கவிதை - காவிரிமைந்தன்


.
தனிமை

ஓங்கி வளரும் தென்னை
ஒன்றைப் பார்த்தால் தனிமை!
பொங்கும் மா கடலெங்கும்
ஒருங்கே கண்டால் தனிமை!
பிறவியின் துவக்கம் தனிமை!
துறவியின் விருப்பம் தனிமை!
தொடங்கும் புள்ளி தனிமை!
முடியும் பயணம் தனிமை!
அறிஞன் பாதை தனிமை!
அவையில் தலைமை தனிமை!
அடடா எத்தனைத் தனிமை!
ஏடெடுப்போம்! எழுதிக் குவிப்போம்!
தனிமை சிறப்பு இதழ் படைப்போம்!!
அடுத்தத் தலைப்பு  தனிமை

ஆசை
மானுட வாழ்வின் இரகசியப் பட்டயம்!
தோன்றும் ‘ஆசை தொடரும் பயணம்!
ஆசையின் விளைச்சல் அமோகம் என்பதே
ஆரம்பாகும் ‘உயிரும்  சொல்லுமே!
அடுத்து அடுத்து என்றே முழங்கும்
ஆசைக் கடலின் அலைகள் எத்தனை!
கற்பனை மேகம் பொழியும் எனினும்
காத்திருக்கும் கூட்டமே அதிகம்!
போதும் என்று சொல்வது அரிது!
வேண்டும்.. வேண்டும் என்பது மனது!!
எங்கே இல்லை  ஆசை?  எதிலே இல்லை  ஆசை?
கவிதை எழுதவும் ஆசை என..
எழுதிக்காட்டுவோம் வாருங்கள்!
ஆசை என்பதே அடுத்தத் தலைப்பு

No comments: