உலகச் செய்திகள்


நீச்சல் உடையில் இருந்த கருப்பின பெண் மீது சரமாரியாக தாக்குதல்: பொலிஸ் அதிகாரி பணிநீக்கம்

ஹெய்ட்­டியில் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்­தைகள் அறு­வைச்­சி­கிச்சை மூலம் வெற்­றி­க­ர­மாக பிரிப்பு

ஈராக்­கிய தலை­ந­கரில் குண்டு தாக்­கு­தல்கள்; 18 பேர் உயி­ரி­ழப்பு

மண்சரிவை தொடர்ந்து அடுத்த சோகம் : நேபாளத்தில் இன்று இரு நிலநடுக்கங்கள்..!







நீச்சல் உடையில் இருந்த கருப்பின பெண் மீது சரமாரியாக தாக்குதல்: பொலிஸ் அதிகாரி பணிநீக்கம்

08/06/2015 அமெரிக்காவில், பொது இடத்தில் நீச்சல் உடையில் இருந்த கருப்பினப் பெண்ணை பொலிஸ் அதிகாரி ஒருவர் கண்மூடித்தனமாகத் தாக்கும் வீடியோ யூ-டியூபில் பரவியதையடுத்து அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.


டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள மெக்கின்னி நகர பொலிஸாருக்கு கடந்த வெள்ளிக்கிழமையன்று, கிரைக் ராஞ்ச் என்ற இடத்திற்கு அருகே சிலர் பொதுமக்களுக்கு இடையூறு செய்வதாக முறைப்பாடு கிடைத்துள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸாரில் ஒருவர் அங்கு நீச்சல் உடையில் இருந்த பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளார்.
இதைத் தடுக்க வந்த இளைஞர்களிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளார். மிகவும் சுமூகமாக கையாண்டிருக்கக் கூடிய சூழலை தனது ஆர்வக் கோளாறால் தேவையற்ற பதட்டத்தை உருவாக்கியுள்ளார் என பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தை அங்கிருந்த ஒருவர் தனது கையடக்கத்தொலைபேசில் படம்பிடித்து அதை யூ-டியூபில் பதிவேற்றம் செய்துள்ளார். 
குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியதையடுத்து நாடு முழுவதும் இருந்து குறித்த பொலிஸ் அதிகாரிக்கு எதிராக கடும் எதிர்ப்பு கிளம்பியது. 
இதையடுத்து அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதேவேளை குறித்த பொலிஸ் அதிகாரியின்  செயல் கவலையளிப்பதாக அந்நாட்டு பொலிசார் தெரிவித்துள்ளனர்.   நன்றி வீரகேசரி 




ஹெய்ட்­டியில் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்­தைகள் அறு­வைச்­சி­கிச்சை மூலம் வெற்­றி­க­ர­மாக பிரிப்பு

09/06/2015 ஹெய்ட்­டியில் ஒட்டிப் பிறந்த 6 மாத இரட்டைப் பெண் குழந்­தை­களை அறு­வைச்­சி­கிச்சை மூலம் வெற்­றி­க­ர­மாக பிரித்து சர்­வ­தேச சத்­தி­ர­சி­கிச்சை நிபு­ணர்­களைக் கொண்ட குழு­வொன்று சாதனை படைத்­துள்­ளது.

வயிற்றுப் பகு­தியில் ஒட்­டிய நிலையில் பிறந்த மரியன் மற்றும் மிசெல்லி பெர்னார்ட் ஆகிய இந்த இரு குழந்­தை­களும் அமெ­ரிக்க லொஸ் ஏஞ்சல்ஸ் நகர சத்­தி­ர­சி­கிச்சை நிபு­ணர்­க­ளான ஜேம்ஸ் ஸ்ரெயின் மற்றும் ஹென்றி போர்ட் உள்­ள­டங்­க­லாக 18 மருத்­து­வர்கள் மற்றும் மருத்­து­வ ­தா­தி­களைக் கொண்ட குழு­வி­னரால் 7 மணி நேர அறு­வைச்­சி­கிச்சை மூலம் பிரிக்­கப்­பட்­டுள்­ளன.
இத்­த­கைய அறு­வைச்­சி­கிச்சை ஹெய்ட்டியில் மேற்கொள்ளப்படுவது இதுவே முதல் தடவையாகும்.   நன்றி வீரகேசரி












ஈராக்­கிய தலை­ந­கரில் குண்டு தாக்­கு­தல்கள்; 18 பேர் உயி­ரி­ழப்பு

11/06/2015 ஈராக்­கிய தலை­நகர் பக்­தாத்தில் இடம்­பெற்ற தொடர் குண்டுத் தாக்­கு­தல்­களில் குறைந்­தது 18 பேர் பலி­யா­ன­துடன் பலர் காய­ம­டைந்­துள்­ளனர்.

அந்­ந­கரின் பலஸ்­தீன வீதி­யி­லுள்ள உண­வ­க­மொன்­றுக்கு அண்­மையில் இடம்­பெற்ற தாக்­கு­தலில் மட்டும் 8 பேர் பலி­யா­கி­யுள்­ளனர்.
இந்தத் தாக்­கு­தல்­க­ளுக்கு எந்­த­வொரு குழுவும் உரிமை கோராத போதும் ஐ.எஸ். தீவிரவாதிகளே காரணம் என நம்பப் படுகிறது.   நன்றி வீரகேசரி 









மண்சரிவை தொடர்ந்து அடுத்த சோகம் : நேபாளத்தில் இன்று இரு நிலநடுக்கங்கள்..!


12/06/2015 நேபாளத்தில் இன்று 2 முறை தொடர்ந்து நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
நேபாளத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி  ஏற்பட்ட 7.9 ரிக்டர் சக்திவாய்ந்த  நிலநடுக்கத்தில்  நேபாளத்தில் இலட்சகணக்கான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமானது.  நில நடுக்க பாதிப்பால் இதுவரை 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர். இலட்சகணகானவர்கள் வீடுகளை இழந்து  பாதிக்கப்பட்டுள்ளனர்.

முதலில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கததை தொடர்ந்து  நேபாளத்தில் அடிக்கடி  நில அதிர்வுகள் ஏற்பட்டு வருகிறது.  
கடந்த ஏப்ரல்  25ஆம் திகதிக்கு பிறகு நேபாளத்தில் 4 ரிக்டர்களுக்கும் மேலான அளவில் இதுவரை 300 முறை நில அதிர்வுகள் பதிவாகியுள்ளன. 
இந்நிலையில் இன்றும் நேபாளத்தில் அடுத்தடுத்து இரண்டு முறை நில அதிர்வு உணரபட்டுள்ளது. இன்று அதிகாலை 1.22 மணியளவில் தோலகா மாவட்டத்தில் மையம் கொண்டு 4.4 ரிக்டர் அளவில் நில அதிர்வு ஏற்பட்டது. பின்னர் 10.19 மணியளவில் மீண்டும் அதே இடத்தில் மையம் கொண்டு 5.3 ரிக்டர் அளவில் நில அதிர்வு ஏற்பட்டது.
இதேவேளை நேபாளத்தின் வடகிழக்கு பகுதியில் நேற்று ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவில் சிக்கி 41 பேர் உயிரிழந்துள்ள தோடு ஆறு கிராமங்கள் மண்ணில் புதையுண்டமையும் குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி

No comments: