படித்து சுவைத்த கவிதை -முகிலாய் நினைவும்..

.




சாளரத்தால் அறைக்குள் குதித்த சூரியன்
பல்லி போல
சுவரில் ஊர்ந்து செல்கிறான்

மாலைவானில் பார்த்த மேகங்களை
காலைவானில் காணக்கிடைக்கவில்லை
நேற்றுவரை என்னோடிருந்தவர்களை
அது நினைவுறுத்துகிறது

இன்று புதிதாய் எத்தனை மேகங்கள்!
எவையும் என்னை அறியா
கேள்வியுறல் அறிதலாகா
இன்னும் சில நாளி இருக்க முடிந்தால்
ஒரு சிரிப்பு, சில வார்த்தை
பயணத்தில் வேகமாய்க் கடக்கும்
நிலக்காட்சிபோல் துளியெனினும்
விழிக்குள் இவற்றின் ஞாபகவிம்பம்
விழுந்து விடலாம்

நமது வைத்திய கலாநிதிகளை தமிழ்முரசுஒஸ்ரேலியா வாழ்த்துகிறது.

.

Royal Australian College of Generaral Practice  (RACGP) அமைப்பினால் வருடாவருடம் வழங்கப்படும்  NSW General Practice of the Year Award நம் மத்தியில் வாழ்ந்து,  நமது மக்களுக்கு அரிய பல சேவைகளை ஆற்றி வருகின்ற வைத்திய கலாநிதிகள் Thava Thavaseelan, Shanthini Thavaseelan, Lumina Titus ஆகியோரினால் Toongabbie, NSW இல் நடாத்தப் படுகின்ற Bridge View Medical Centre சிகிச்சை நிலையத்திற்கு கிடைத்திருப்பது பாராட்டுக்குரியது.
Royal Australian College of Generaral Practice  (RACGP) இனால்New South Wales  மானிலத்தில் இவ்வருடத்திற்கான அதிசிறந்த சிகிச்சை நிலையமாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது Bridge View Medical Centre . இது நமது சமுதாயத்திற்கு கிடைத்த நன்மதிப்பாகும்.


எமது வாசகர்கள் சார்பாக எமது வாழ்த்துக்களை அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்வதில் தமிழ்முரசுஒஸ்ரேலியா மகிழ்ச்சி அடைகிறது.
 

Bridgeview Medical Practice awarded 2013 RACGP NSW General Practice of the Year

பகவான் சத்திய சாய் பாபா அவர்களை நினைவு கூருவோம்



 புட்டபர்த்தி சத்திய சாய் பாபா அவர்களின்  பாததாமரைக்கு– ஒரு அர்ப்பணம்!


     காற்று வீசும் போதும்
        கடவுள் சாயி வருவார்!
     ஆற்றல் குறையும் போதும்
        அன்னை சாயி வருவார்!
     மாற்றம் தெரியும் போதும்
        மாதவ சாயி வருவார்!
     போற்றிப் பூசைசெய்தால்
        புரிந்தே அருளும் தருவார்!

பார்த்து ரசித்த A GUN AND A RING திரைப்படம் - செ .பாஸ்கரன்

.



ஞாயிற்றுக்கிழமை 4 மணிக்கு இந்த திரைப்படத்தைப் பார்க்க ஓபன் றீடிங் சினிமாவிற்கு சென்றபோது நண்பர் ரஞ்சகுமாரையும் சக்திவேலையும் கண்டு கதைத்துக்கொண்டு சென்றேன் தியேட்டரை அடைந்த போது ஒரு சில தமிழர்கள் அதுவும் இலக்கியத்தோடு நெருக்கமானவர்களை மட்டுமே பார்க்கக் கூடியதாக இருந்தது. உள்ளே சென்று அமர்ந்தபோது ஒரு 30 பேர்வரைதான் பார்வையாளர்கள் இருந்தார்கள்.

சீன திரைப்பட விழாவிற்கு தெரிவுசெய்யப்பட்ட ஒரு தமிழ்ப்படத்தை பார்ப்பதற்கு வந்திருந்தவர்களின் எண்ணிக்கையை பார்த்தபோது வேதனையாக இருந்தது. அது மட்டுமல்ல 1999 என்ற ஒரு நல்ல திரைப்படத்தை தந்த லெனின்தான் இந்தப்படத்தையும் நெறியாள்கை செய்திருந்தார். இதே ஒரு இந்திய படமாக இருந்திருந்தால் இன்று எவ்வளவு கூட்டம் வந்திருக்கும். ஏன் என்ற கேள்வி மண்டையை குடைந்துகொண்டிருந்தபோதே படம் ஆரம்பமானது.

காட்சிகள் நகர்ந்துகொண்டிருக்க நானும் இருக்கையின் விளிம்புக்கு நகர்ந்துகொண்டிருந்தேன். மனதை வருடிச்செல்லும் இசையுடன் முழுநிலவை காட்டியபடி பாடல் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அது பாடல் அல்ல மனதை சுண்டியிழுக்கும் அற்புத கவிதையொன்று.

ஆறு சின்னக்கதைகளாக எம் மண்ணின் வலிதான் உலகெங்கும் உள்ள வலி என்றும் கனடாவின் புலப்பெயர்வு வாழ்க்கையோடு இந்தவலி எப்படி பிணைந்து கிடக்கிறது என்பதையும் வலிநிறைந்த அழகிய சினிமாவாக பேசியிருக்கிறார் லெனின் எம் சிவம்.


"மானி இன்னிசை மாலை 2013

.


சிட்னி மானிப்பாய் இந்துக்கல்லூரி,மானிப்பாய் மகளிர் கல்லூரி பழையமாணவ சங்கத்தினரின் ஒன்றுகூடல் கடந்தஞாயிற்றுக்கிழமை 24.11.2013 சிட்னி வென்ட்வேத்தில் உள்ள றெட்கம்மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.நிகழ்ச்சி 6.30ஆரம்பமானது.நிகழ்ச்சிக்கு பிரதம விருந்தினராக மானிப்பாய்இந்துக்கல்லூரியின் பழைய மாணவியும்,மானிப்பாய் மகளிர்கல்லூரியின்முன்னாள் ஆசிரியருமாகிய திருமதி  செயோன் கலந்து கொண்டுசிறப்பித்தார்.
நிகழ்ச்சியை திரு திருமதி செயோன் அவர்கள் மங்கள விளக்கெற்றிஆரம்பித்து வைத்தார்.அதனை தொடர்ந்து மானிப்பாய் இந்துக்கல்லூரி/மானிப்பாய் மகளிர் கல்லூரியின் பழைய மாணவர்களினால் கல்லூரி கீதம்பாடாப்பட்டது.


முத்தமிழ் மாலை 2013 - 8 Dec 2013





புஸ்பராணியின் அகாலம் - நடேசன்



akaalamஅகாலம் நூலை படித்து முடித்துவிட்டு கைத்தொலைபேசியில் நேரத்தைப் பார்த்த போது இரவு ஒரு மணியாகிவிட்டது. அதன் பின்பு குளியலறைக்குச் சென்று வந்தபோது ‘ என்ன இந்த அகாலத்தில் லைட்டை போட்டுவிட்டு திரிகிறீங்கள்’ என்றாள் எனது பிரிய மனைவி. அவருக்கு ஏற்கனவே குறைந்தது மூன்று மணிநேரத்து நித்திரை முடிந்திருக்கும். இதுவரை நேரமும் புத்தகம் வாசித்தேன் எனப் பதில் சொல்லியிருந்தால் ‘கண்டறியாத புத்தகம் இந்த நேரத்தில்’ என வார்த்தைகள் வந்திருக்கும்

நான்குமணி நேரம் தொடர்ச்சியாக ஒரு நூலை வாசித்து பல காலமாகி விட்டது. பல நூல்களை முகவுரை மற்றும் சில அத்தியாயங்கள் எனப் பார்த்துவிட்டு வைத்துவிடுவேன். சிலநாட்களின் பின்னர் 25 அல்லது 30 பக்கங்கள் படித்துவிட்டு மீண்டும் வைத்துவிடுவேன். பெரும்பாலும் இந்தப் பரிசோதனையில் நூல் தேர்வடைந்து தொடர்ந்து வாசிக்க முடியுமென முடிவுசெய்தால் குறிப்பிட்ட நூலை கையில் எடுத்து மீண்டும் வாசிப்பேன்.

புஷ்பராணி எழுதியிருக்கும் சிறை அனுபவங்களான அகாலம் நூலை படிக்கத்தொடங்கியதும், முதலில் அதன் முன்னுரையை வாசித்துவிட்டு இலங்கையிலிருக்கும் கவிஞர் கருணாகரனை அழைத்து ‘அருமையான முன்னுரை – ஆனால் அதை 17 பக்கத்துக்கு எழுதியிருக்கிறீர்களே சுருக்கியிருந்தால் இன்னமும் சிறப்பாக இருந்திருக்கும்’ என்றேன்.

திரும்பிப்பார்க்கின்றேன் --- 17 -முருகபூபதி

.
மழைக்கும்     பாடசாலைப்பக்கம்      ஒதுங்காதிருந்து       பல்கலைக்கழக விரிவுரையாளரானவர்
கரிசல்       இலக்கியத்தை      மேம்படுத்திய         கி.ராஜநாராயணன்

முருகபூபதி


வள்ளுவர்     கம்பன்       இளங்கோ      பாரதி      முதலான     முன்னோடிகளை  நாம்      நேரில்      பார்க்காமல்      இவர்கள்தான்      அவர்கள்      என்று     ஓவியங்கள்     உருவப்படங்கள்   சிலைகள்  மூலம்  தெரிந்துகொள்கின்றோம்.   இவர்களில்    பாரதியின்     ஒரிஜினல்     படத்தை  நம்மில்      பலர்     பார்த்திருந்தாலும்      கறுப்புக்     கோர்ட்     வெள்ளை தலைப்பாகை    தீட்சண்யமான   கண்களுடன்     பரவலான    அறிமுகம்    பெற்ற  படத்தைத்தான்     பார்த்துவருகின்றோம்.
அந்த    வரிசையில்      வீரபாண்டிய      கட்டபொம்மனை      நடிகர் திலகம்  சிவாஜியின்      உருவத்தில்       திரைப்படத்தில்      பார்த்துவிட்டு      அவரது    சிம்ம கர்ஜனையை     கேட்டு     வியந்தோம்.
 பிரிட்டிஷாரின்      கிழக்கிந்தியக்கம்பனிக்கு      அஞ்சாநெஞ்சனாகத்திகழ்ந்து  இறுதியில்     தூக்கில்      தொங்கவிடப்பட்ட       வீரபாண்டிய    கட்டபொம்மன்  மடிந்த      மண்      கயத்தாறை     கடந்து    1984    இல்   திருநெல்வேலிக்குச்  சென்றேன்.
கட்டபொம்மன்      தூக்கிலிடப்பட்ட       அந்தப் புளியமரம்       இப்பொழுது     அங்கே    இல்லை.

உலகச் செய்திகள்


நேபாலில் தொல்பொருள் சான்றுகள் கண்டுபிடிப்பு: புத்தரின் பிறப்பு குறித்த புதிய தகவல்கள்

சீனாவில் எண்ணெய் குழாயில் வெடிப்பு 52 பேர் பலி; 136 பேர் காயம்

தாய்லாந்தில் அமைச்சுகள் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களால் சுற்றிவளைப்பு

சீனாவின் வான் பரப்பில் பறந்த இரு அமெ­ரிக்க விமா­னங்களால் சர்ச்­சை

பெர்லுஸ்கொனி பாராளுமன்றத்திலிருந்து வெளியேற

நேபாலில் தொல்பொருள் சான்றுகள் கண்டுபிடிப்பு: புத்தரின் பிறப்பு குறித்த புதிய தகவல்கள்

26/11/2013      நேபால் நாட்டின் லும்பினியில் அமைந்துள்ள மாயா தேவி ஆலயத்தில் பௌத்த மதம் தொடர்பான தொல்பொருள் சான்றுகள் கிடைக்கப்பெற்றுள்ளதுடன் அவை கௌதம புத்தரின் பிறப்பு தொடர்பில் மாறுபட்ட தகவலை வெளியிடுவனவாக அமைந்துள்ளன.


புத்தரின் பிறப்பு தொடர்பில் ஏற்கனவே கணிக்கப்பட்டு வெளியிடப்பட்ட ஆண்டுக்கு முன்னதாகவே அவர் பிறந்திருக்கக் கூடும் என ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அவரது பிறந்த இடமான லும்பினியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகளின் போது பல்வேறு புதிய படிமங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

கென்னடி, சே குவேரா, காஸ்ட்ரோ, தொலைக்காட்சி - ஞாநி

.

kennedyபுரட்சி, ஆயுதப் போராட்டம் போன்றவற்றில் எல்லாம் ஆர்வமுடைய இளைஞர்களுக்கு உலகம் முழுவதும் ஆதர்சமான முகம் சே குவேரா. தேர்தல் அரசியல், ஜனநாயகம், நல்லாட்சி போன்றவற்றில் ஈடுபாடுடைய நடுத்தர வகுப்புக்கான சே குவேரா ஒருவர் உண்டென்றால், அது ஜான் ஃபிட்ஸ்ஜெரால்ட் கென்னடி. இருவரும் வசீகரமான தோற்றம் உடையவர்கள் என்பதால், ஏறத்தாழ சினிமா நட்சத்திரங்களின் கவர்ச்சி அந்தஸ்தை அடைந்தவர்கள். இருவருக்குள்ளும் மற்றபடி எந்த ஒற்றுமையும் கிடையாது.

சே குவேராவும் கென்னடியும் சம காலத்தவர்கள். ஃபிடல் காஸ்ட்ரோவும் சேவும் புரட்சியை வழிநடத்தி 1957-ல் கியூபாவை விடுவித்தபோது, கென்னடி அமெரிக்க செனட்டராக இருந்தார். அடுத்த நான்கு ஆண்டுகளில் கென்னடி அமெரிக்காவின் தேர்ந்தெடுக்கப்பட்ட மிக இளம் அதிபரானபோது அவருக்கு வயது 43. சேவுக்கு வயது 33.

அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் அனுபவப்பகிர்வு

.

அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் அனுபவப்பகிர்வு    நிகழ்ச்சி எதிர்வரும் 07-12-2013 சனிக்கிழமை மாலை 3.30 மணிக்கு     மெல்பனில் வேர்மன் சவுத் சமூக மண்டபத்தில்
(Vermont South Community House,  Karobran  Drive, Vermont South - Victoria 3133)
நடைபெறும்.
சிறுகதை இலக்கியம் தொடர்பாக நடைபெறவுள்ள அனுபவப்பகிர்வு  நிகழ்ச்சியில் கருத்துக்களை தெரிவித்து கலந்துரையாடலில் பங்குபற்றுமாறு    இலக்கிய சுவைஞர்களை அன்புடன் அழைக்கின்றோம்.
அன்புடன்
லெ.முருகபூபதி
செயலாளர்
அவுஸ்திரேலியா   தமிழ்   இலக்கிய   கலைச்சங்கம்
(03) 513 46 771 - 04 166 25 766

மெல்பேர்ண் நகர் ”மாவீரர் நாள்”

.

தாயக விடுதலைப்போரில் தங்களுடைய இன்னுயிர்களை ஈந்து வித்தாகிப்போன மாவீரர்களை நினைவுகூரும் மாவீர்நாள் நிகழ்வு அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ணில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. ஹங்கேரியன் மண்டபத்தில் 27 - 11 – 2013 புதன்கிழமை அன்று நடைபெற்ற இந்த உணர்வெழுச்சிநாள் நிகழ்வில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உணர்வுபூர்வமாகக் கலந்துகொண்டு மாவீரச் செல்வங்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
மாலை 6 மணிக்கு நாடுகடந்த தமிழீழ அரசின் அவுஸ்திரேலிய பிரதிநிதிகளில் ஒருவரும் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் மூத்த செயற்பாட்டாளருமான  திரு சபேசன் சண்முகம் அவர்கள் பொதுச்சுடரை ஏற்றிவைத்தார். அதனைத் தொடர்ந்து அவுஸ்திரேலிய தேசியக்கொடியை திருமதி Margaret Tonkin அவர்கள் ஏற்றி வைத்தார். இவர், அகதிக் கோரிக்கை ஏற்கப்பட்ட பின்னர் அவுஸ்திரேலியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்ற பேரில் காலவரையறையற்றுத் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகள் தொடர்பில் கரிசனையுடன் பணியாற்றி வருபவர். தொடர்ந்து தமிழீழத் தேசியக்கொடியை தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த திரு. கரன் மயில்வாகனம் அவர்கள் ஏற்றிவைக்க, அடுத்து ஈகச்சுடரேற்றல்கள் இடம்பெற்றன.

இலங்கைச் செய்திகள்

முல்லைத்தீவில் சிங்களவர்களால் நில அபகரிப்பு: துரைராசா நேரில் சென்று பார்வை

கூடி கதைத்துக்கொண்டிருந்த இளைஞர்கள் மீது இராணுவத்தினர் சரமாரியாக தாக்குதல்

நாடு கடத்தப்பட்டார் நடிகர் ஜெயபாலன்

நெடுந்தீவு பிரதேசசபையின் தலைவர் றஜீப் சடலமாக மீட்பு

வெளிநாடு செல்லும் பெண்கள் 15 பவுண் நகைகளையே அணிந்து செல்ல முடியும் : சுங்கத்திணைக்களம் யோசனை

பிரதேச செயலாளரை தகாத வார்த்தைகளால் ஏசி தாக்க முயற்சித்த விகாராதிபதி

ஐங்கரநேசனின் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல்

சிவாஜிலிங்கத்தின் அலுவலகத்துக்கு முன்னால் மலர் வளையம் வைத்து அச்சுறுத்தல்



அவுஸ்திரேலியாவில் திருத்தொண்டர் விழா

.

திருத்தொண்டர் விழா என்று ஒரு பெரு விழா அவுஸ்திரேலியா நியுசவுத்வேல்ஸ் மானிலத்தில் ஹெலன்ஸ்பேக்கில் அமைந்துள்ள ஸ்ரீவெங்னடடேஸ்வரர் ஆலய நிர்வாகத்தினரால் கடந்த ஞாயிறு 24.11.2013 அன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பெற்றது. ஆலயத்தின் சிவன் கோயில் வளாகத்தில் கடந்த வருடம் 63 நாயன்மார்களுக்கும் 9 தொகை அடியார்களுக்கும் சேக்கிழாருக்கும்  மாணிக்கவாசகருக்கும் அவற்றோடு திருதி வளம்புரி விநாயகருக்கும் கருங்கல் விக்கிரகங்கள் பிரதிஷ்டை நிகழ்வுற்றது. அந்த நிகழ்வின் ஓராண்டு நிறைவு குறித்தும் வருடாந்த விழாவாகவும் இது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


வீரத்துறவி விவேகானந்தரின் 150வது நினைவு ஆண்டு

.
மகான் ஆன மனிதன்
கலாநிதி சந்திரிகா சுப்ரமண்யன்

இளந்துறவி சுவாமி விவேகானந்தர் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற கொள்கையை முரசறைந்தவர். வீரத்துறவி, வேதாந்த சிங்கம், என்றெல்லாம் புகழப்பட்டவர்.
 ஸ்ரீ  ராமகிருஷ்ண பரமஹம்சரின்  முன்னணி சீடரான இவரின் கருத்துக்கள் இளைஞர்களை எழுச்சியடையச் செய்தவை. மனித சமத்துவம் என்பது  உலக சகோதரத்துவதில் இருந்து மட்டுமே கிட்டும்  உண்மையை அன்றே உலகுக்கு எடுத்துச் சொன்னவர். மதம்,  மாகாணம்,  ஜாதி, மொழி, இனம் போன்ற பல்வேறு வேற்றுமைகள் உலகில் சண்டைகளை ஏற்படுத்திக் கொண்டிருந்தாலும், வேற்றுமையில் ஒற்றுமை காணும் பரந்த மனப்பான்மையை உருவாக்கியவர் சுவாமி விவேகானந்தர்.விவேகானந்தர் துறவுடன் நின்றுவிடாமல் தனது சமூக லட்சியங்களை நிறைவேற்றவும் ஆதரவற்ற இந்தியாவின் நலிந்த சமூகத்தினருக்கு தொண்டாற்றவும் 1897 ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி ராமகிருஷ்ண சங்கத்தை நிறுவினார்.
ஒருவர் குருவாக அடையாளம் காணப்படுவது பின்வருவனவற்றில் ஏதாவது ஒன்று நிகழ்ந்திருப்பதனால் மட்டுமே.
அவரது பிறப்பு,  அவர் கூறும்  கருத்துக்கள், அக்கருத்துக்கள் மக்களிடையே ஏற்படுத்தி உள்ள  தாக்கம் ஆகியவையாகும்.
அதாவது
1.   
.
தாயக விடுதலைப்போரில் தங்களுடைய இன்னுயிர்களை ஈந்து வித்தாகிப்போன மாவீரர்களை நினைவுகூரும் மாவீர்நாள் நிகழ்வு அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ணில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. ஹங்கேரியன் மண்டபத்தில் 27 - 11 – 2013 புதன்கிழமை அன்று நடைபெற்ற இந்த உணர்வெழுச்சிநாள் நிகழ்வில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உணர்வுபூர்வமாகக் கலந்துகொண்டு மாவீரச் செல்வங்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
மாலை 6 மணிக்கு நாடுகடந்த தமிழீழ அரசின் அவுஸ்திரேலிய பிரதிநிதிகளில் ஒருவரும் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் மூத்த செயற்பாட்டாளருமான  திரு சபேசன் சண்முகம் அவர்கள் பொதுச்சுடரை ஏற்றிவைத்தார். அதனைத் தொடர்ந்து அவுஸ்திரேலிய தேசியக்கொடியை திருமதி Margaret Tonkin அவர்கள் ஏற்றி வைத்தார். இவர், அகதிக் கோரிக்கை ஏற்கப்பட்ட பின்னர் அவுஸ்திரேலியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்ற பேரில் காலவரையறையற்றுத் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகள் தொடர்பில் கரிசனையுடன் பணியாற்றி வருபவர். தொடர்ந்து தமிழீழத் தேசியக்கொடியை தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த திரு. கரன் மயில்வாகனம் அவர்கள் ஏற்றிவைக்க, அடுத்து ஈகச்சுடரேற்றல்கள் இடம்பெற்றன.
தொடர்ந்து என்பது மாவீரர் குடும்பங்களை சேர்ந்தோர் தமது மாவீரச் செல்வங்களுக்கு ஈகச்சுடரேற்றி, மலர்வணக்கம் செய்தனர். அதன்பின்னர் இடம்பெற்ற அகவணக்கத்தைத் தொடர்ந்து துயிலுமில்லப்பாடல் ஒலித்தது. மண்டபத்தில் நிறைந்திருந்த அனைவரினதும் கைகளில் தீபங்கள் எரிந்துகொண்டிருக்க அப்பாடல் முழுவதும் உணர்வுமயமாக மக்கள் ஒன்றித்திருந்தனர். அதைத் தொடர்ந்து பொதுமக்களின் மலர்வணக்கம் மிகவும் உணர்வுபூர்வமானதாக ஓரு மணிநேரத்திற்கும் மேலாக நடைபெற்றது.

மாத்தளை சோமுவின் கதைகளில் செவ்வியல் இலக்கியங்களின் தாக்கம்

.  

mathalaisomu

இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் கூர்ந்து நோக்கப்பட வேண்டியனவாகும். தொடர்ந்து தமிழக இலக்கிய வளர்ச்சியோடு இணைந்து போட்டி போட்டுக் கொண்டு வளர்ந்துவரும் இலங்கைத் தமிழ் இலக்கியம் தற்போது புலம்பெயர்ந்தோர் இலக்கியமாக உலக நாடுகளில் பரவி நிற்க வேண்டிய சூழலை அடைந்துள்ளது. கி.பி. 1983 ஆம் ஆண்டு முதல் இலங்கையின் அரசியல் சூழல் காரணமாகப் புலம் பெயர்தல் என்பது தவிர்க்க முடியாததாகிவிட்டது. புலம் பெயர்தல் வழியாகப் பல தரப்பட்டவர்களும் வெளியேற வேண்டிய சூழல் உருவானபோது எழுத்தாளர்களும் புலம் பெயர்ந்து எழுதத் தொடங்கினார்கள். கருணாமூர்த்தி ஷோபா சக்தி சை.பீர் முகம்மது முருகப+பதி மாத்தளை சோமு அ.முத்துலிங்கம் போன்றோர் இன்றைய நிலையில் இலங்கையில் இருந்து புலம் பெயர்ந்த தமிழ் எழுத்தாளர்களில் குறிக்கத்தக்கவர்கள் ஆவர்.
மாத்தளை சோமு தமிழகத்தின் ப+ர்வீகக் குடியினர் என்றாலும் இலங்கையில் வாழ்ந்தவர். தற்போது புலம்பெயர்ந்து ஆஸ்திரேலியாவில் குடியேறியுள்ளவர். தமிழகத்தின் திருச்சிராப்பள்ளியில் சில காலம் அவ்வப்போது உறைந்துவருபவர். நாவல்கள் சிறுகதைகள் பயணக்கட்டுரைகள் ஆய்வுக்கட்டுரைகள் எனப் பலவற்றை எழுதி வருபவர். இவரின் சிறுகதைகள் தொகுக்கப் பெற்று மாத்தளை சோமுவின் கதைகள் என்று இரு தொகுதிகளாக வந்துள்ளன. இவர் ~~வியக்கவைக்கும் தமிழர் அறிவியல்|| ~~வியக்கவைக்கும் தமிழர் காதல்|| ஆகிய கட்டுரை நூல்களைப் படைத்தளித்துள்ளார். இவ்விரு நூல்களும் செம்மொழித் தமிழ் இலக்கியங்கள் வழியாகத் தமிழர் அடையாளத்தை வெளிப்படுத்துவனவாகும். மேலும் இவர் திருக்குறளுக்கு அறிவியல் நோக்கில் ஓர் அகல உரையைத் தந்துள்ளார். இவை இவர் செம்மொழித் தமிழ் இலக்கியங்களின் மீது கொண்டுள்ள ஈடுபாட்டினை எடுத்துக்காட்டுவனவாக உள்ளன.
இக்கட்டுரையில் மாத்தளை சோமுவின் சிறுகதைகள் – தொகுதி இரண்டு- என்ற தொகுப்பில் செவ்விலக்கியத் தாக்கம் பெற்ற கதைகள் மட்டும் எடுத்துக் கொள்ளப் பெற்று அவற்றின் திறம் ஆராயப் பெறுகின்றன.