நான் ரசித்த கச்சேரி பிரணிதா பாலசுப்ரமணியன்


சிட்னி  இசை விழாவில்  மூன்று தினங்கள்   காலை முதல் மாலை வரை  இசை மழையில் நான் நனைந்தேன். ரஞ்சினி காயத்திரி, உன்னி கிருஷ்ணன், அருணா சாய்ராம், அபிஷேக் ரகுராம், நித்திய ஸ்ரீ, ரவிக்கிரன், பந்துலா ராமா போன்ற  உலகில் உள்ள மிக பிரபல்லியமான கர்நாடக சங்கீத மகான்கள் சிட்னி மேடையை அலங்கரித்தனர்.  இவரகளுடன் புகழ் பெற்ற பக்க வாத்திய வித்துவான்களும் வருகை தந்தனர்.  இவர்கள் எல்லோரும் மிகவும் சிறப்பாக, வியக்கதைக்க முறையில் இசை மழை பொழிந்தனர். ஆனாலும் என்னக்கு மிகவும் பிடித்த கச்சேரி ரஞ்சினி காயத்திரியின் இசை நிகழ்ச்சி.
ரஞ்சினி காயத்திரி என்பவர்கள் சங்கீத உலகிலே   பல விருதுகளும்  பட்டங்களும்  பெற்றவர்கள்.  அவர்களுடைய   பெரும் கடல் போன்ற சங்கீத ஞானத்தால்  பலருடைய  உள்ளங்களை  கொள்ளைக் கொண்டவர்கள்.
இவர்களுடைய கச்சேரியை  கேட்பதற்கு  நான் மிகுந்த ஆவலுடன் சென்றிருந்தேன்.  முத்தையா பாகவதர் இயற்றிய “ கம் கணபதே”  என்ற கீர்த்தனையோடு தங்களுடைய கச்சேரியை அழகாக  சிரித்த முகத்தோடு ஆரம்பித்தனர்.  இப் பாடல் ஹம்சத்வனி ரகத்திலும்  திஸ்ர நடை ஆதி தாள திலும்  அமைந்திருந்தது.   இது எனக்கு  ஒரு மிகவும் பிடித்த கீர்த்தனை என்ற படியால் கச்சேரியின் ஆரம்பத்தில் இருந்தே  நான் இசை கடலில்  மூழ்கி விட்டேன். இதைத் தொண்டர்ந்து பல அருமையான  இனிமையான  கிருதிகளை பாடி என்னை மகிழ்வித்தனர் .அவர்கள்   பாடிய பாட்டுகளின்  ராகங்கள் மிகவும் ரம்மியமாக  இருந்தது.  சில ராகம்க மிகவும் அரிதாக  பாடும் ராகங்கள்.
இவர்களுடைய   கச்சேரியின்  சிறப்பு அம்சம்  என்னவென்றால் “ ராகம் தானம் பல்லவி” என்பதை  இரட்டை ராகங்களில் பாடினர்.  "ஆரபி மானம் வைத்து ஆதரிப்பார்   என்னை  ஆனந்த பைரவி"   என்ற பல்லவியை எடுத்துக்கொண்டு ஆரபி ராகத்திலும் ஆனந்தபைரவி ராகத்திலும் பாடினர்.  அதுமட்டும் அல்ல வியக்கத் தக்க முறையில் ஆனந்தப்ஹைரவியில் ஆரம்பித்து சிந்து பைரவி, நட்ட பைரவி, வசந்த பைரவி, அஹிர் பைரவி, சலக பைரவி என்று  எல்லாவிதமான   பைரவி  ராகங்குக்குள்ளேயும்  புகுந்து விளளையாடினர்.   இது   அவர்களுடைய மனோதர்ம  திறன்களை  பெரிதும் வெளிபடுத்திய   பாடலாக அமைந்திருந்தது..
 மேலும் இவர்கள் பாடும் போது  குரல்கள்  இணைந்து  இனிமையாக ஒலித்தது
அவர்கள் மாறி  மாறி  பாடும் போது   கேட்பதற்கு  நன்றாக இருந்தது
அதே நேரம் ஒருவர் பாடும் போது மற்றவர்  ரசிப்பார்  ஊக்கபடுத்துவர்     அதுவும் பார்க்க நன்றாக இருக்கும். அதோடு   பக்க  வாத்தியகாரர்கள்  இவர்கள் பாட்டுக்கு இன்னும் அழகு  சேர்த்தனர்  அதனால் நான் இந்த கச்சேரியில் மயங்கி  போனேன்
இவ் அருமையான கச்சேரியை நிறைவு செய்வதற்கு  “அபங்கில்”  ஒரு மிகவும் ஆழமான் கருத்துள்ள பாடலை பாடினார்கள்இதை பாடுவதற்கு முன்னரே இப் பாட்டில் அடங்கியுள்ள கருத்தை ரசிகர்களுக்கு எடுத்துரைத்தனர்.  அவர்கள் கூறிய கருத்து என்னவேன்றால்,  ஒருவர், தங்களை விட குறைந்த நிலையில் இரு பவர்க்கு  உதவும் போது அவர் இறைவனால் அனுப்பப்பட்ட தூதுவன் போல் மதிக்கபடுகிரார்.  அப்படி உதவி செய்பவரை நாம்  "சாது "  அன்று போற்றவேண்டும் என்று  கூறி இப் பாடலை பாடினார்கள். சங்கீத உலகிலே அபாங் என்ற கவி நடையில் அமைந்த பக்தி பாடல் பாடுவதில் ரஞ்சினியும் காயத்ரியும் திறமை மிக்கவர்கள். இதனால் ரசிகர்கள் இன்னும் ஒருa’ அபங்” பாடும் படி வேண்டுகோள் விடுத்தார்கள். ஆனால் அவர்களுக்கு கொடுத்த நேரம் முடிந்துவிட்டதால் அவர்களால் பாட முடியவில்லை.  அத்துடன் அவர்க ளுடைய  கச்சேரி நிறைவு பெற்றது.
இப்பிடியான  மிகவும் அருமையான  கச்சேரியை கேட்பதற்கு மிகவும்  அதிஷ்டமுள்ளவராகிறேன்.   வேறு பல நாடுகளில் சிட்னியை விட பல சங்கீத ரசிகர்கள் இருக்கின்றனர்.   அவர்களுக்கு அதிகமாக  பல வருடங்களுக்கு ஒரு முறை  ஒரு சங்கீத விழாவிற்கு போயிருப்பர்.   அனால் சிட்னியை போல இவர்களுக்கு  ஒவ்வொரு ஆண்டும்  ஒரு சிறந்த  சங்கீத விழா போவதற்கு  வாய் ப்பு பெறுவது மிகவும் குறைவு  என்ற காரணத்தினால் கடந்த ஒன்பது வருடங்களாக நடக்கும்  இந்த இசை விழாவில்  கலந்து கொள்ள நான்  மிகவும் கொடுத்து வைத்து  உள்ளேன்.






No comments: