.
போட்டிகள் 18.04.2010 ஞாயிறு மாலை துர்கா தேவி தேவஸ்தானத்தில் இடம் பெற்றது.
பாலர் பிரிவு முதல் அதிமேற்பிரிவுவரை பல பிரிவினராக மாணவர்கள் இதில் பங்குபற்றியிருந்தார்கள்.
ஜந்து வயதிற்கு குறைவான குழந்தைகள் வர்ணம் தீட்டும் போட்டியில் பங்கு கொண்டு கொடுக்கப்பட்ட கடவுள் படங்களுக்கு மிக அழகாக வர்ணம் தீட்டியிருந்ததை பார்க்கக் கூடியதாக இருந்தது. போட்டிகள் 1 மணிக்கு ஆரம்பமாகி 5.30 மணிக்கு நிறைவடைந்தது. கோட்டியில் பங்கு கொண்ட மாணவர்களுக்கான முடிவுகள் உடனுக்குடன் அறிவிக்கப்பட்டது மாணவர்களை உற்சாகமூட்டியது.
துர்க்கை அம்மன் ஆலய சமய அறிவுப் போட்டிக் குழுவினர் இதுபற்றி குறிப்பிடும்போது இது மூன்றாவது வருடமாக இடம் பெறுவதாக குறிப்பிட்டார்கள். வருடாவருடம் போட்டியாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாகவும் அடுத்த வருடம் இன்னும் அதிக மாணவர்கள் பங்குபற்றுவார்கள் என்று எதிர் பார்ப்பதாகவும் கூறினார்கள்.
சிட்னியில் ஞாயிறு மாலையில் பல கலைநிகழ்ச்சிகள் இருந்த போதும் நடுவர்களின் உதவியும் ஒத்துழைப்பும் நன்றாக இருந்தது என்று குறிப்பிடப்பட்டது..
போட்டியில் நடுவர்களாக பங்குபற்றியவர்களில் மூவர்.
போட்டியில் பங்கு கொண்டவர்களில் ஒருபகுதியினர்.
போட்டியில் நடுவர்களாக பங்குபற்றியவர்களில் சிலர் .
பாலர் பிரிவில் சில மாணவர்கள்.
அறிவுப் போட்டி உறுப்பினர்களில் சிலர்
No comments:
Post a Comment