படித்ததில் பிடித்த கவிதை " சிதறும் நிறங்கள்"

 .

சிதறும் நிறங்கள்


தவறுகள் செய்வது
உயிர் இன்னும்
இயங்குகிறதென்பதற்கான
அடையாளம்
விழும்
ஒவ்வொரு முறையும்
புதிய நடையைக்
கற்றுக் கொள்கிறேன்
சரியான நிறம்
கண்டுபிடிக்குமுன் நிறங்கள்
சிதறட்டும்
அதில் தான் தெளிவாகிறது
உண்மை
வாழ்க்கை
என்பது
நிறைவே அல்ல
மெதுவாக
முழுமையைக் கற்றுக்கொள்ளும்
பயிற்சி.
பிரியா பாஸ்கரன் I 11.6.25.

No comments: