தில் கடந்த சனிக்­கி­ழமை விழுந்து நொறுங்­கிய ரஷ்ய விமானம் வெளிக் கார­ணிகளால் நடு­வானில் உடைந்து வீழ்ந்­துள்­ள­தாக அந்த விமா­னத்தைச் செயற்­ப­டுத்தி வரும் விமான சேவை நிறு­வனம் நேற்று திங்­கட்­கி­ழமை தெரி­வித்­துள்­ளது.


அந்த விமானம் நடு­வானில் உடைந்து விழுந்­த­மைக்கு தொழில்­நுட்பக் கோளாறு ஒரு கார­ண­மாக இருக்க முடி­யாது என கொக­லி­ம­வியா சார்ட்டர் விமா­ன­சே­வையின் பணிப்­பாளர் அலெக்­ஸாண்டர் சிமிர்னோவ் கூறினார்.
இது விமா­னத்­துக்கு வெளியில் இடம்­பெற்ற நட­வ­டிக்­கை­யொன்றால் மட்­டுமே ஏற்­பட்ட அனர்த்தம் எனத் தெரி­வித்த அவர், மேலதிக தகவல் எதனையும் வெளியிட மறுத்துள்ளார்.
இந்நிலையில் அவரது கூற்று அந்த விமா னத்தை தாமே சுட்டு வீழ்த்தியதாக ஐ.எஸ். தீவிரவாதிகள் உரிமை கோரியுள்ளதை உறு திப்படுத்துவதாக உள்ளதாக அரசியல் அவ தானிகள் சிலர் விமர்சிக்கின்றனர். இந்த விமான அனர்த்தம் தொடர்பில் விசா­ர­ணை­யா­ளர்கள் தீவிர விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­துள்ள நிலையில், அந்த விமான அனர்த்­தத்தில் கொல்­லப்­பட்ட 144 பேரின் சட­லங்கள் ரஷ்ய நக­ரான சென்­பீற்­றர்ஸ்­பேர்க்­கிற்கு கொண்டு செல்­லப்­பட்­டுள்­ளன.

இந்த எயார் பஸ் 321 விமானம் எகிப்­திய வட சினாய் தீப­கற்­பத்தில் விழுந்து நொறுங்­கி­யதில் அதில் பயணம் செய்த 224 பேரும் உயி­ரி­ழந்­துள்­ளனர். பலி­யா­ன­வர்­களில் அநேகர் ரஷ்­யர்­க­ளாவர்.
மேற்­படி அனர்த்­தத்­தை­யொட்டி ரஷ்­யாவில் ஞாயிற்­றுக்­கி­ழமை ஒரு நாள் துக்க தினம் அனுஷ்­டிக்­கப்­பட்­டது.

அந்த விமானம் நடு­வானில் பிளந்து கீழே விழுந்­துள்­ள­தாக ரஷ்ய விமானப் போக்­கு­வ­ரத்து முகவர் நிலை­யத்தின் தலைவர் அலெக்­ஸாண்டர் நெராட்கோ தெரி­வித்தார்.
மேற்­படி விமா­னத்தில் பய­ணித்து உயி­ரி­ழந்­த­வர்­களில் 25 சிறு­வர்கள் உட்­பட 217 பய­ணி­களும் 7 விமான ஊழி­யர்­களும் உள்­ள­டங்­கு­கின்­றனர். பய­ணி­களில் 4 பேர் உக்­ரே­னி­யர்­க­ளாவர். ஒருவர் பெலா­ரஸைச் சேர்­ந்த­வ­ராவார்.

இந்­நி­லையில் இந்த விமான அனர்த்­தத்தில் உயி­ரி­ழந்­த­வர்­களில் ஒரு பகு­தி­யி­னரின் சடல எச்­சங்­க­ளுடன் ரஷ்ய அர­சாங்க விமா­ன­மொன்று சென் பீற்­றர்ஸ்பேர்க் நக­ரி­லுள்ள புல்­கொவோ விமான நிலை­யத்தில் திங்­கட்­கி­ழமை காலை தரை­யி­றங்­கி­யுள்­ளது.
அதே­ச­மயம் அன்றைய தினம் மாலை எஞ்­சிய சடல எச்­சங்­க­ளுடன் பிறி­தொரு விமானம் சென் பீற்­றர்ஸ்பேக் நகரை வந்­த­டைந்­துள்­ளது.
அந்த சட­லங்கள் உற­வி­னர்கள் அடை­யாளம் காண்­ப­தற்­காக அந்­ந­க­ரி­லுள்ள மயா­னத்­துக்கு கொண்டு செல்­லப்­பட்­டன.
இந்­நி­லையில் இந்த விமான அனர்த்­தத்தில் உயி­ரி­ழந்­த­வர்­களின் குடும்­பங்­க­ளுக்கு நஷ்­ட­ஈட்டை வழங்­கு­வ­துடன் மர­ணச்­ச­டங்­கு­க­ளுக்­கான ஏற்­பா­டு­களை செய்து தர­வுள்­ள­தாக ரஷ்யா தெரி­விக்­கி­றது.
கடந்த சனிக்­கி­ழமை ஷராம் எல் ஷெய்க் பிராந்­தி­யத்­தி­லி­ருந்து சென் பிற்­றர்ஸ்பேர்க் நகரை நோக்கிச் சென்ற வேளை விழுந்து நொறுங்­கிய அந்த விமா­னத்தின் சிதை­வுகள் 20 சதுர கிலோ­மீற்றர் பரப்­ப­ளவில் சித­றி­யி­ருக்கக் காணப்­பட்­டன. இது­வரை 163 சட­லங்கள் மீட்­கப்­பட்­டுள்­ளன.
மேற்­படி விமா­னத்தின் கறுப்புப் பெட்டி பதி­வு­க­ரு­விகள் கண்­டு­பி­டிக்­கப்­பட்டு பகுப்­பாய்­வுக்­காக அனுப்­பப்­பட்­டுள்­ளன.
இந்த விமான அனர்த்தம் இடம்­பெற்று சிறிது நேரத்தில் அந்த விமா­னத்தை தாமே சுட்டு வீழ்த்­தி­ய­தாக ஐ.எஸ். தீவி­ர­வா­திகள் உரிமை கோரி­யி­ருந்­தனர்.
ஆனால் எகிப்­ப­திய பிர­தமர் ஷரீப் இஸ்­மாயில் தரை­யி­லி­ருந்து சுமார் 31,000 அடி உய­ரத்தில் பறந்த விமா­னத்தை சுட்டு வீழ்த்­தக்­கூ­டிய ஆயு­தங்கள் எதுவும் ஐ.எஸ். தீவி­ர­வா­தி­க­ளிடம் இருப்­ப­தற்கு சாத்­தி­ய­மில்லை என நிபு­ணர்கள் கூறு­வ­தாக தெரி­வித்­துள்ளார்.
இது தொடர்பில் ஐ.எஸ். தீவி­ர­வா­தி­களால் வெளி­யி­டப்­பட்­டுள்­ள­தாக கூறப்­படும் வீடியோ காட்சி தொடர்­பிலும் அவர் மறுப்புத் தெரி­வித்­துள்ளார்.
அந்த வீடியோ காட்சி ஐ.எஸ். தீவி­ர­வா­தி­களின் உத்­தி­யோ­க­பூர்வ வீடியோ காட்­சி­யாக தோன்­ற­வில்லை என நிபு­ணர்கள் தெரி­விக்­கின்­றனர். அந்த வீடியோ காட்சி ஐ.எஸ். தீவி­ர­வா­தி­களின் உத்­தி­யோ­க­பூர்வ இணை­யத்­த­ளங்கள் எவற்­றிலும் காணப்­ப­ட­வில்லை என அவர்கள் கூறு­கின்­றனர்.
இந்­நி­லையில் எமிரேட்ஸ் எயார் பிரான்ஸ், கே.எல்.எம்., லுப்­தான்ஸா மற்றும் கட்டார் எயார்வேய்ஸ் ஆகிய விமான சேவைகள் மேல­திக தகவல் எதுவும் கிடைக்கும் வரை சினாய் தீப­கற்­பத்­துக்கு மேலாக தமது விமா­னங்­களை சேவையில் ஈடு­ப­டுத்­து­வ­தில்லை எனத் தீர்­மா­னித்­துள்­ளன.
குறிப்­பிட்ட ரஷ்ய விமானம் பறந்த அதே பாதையில் ஜேர்­ம­னிய விமா­னங்கள் பய­ணத்தை மேற்­கொள்ள மாட்­டாது என ஜேர்­ம­னிய போக்­கு­வ­ரத்து அமைச்சு தெரிவித்தது.
அதேசமயம் பிரித்தானிய எயார்வேய்ஸ் விமான சேவை இது தொடர்பில் தெரிவிக் கையில், தனது விமானங்களின் பயணப் பாதைகளின் பாதுகாப்பு குறித்து தாம் ஒழுங்கு முறையில் மதிப்பீடுகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தது.  நன்றி வீரகேசரி 






தென் சூடான் விமான விபத்தில் 40 பேர் பலி

04/11/2015 தென் சூடானின் ஜூபா விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்ற சரக்கு விமானம் விபத்துக்குள்ளானதில் 40 பேர் உயிரிழந்திருக்கலாம் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஓடுபாதையிலிருந்து 800 மீற்றர் தூரத்திலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.



நன்றி வீரகேசரி 











ஆப்­கானில் திரு­ம­ணத்­துக்கு அப்­பா­லான உற­வுக்­காக இளம் பெண்­ணுக்கு கற்­களால் எறிந்து மர­ண­தண்­டனை



05/11/2015 ஆப்­கா­னிஸ்­தானில் தலிபான் தீவி­ர­வா­தி­களின் கட்­டுப்­பாட்­டி­லுள்ள பிராந்­தி­யத்தில் திரு­ம­ணத்­துக்கு அப்­பா­லான உறவில் ஈடு­பட்­ட­மைக்­காக இளம் பெண்­ணொ­ரு­வ­ருக்கு கற்­களால் எறிந்து மர­ண­தண்­டனை நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது.

பிரோஸொக் பிராந்­தி­யத்தில் நிறை­வேற்­றப்­பட்ட மேற்­படி மர­ண­தண்­ட­னையை வெளிப்­ப­டுத்தும் 30 செக்கன் வீடியோ காட்சி இணை­யத்­த­ளங்­களில் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.
ரொ­க்ஸஹனா என்ற மேற்­படி 19 வய­துக்கும் 21 வய­துக்கும் இடைப்­பட்ட வய­து­டை­ய­வ­ராகத் தோன்றும் குறிப்­பிட்ட பெண், தரையில் ஏற்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்த குழியொன்றில் அமர்ந்­தி­ருக்க, சுமார் 15 ஆண்கள் அவர் மீது கற்களை வீசி அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றுவதை இந்த வீடியோ காட்சி வெளிப்­ப­டுத்­து­கி­றது. அந்த வீடியோ காட்­சியில் கற்கள் உடல் மீது படு­கையில் அந்தப் பெண் உச்ச ஸ்தாயியில் கூக்­கு­ர­லிட்டு அழு­கிறார்.
அங்கு இவ்­வாறு திரு­மணத்­துக்கு அப்பாலான உறவு குறித்து பெண்­ணொ­ரு­வ­ருக்கு கற்களால் எறிந்து மரணதண்டனை நிறைவேற்றப்படு வது இந்த வருடத்தில் இதுவே முதல் தடவையாகும்.    நன்றி வீரகேசரி 





No comments: