திரும்பிப்பார்க்கின்றேன் - முருகபூபதி

.

 ஊடறு  - பெண் படைப்பாளிகளின்  தொகுப்பில் இணைந்திருந்த   தேவா

சிலப்பதிகார  இந்திர  விழாவின்  மகிமையை எழுதியவர் -  ஜெர்மனியின்  கோடை விழாவையும் பதிவுசெய்தார்
 (கடந்த வாரத்தொடர்ச்சி)

                                         

நீர்கொழும்பு  இந்து  இளைஞர்  மன்றத்தின்  மாதாந்த  பௌர்ணமி விழாக்களுக்கு  தேவா   நாடகங்களும்  எழுதித்தந்தார்.  அதில்  ஒன்று அரிச்சந்திரன் - மயான  காண்டம்.    சந்திரமதி  பாத்திரமேற்று நடிப்பதற்கு   எவரும்  முன்வராதமையினால்  நான்  சந்திரமதியானேன்.
தேவாவும்  எனது  தங்கை  ஜெயந்தியும்  எனக்கு  ஒப்பனை  செய்து, எனது  கோலத்தைப்பார்த்து  விழுந்து  விழுந்து  சிரித்தனர்.  ஆனால் நாடகத்தில்  மயானகாண்ட  காட்சியில்  சந்திரமதி,  லோகிதாசனின் உடல்மீது  விழுந்து  கதறிக்கதறி  அழுதபோது  அவர்கள்  இருவரும் திரைக்குப்பின்னால்  நின்று  கண்கலங்கியதாக  அறிந்தேன்.   சில நாட்கள்  அவர்கள்  என்னை   சந்திரமதி  என்றே   அழைத்தனர்.
சந்திரமதியின்  கழுத்தில்  விழுந்த  அட்டைக்கத்தி,  வீசிய வேகத்தில் மடங்கியதனைப்பார்த்து  சபையில்  சிரித்தனர்.
இதனால்   சிறிதுகாலம்  அந்த  அட்டைக்கத்தி  பற்றியும்  நினைத்து நினைத்து   சிரித்தனர்.
அரிச்சந்திரன்  நாடகத்தின்   சந்திரமதி  உங்களை  அழவும்  சிரிக்கவும் வைத்துவிட்டாள்  என்று  நான்  சமாளித்தேன்.
திருஞானசம்பந்தர் - திருநாவுக்கரசர்  சந்திக்கும்  காட்சியையும்  தேவா நாடகமாக   எழுதித்தந்தார்அதில்  வயதில்  குறைந்த  பிள்ளைகள் நடித்தனர்.
தேவாவுக்கும்  நாடகமேடைப் பரிச்சயம்  இருந்தது.   பாடசாலையில் படித்த   காலத்தில்  மாணவர்  இலக்கிய  மன்றத்தில்  அவர் அவ்வையார்  சுட்டபழம்  சாப்பிட்ட  காட்சியில்  அவ்வையாராக நடித்தவர்.
எனது  தொடக்க  கால  சிறுகதைகளை   முதலில்  அவரிடம்  காண்பித்த  பின்னரே  இதழ்களுக்கு  அனுப்புவேன்.   இவ்வாறு  கலை, இலக்கியப்பயணத்தில்   இணைந்திருந்தவர்,  திருமணமாகி ஜெர்மனுக்கு   சென்றதனால்  பெரிய  வெற்றிடம்  தோன்றிய  தாக்கம் நீடித்திருந்தது.
குறுகிய  இரண்டு  ஆண்டு (1972 - 1974 )  காலத்துள்  மல்லிகை, பூரணி,   புதுயுகம்  முதலானவற்றில்  தேவி   என்னும்  புனைபெயரில்  எழுதி  கவனத்தை  பெற்றிருந்தமையால், "  அவர்  எங்கே---? "  என்று மல்லிகை  ஜீவாவும்  பூரணி  மகாலிங்கமும்,   புதுயுகம்  கனகராஜனும்  கேட்டபொழுது  அவருடைய  திடீர்  பயணம் பற்றிச்சொன்னேன்.
" இனி  அவர்  எழுதப்போவதில்லை " - என்று  மல்லிகை  ஜீவா  மிகுந்த  ஏமாற்றத்துடன்  சொன்னார்.   பெண்  எழுத்தாளர்கள்  பலர் திருமணத்தின்  பின்னர்  இலக்கியத்திற்கு  ஓய்வுகொடுக்கின்றனர் என்ற   பொதுவான  கருத்து  அப்போது  நிலவியது.

சிட்னி தமிழ் இலக்கிய கலை மன்றத்தின் திருக்குறள் போட்டியும் ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான சைவசமய அறிவுத் திறன் போட்டியும் – 06.03.2016


நான் உங்கள் ரசிகன் - செங்கைஆழியான் பற்றி காண பிரபா

.
கானா பிரபா 2006ம்  ஆண்டு மடத்துவாசல் இல் எழுதிய கட்டுரை  இது 


முந்தநாள் அதிகாலை மூண்டு மணி தாண்டியும் எனக்கு நித்திரை வரேல்லை. ஊர்ப்பிரச்சனைகள் பற்றின செய்திகள் ஒருபக்கம் கஷ்டப்படுத்திக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் என்ர பழைய நினைவுகள் வேற வந்து, மனசை அலைக்கழிச்சுக்கொண்டிருந்தது. மனசக்கட்டுப்படுத்தினால் தானே நித்திரைச் சனியனும் வரும் என்று எனக்கு நானே அலுத்துக்கொண்டேன்.
அண்டைக்கு வந்து போன நினைவுகளையே ஒரு பதிவாகப் போடலாம் எண்டு படுக்கையிலிருந்தே
என் ஞாபகங்களைக் கோர்த்தேன், இப்படி.....

அப்ப நான் அம்புலிமாமா, பாலமித்திராக்களின்ர அரச கதைககளையும், விக்கிரமாதித்தனும் வேதாளமும் படிச்ச காலத்தில, ஒருநாள் அம்மம்மா வீட்டில எடுத்த ஈழநாடு வாரமலரைப்பிரித்து சிறுவர் பக்கத்தைத் தேடும் போது கண்ணில பட்டது ஒரு தொடர்கதை. 
"கிடுகு வேலி" எண்ட தலைபோட செங்கை ஆழியான் எழுதின கதை தான் அந்த இதழில இருந்து ஆரம்பிச்சிருந்தது. அந்த நேரத்திற்கு எனக்கு எதைக் கிடைத்தாலும் வாசிக்கவேணும் எண்ட வீறாப்பு இருந்ததால மூச்சுவிடாம முதல் அத்தியாயத்தைப் படிச்சுமுடிச்சன். அட .. இவ்வளவு நாளும் நான் வாசிக்காத ஒரு நடையில போகுதே என்று மனசுக்குள்ள நினைச்சன். 
ஈழநாட்டில வந்த "கிடுகுவேலி" வாரந்தத்தொடர்ப்பக்கத்தைக் கத்தரித்து ஒரு சித்திரக்கொப்பி வாங்கி (பெரிய சைஸ் பேப்பரில இருக்கும்) கோதுமை மாப் பசை போட்டு ஒவ்வொரு பக்கத்திலும் ஒவ்வொரு அத்தியாயமாக ஒட்டிக்கொள்வேன்.

கனவுத்துளியின் கண்ணீர் கவிதை - தெய்வீகன்

.
(கடந்த 27 ஆம் திகதி மெல்பனில் நடந்த எட்டுநாடுகளின் கவிஞர்கள் பங்கேற்ற தென்னாசியக்கவிஞர்களின் கவிதா நிகழ்வில் சமர்ப்பிக்கப்பட்ட கவிதை)

ஈழத்தமிழர்களின்  தாயகத்தில்  2009  ஆம்  ஆண்டு  இடம்பெற்ற கொடூரப்போர்  காலத்தின்போது  பிறந்த  குழந்தை  ஒன்று  தன்  தாயின் அரவணைப்பில்  ஒருவாறு  தப்பித்துக்கொள்கிறது.  அப்பிஞ்சுக்குழந்தையை சுமந்துகொண்டு  கடல்வழியாக  ஆஸ்திரேலியா  வந்து  தஞ்சம் புகுந்துகொண்ட  அந்த  அபலை  தாயிற்கு  இங்கு  வந்த  பின்னர்தான் பிரச்சினை   ஆரம்பிக்கிறது.
அதுவரையும்  தொடர்ச்சியான  குண்டு  சத்தங்களையும்  துப்பாக்கி வெடிகளையும்   வரும்போது  கடல்  இரைச்சலையும்  கேட்டு  பழகிவிட்ட குழந்தைபுதிய  தேசத்தில்  எந்த  சத்தமும்  இல்லாத  சூழ்நிலையை அசாதரணமாக  உணர்ந்து  அலறுகிறது.   தனக்கு  சம்பந்தமே  இல்லாத இடத்துக்கு  வந்துவிட்டதாக  நினைத்து  தொடர்ந்து  அழுகிறது.
தனது  பிள்ளையின்  இந்த  நிலைமையை  புரிந்துகொண்டபோதும்  எதுவுமே  செய்ய  முடியாத  அந்த  ஏழைத்தாயின்  கண்ணீர்  தாலாட்டுத்தான்  இந்த  கவிதை -


அனைத்துலகப் பெண்கள் தின விழா 2016 06.03.2016

.
   அவுஸ்திரேலியத்தமிழ் இலக்கிய கலைச்சங்கம்
              
     
        
      அவுஸ்திரேலியத்தமிழ்  இலக்கியக் கலைச்சங்கம்
                  
       அனைத்துலகப் பெண்கள் தின விழா
                     அனைத்துலகப் பெண்கள் தினத்தை முன்னிட்டு அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கியக் கலைச்சங்கம் எதிர்வரும் மார்ச் 06 ஆம் தேதி (06-03-2016) ஞாயிற்றுக்கிழமை  மாலை 3.30 மணிக்கு மெல்பேர்ண் பிரஸ்டன்  நகர  மண்டபத்தில்  (Preston City Hall - Gower Street, Preston, Vic - 3072) விழா ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.
கருத்தரங்கு - கவியரங்கு - விவாத அரங்கு - நினைவரங்கு  மற்றும் கலை அரங்கு ஆகியன  இடம்பெறவுள்ள இவ்விழாவில், எழுத்தாளர்கள் - கலைஞர்கள் பெண்ணியச் சிந்தனையாளர்கள் மற்றும்  அன்பர்களின்  வரவை  ஆவலுடன்  எதிர்பார்க்கிறோம்.
அண்மையில் மறைந்த பெண்ணிய ஆளுமைகளான படைப்பாளிகள் அருண் விஜயராணி - தமிழினி சிவகாமி  ஆகியோரின் ஞாபகார்த்த நினைவுரையும்  இடம்பெறும்.
எமது சங்கம் முதல் முறையாக நடத்தவிருக்கும்  அனைத்துலகப் பெண்கள் தின விழாவுக்கான மேலதிக விபரங்களுக்கு:
விழா ஒருங்கிணைப்பாளர் - சாந்தினி புவனேந்திரராஜா - 0404 703 769
பேராசிரியர் ஆ.சி. கந்தராஜா (தலைவர்)     -                                  (02) 9838 4378
Dr. நடேசன்    (செயலாளர்)              -                                         0452 631 954
லெ. முருகபூபதி (துணைத்தலைவர்)        -       0416 625 766


அது ஒரு பழ மரம்

.

முகநூலில் பார்த்தது -- மனச்சாட்சியை உலுக்கும் கதை‏


அது ஒரு பழ மரம். ஒரு சிறுவன் தினமும் வந்து அந்த மரத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டு ஆடிப்பாடி விளையாடி விட்டு போவான். அவனை பார்த்தாலே அந்த மரத்துக்கு ஆனந்தம் பொங்கும். திடீரென்று ஒரு நாள் அந்த சிறுவன் வரவில்லை. மரமும் அவனை எதிர் பாத்து காத்திருந்தது. சில நாள் கழித்து அந்த சிறுவன் வந்தான் .அந்த மரம் சந்தோஷத்துடன் அவனை பார்த்து ஏன் இவ்வளவு நாள் வரவில்லை? உனக்கு என்ன பிரச்சனை என்று கேட்டது.
அதற்கு அவன் சொன்னான். என் நண்பர்கள் எல்லோரும் அழகழகாய் பொம்மைகள் வைத்திருக்கிறார்கள், ஆனால் என்னிடம் மட்டும் ஒன்றும் இல்லை, கடையில் வாங்கலாம் என்றாலும் கையில் காசில்லை என்றான்.
மரம் சொன்னது கவலைப்படாதே இந்த மரத்தில் உள்ள பழங்களை எடுத்துச்சென்று கடையில் விற்று அதில் பொம்மை வாங்கிக்கொள். என்னை பார்க்க அடிக்கடி வந்து கொண்டிரு என்று சொன்னது... அவனும் மகிழ்ச்சியுடன் மரத்தில் ஏறி பழங்களை பறித்து சென்றான்.

நூல் அறிமுக விழா 06 3 2016

.

நூல் விமர்சனம்: கருணாகரமூர்த்தி பேர்லின்

. 
நடேசனின்  அசோகனின் வைத்தியசாலை
  
உலகின் முதலாவது விலங்கு வைத்தியசாலையை அசோகச்சக்கரவர்த்திதான் போரில் காயமடைந்த விலங்குகளைக் குணப்படுத்துவதற்காக அமைத்தாரென்பது சரித்திரத்திலிருந்து கிடைக்கும் ஒரு தகவல். அவுஸ்ரேலியாவில் கருணையுள்ளமும், செல்வச்சம்பத்தும் வாய்த்த ஒரு பெண்மணி மெல்பனின் ஒரு பகுதியில் ஸ்தாபித்த இவ்வைத்தியசாலைதான் நாவலின் பிரதான களமாகத் திகழ்கிறது. இலங்கையிலிருந்து செல்லும் ஒரு தமிழ் மிருகவைத்தியர் தான் பணிபுரியும், அம்மிருகவைத்தியசாலைச்சூழல், அங்குள்ள விலங்குகளின் நோய்கள், பிரச்சனைகள், வைத்தியமுறைகள்; அவற்றின் பழக்கவழக்கங்கள், அவற்றுக்கும் அவற்றின் எஜமானர்களுக்குமான உறவுகள், ஊடாட்டங்கள், பற்றிய விவரணங்களை ஆசிரியர் புதினம் முழுவதும் சுவாரசியத்துடன் விரவி வைத்துள்ளார். சுந்தரம்பிள்ளை என்ற அந்த வைத்தியருக்கு அந்த வைத்தியசாலையே வாழ்வின் செம்பகுதியாக விரிகின்றது. அவரே கதைசொல்லியாகவும், அவரே ஒருபாத்திரமாகவும் மாறிமாறிவரும் அவர் அங்கே உள்ள ஏனைய வைத்தியர்கள், தலைமை வைத்தியர், நர்ஸுகள், சிப்பந்திகள் அவர்கள் விதேசிகளை வெறுப்பவர்களோ, நேசிப்பவர்களோ, நடுநிலையாளர்களோ எவ்வகைப்பட்ட சுபாவமுடையவர்களாயினும் அவர்கள் எல்லோருடனும் சுமுகமான உறவையும் மனிதநேயத்தையும் விளையும் நல்ல மனிதராகவே இருக்கிறார். உயர்ந்தபணியில் இருப்பவர்களோ, சாதாரண ஊழியர்களோ  ஒருவரின் பணியில் இன்னொருவர் பிழைகள் கண்டுபிடிக்கத் துடிப்பவர்களும், தவறுகள் ஏற்படின் அவற்றைப்பெருமனதுடன் சீர்செய்ய உதவுபவர்களும், குழிபறிப்பவர்களும், சமாதனத்தை விளைபவர்களுமாக அந்த வைத்தியாசாலையே புறவுலகத்தின்  அனைத்து அம்சங்களையும்கொண்ட இன்னொரு உள் உலகமாக விரிகிறது.

உலகச் செய்திகள்


முனாக் கால்வாயை இந்திய இராணுவம் கைபற்றியது

சிம்பாப்வே ஜனாதிபதி ரொபேர்ட் முகாபேயின் ஆடம்பர 92 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம்
முனாக் கால்வாயை இந்திய இராணுவம் கைபற்றியது

அத்தை மகள் - செல்வ. வெற்றிவேல் செழியன். துபாய்.

.
வானுயர வளர்ந்த கொடிகள்
  வண்ண மலர் பூக்கள் குலுங்க
கண் கொள்ளா காட்சியாக
   கண்டு அதனை  ரசிக்க
பருவ மங்கை ஒருத்தி
   பாதம் படாமல் நடந்து வர
பூத்து குலுங்கும் பூக்கள் நடுவே
   புகுந்து வரும் வேளையிலே
என்னை கண்ட பருவ மங்கை
   எடுத்தாள் ஓட்டம் கொடிகளிடையே
கொடிகளைக் கண்ட நான், அவளின்,
   கொடியிடையைக் கண்டேன்
பூக்களைக் கண்ட   நான், அவளின்

இலங்கைச் செய்திகள் அமைச்சரானார் சரத் பொன்சேகா


மாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த இரதோற்சவம்

வடக்கு அதிவேக நெடுஞ்சாலை :நிர்மாணப்பணிகள்   ஜூன் மாதம் ஆரம்பம் 

பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்..!

குமார் குணரத்னத்திற்கு விளக்கமறியல் நீடிப்பு

 வைத்தியசாலையில் ஏட்டிக்கு போட்டியாக ஆர்ப்பாட்டம் : பதுளையில் பதற்றம்

ஹரிஷ்ணவியின் கொலையை கண்டித்து வடக்கில் ஹர்த்தால்

இலங்கை வந்த நியூசிலாந்து பிரதமருக்கு யானை குட்டியை வழங்கிய ஜனாதிபதி

 மாணவி ஹரிஷ்ணவியின் படுகொலை   அயல்வீட்டு  குடும்பஸ்தர் கைது

அமைச்சரானார் சரத் பொன்சேகா

மாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த இரதோற்சவம்

அனைத்துலகப் பெண்கள் தினவிழா – 2016 - சாந்தினி புவனேந்திரராஜா

.
அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கியச்சங்கத்தின் அனைத்துலகப் பெண்கள் தினவிழா2016


ஆண்டு தோறும் மார்ச் 8ஆம் நாள் அனைத்துலகப் பெண்கள் தினம் உலகம் முழுவதிலும் கொண்டாடப்படுவதைப் பலரும் அறிவீர்கள். 19ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவில், பெண்கள் தமது உழைப்புக்கேற்ற ஊதியம் கோரியும், தமக்கெதிரான அடக்கு முறைகளுக்கெதிராகவும், போராடி வெற்றியடைந்ததன் பின்னர் 1913ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் நாள், அனைத்துலகப் பெண்கள் தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. இதற்கு முன்னரே இத்தினம் வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு நாட்களில் கடைப்பிடிக்கப்பட்டதாகவும், அத்துடன் அமெரிக்கப் பெண்கள் தமது வாக்குரிமைக்காகப் போராடி 1920 இல் வெற்றிபெற்றதன் பின்  இத்தினத்திற்கு மேலும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதாகவும் அறிகிறோம். 1913 இலிருந்து  ஆண்டுதோறும் இதற்கென்று ஒரு கருப்பொருளும்  நிறமும் கொடுக்கப்பட்டு இந்நாள் சிறப்பிக்கப்படுகிறதென்பதும்இந்த ஆண்டுக்கான  கருப்பொருள் “Pledge for Parity” என்பதும், நிறம் ஊதா என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாண்டின் அனைத்துலகப் பெண்கள் தினத்தையொட்டி மார்ச் 6 ஆம் (2016) நாள் அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கியக் கலைச்சங்கத்தினால் முதல் முறையாக, அனைத்துலகப் பெண்கள் தினவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுஇலங்கை, இந்தியா, சிங்கப்பூர் மலேசியா போன்ற நாடுகளிலிருந்து அவுஸ்திரேலியாவுக்குப் புலம்பெயர்ந்த  தமிழ்ப் பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்களும் பங்கு பற்றவிருக்கின்ற இவ்விழாவில் கவியரங்கு, கருத்தரங்கு, விவாத அரங்கு, கலையரங்கு, நினைவரங்கு உட்படப் பல நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
காலம் காலமாக அடிமைப்பட்டுக் கிடந்த பெண்ணினம், தன்னிலை அறிந்து, விழிப்படைந்து சிந்திக்க ஆரம்பித்த போது, தம்மைப்பற்றி ஆழமாகச் சிந்திக்கவும், செயலாற்றவுமென்று ஆரம்பிக்கப்பட்டதே அனைத்துலகப் பெண்கள் நாள்.


 .

குழந்தை திருமணத்தை தடுக்கவும், அது குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் கொண்டுவரவும் நியூயார்க் நகரில் 65 வயது முதியவருக்கும் 12 வயது சிறுமிக்கும் நடத்தப்பட்ட நாடகத் திருமண வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாகியிருக்கிறது.பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீதான வன்முறைகள், பாலியல் முறைகேடுகள் உலக நாடுகளில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள சூழலில், அது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது அவசியமாகியுள்ளது.
                                                                                         

தமிழ் சினிமா - சேதுபதி








தமிழ் சினிமாவில் ஹீரோக்கள் என்ன தான் கேங்ஸ்டர் படம் நடிச்சாலும் சூப்பர் ஸ்டார் முதல் சமீபத்திய ரைசிங் ஸ்டார் வரைக்கும் போலிஸ் ட்ரஸ் அணிந்தால் தான் செம்ம கெத்து. அப்படியிருக்க தொடர்ந்து கிளாஸ் வகை படங்களை செய்து வரும் விஜய் சேதுபதிக்கு மட்டும் மாஸ் காட்ட ஆசை இருக்காதா என்ன?.
அதனால் தான் தன் பேவரட் இயக்குனர் அருணுடன் இணைந்து போலிஸ் லத்தியை கையில் எடுத்திருக்கிறார் சேதுபதி.

கதைக்களம்

படத்தின் ஆரம்ப காட்சியிலேயே ஒரு போலிஸை ஸ்கெட்ச் போட்டு எரித்து விடுகின்றனர். அந்த கொலை விஜய் சேதுபதி போலிஸாக இருக்கும் ஏரியாவில் நடக்க, இந்த கேஸை விஜய் சேதுபதி கையில் எடுக்கிறார்.
போலிஸை கொன்றால் அவன் எவனாக இருந்தாலும் தூக்க வேண்டும் என துடிப்புடன் பல தடயங்களை கண்டுப்பிடிக்க, அந்த ஊரில் மிகப்பெரும் கட்டப்பஞ்சாயத்து நடத்தும் வாத்தியார் என்பவர் தான் இந்த கொலைக்கு காரணம் என தெரிகின்றது.
ஊரே அவரை பார்த்து பயந்து நடுங்கும் நேரத்தில் சேதுபதி தைரியமாக அவரை கைது செய்கின்றார். இந்த அவமானத்திற்காக விஜய் சேதுபதியை பழிவாங்க, செயின் திருட்டு வழக்கில் வரும் சிறுவர்களை துப்பாக்கியை காட்டி மிரட்டி விசாரிக்கும் போது, யாரோ துப்பாக்கியை ரீலோட் செய்து அவர் கையில் கொடுக்கின்றனர்.
அவரும் யதார்த்தமாக சுட, சிறுவன் கழுத்தில் புல்லட் பாய்கின்றது. இதன் பிறகு விஜய் சேதுபதியை தற்காலிக வேலை நிறுத்தம் செய்ய, வாத்தியார் ஆட்டம் அதிகமாகின்றது. பின் வழக்கம் போல் தன் மீசையை முறுக்கி, விஜய் சேதுபதி தன் இரண்டாவது இன்னிங்ஸில் வாத்தியாரை எப்படி பந்தாடுகிறார் என்பதை மாஸ் கமர்ஷியலாக கூறியிருக்கிறார் அருண்.

படத்தை பற்றிய அலசல்

அட..இது விஜய் சேதுபதி தானா!!! என ஆச்சரியப்பட வைக்கின்றது. முறுக்கு மீசை, தைரியமான போலிஸ் ரம்யா நம்பீசனுக்கு அன்பான கணவன், குழந்தைகளுக்கு பாசமுள்ள அப்பா என்று முழு மாஸ் ஹீரோவாகவே மாறிவிட்டார். கிளாஸில் இருந்து மாஸிற்கு ப்ரோமோஷன் கிடைத்து விட்டது சேதுபதி. வாழ்த்துக்கள்.
ரம்யா நம்பீசன் இரு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்ததற்கே பாராட்டலாம், இளம் நடிகைகள் யாரும் துணிந்து நடிப்பார்களா என்றால் கேள்விக்குறி தான், ‘என் புருஷன் காலையில சண்டைப்போட்டா, மாலையில் என்னை கொஞ்ச வருவான், அதுக்காகவாது நான் அவர் கூட இருக்க வேண்டும்’ என விஜய் சேதுபதிக்கு சப்போர்ட்டாக கலக்கியுள்ளார்.
படத்தின் மிகப்பெரிய ஹைலைட் விஜய் சேதுபதியின் கதாபாத்திர வடிவம் தான், ஒரு மாஸ் போலிஸ் என்றாலும் எந்த இடத்திலும் செயற்கையாக தெரியக்கூடாது என்று கொஞ்சம் மெனக்கெட்டுள்ளனர். குழந்தை முன்பு புகார் கொடுக்க வரும் கணவனை, குழந்தையை வெளியே போகச் சொல்லி விட்டு திட்டுவது, தன் மகள் முன்பு மனைவியை அடித்தததை சமாளிப்பது என யதார்த்த காப் இந்த சேதுபதி.
தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு பல காட்சிகள் மிகவும் ரியலாக உள்ளது, அதை விட ஸ்ரீகர் பிரசாத்தின் எடிட்டிங், வேகமான திரைக்கதைக்கு செம்ம ப்ளஸ் கூட்டியிருக்கின்றது. தெகிடி படத்தை தொடர்ந்து நிவாஸின் இசை சேதுபதியிலும் மிரட்டல். ஆனால், தீவிர அனிருத் ரசிகராக இருப்பார் போல, விஐபி, காக்கிசட்டை இசையெல்லாம் வந்து போகின்றதே.

க்ளாப்ஸ்

படத்தின் இரண்டாம் பாதி, விறுவிறுவென செல்கின்றது, அதிலும் விஜய் சேதுபதி வீட்டை முற்றுகையிடும் வில்லன் கும்பலை போனிலேயே மிரட்டும் சீன் தியேட்டர் விசில் சத்தத்தில் அதிர்கின்றது.
படத்தில் முதல் பாதியில் ஆங்காங்கே வரும் சின்ன சின்ன டுவிஸ்டுகள், நம் கவனம் ஒரு போலிஸிடம் இருக்கும் போது, அதை அழகாக திசை திருப்பும் காட்சி.
ஸ்ரீகர் பிரசாத்தின் விறுவிறு எடிட்டிங். விஜய் சேதுபதி- ரம்யா நம்பீசன் காதல் காட்சிகள்.

பல்ப்ஸ்

பார்த்து பழகி போன வில்லன், இரண்டாம் பாதியில் யூகிக்க கூடிய டுவிஸ்டுகள்.
படத்தின் முதல் பாதியில் பல காட்சிகள் பெரிய விளக்கம் இல்லாமல் உடனே முடிவது போல் இருக்கும் காட்சியமைப்புகள்.
வில்லன் விஜய் சேதுபதி மீது காட்டும் கோபம், அவர் குடும்பதை தூக்க ப்ளான் போடுவது தான் ஏன் இத்தனை தாமதம் என்று தெரியவில்லை, அதற்குள் கிளைமேக்ஸே நெருங்கிவிடுகின்றது.
மொத்தத்தில் ரவுடி விஜய் சேதுபதியை விட இந்த போலிஸ் சேதுபதி செம்ம கெத்து.

ரேட்டிங்- 3.25/5   நன்றி  cineulagam


மரண அறிவித்தல் - நாகராஜா உருத்திரகுமார் J.P

.
                                      உருத்திரகுமார் நாகராஜா 

மரண அறிவித்தல்
நாகராஜா உருத்திரகுமார் J.P
              மலர்வு; 12-12-1960                           உதிர்வு; 24-02-2016 

யாழ்ப்பாணம் மானிப்பாயை பிறப்பிடமாகவும், கொழும்பு, லண்டன், சிட்னி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நாகராஜா உருத்திரகுமார் அவர்கள் சிட்னியில் 24/02/16 புதன் கிழயமயன்று காலமானார்.

அன்னார் மஸ்கன்ஸ் நிறுவன உரிமையாளர் காலஞ்சென்ற நாகராஜா, கமலாசனி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற புவனேந்திரன், சரஸ்வதி அம்மா ஆகியோரின்  மருமகனும்,

நிலந்தினியின் அன்புக் கணவரும், நிரோஷனின்  பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற நகுலேஸ்வரன், விஜயநாதன் (சுவிஸ்), உமாவதி (அவுஸ்தினரலியா), லோகநாதன் (லண்டன்), உஷாதேவி ( லண்டன்), சுகன்யா தேவி (லண்டன்), நிலாமதி (அவுஸ்தினரலியா), கணேஷ்ராஜ்(லண்டன்), காலஞ்சென்ற ஸ்கந்தராஜ், ரவீந்திரன் (லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரனும், குணராணி, வசந்தி, பாலேந்திரன், ஈஷானி, குலேந்திரன், சிவக்குமார், குகநேசன் , கீதா, மாதினி, பிரசாந்தி, சுபோதினி, முரளிதரன், ராகினி, பிரகலாதன், துஷ்யந்தி ஆகினயாரின் அன்பு மைத்துனரும்  ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

பார்வைக்கு: 27/02/2016 Saturday – 5:30 to 7:30 PM Liberty Funeral Parlour, 101 South                 Street, Granville

இறுதிகிரியைகள்: 29/02/2016 Monday – 10:30 to 1:00 PM South Chapel ,Memorial Avenue,                   Rookwood.


தகவல்களுக்கு; நிலந்தி: +612 8608 6085 
உமா: +61 469 807 500 
பிரபா : +61 409 783 725 
சடா: +61 402 040 415