நினைப்பினின்று அகற்றிவிடு !

 .


   மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
     மெல்பேண் ..... அவுஸ்திரேலியா 

 

நிலைபெறுமா றெண்ணிநிற்க

நீள்பிவியில் நீவிரும்பு
அலைபாயும் மனமதனை
அடக்குதற்கு துணிந்துவிடு

நிலையில்லா பொருளையெலாம்  


நினைப்பினின்று அகற்றிவிடு
நெஞ்சமதில் இறைநினைப்பை
நிரந்தரமாய் இருத்திவிடு ! 

துன்பமெனும் நினைப்பதனைத் 

துரத்தியே அடித்துவிடு
சூழ்நிலையை தூய்மையாய்
ஆக்குதற்கு விரும்பிவிடு

அன்புடனே அணைத்துவிட 

ஆவலுடன் இருந்துவிடு
ஆண்டவனும் ஆசியினை
அள்ளியே அளித்திடுவான்   

ஆத்திரத்தை மூட்டைக்கட்டி 

அப்பாலே எறிந்துவிடு
ஆணவமாம் நினைப்பதனை
அகமிருந்து அகற்றிவிடு

கூசுகின்ற வார்த்தைகளை

பேசுவதைத் தவிர்த்துவிடு
குறையில்லா பரம்பொருளும்
நிறைவாக வழங்கிடுவான் !

உன்விருப்பைத் திணித்துவிட

ஒருபோதும் நினைக்காதே
ஒழுக்கநெறிப் பாதையிலே
உன்பயணம் அமையட்டும்

தாமரையின் இலைமீது

தண்ணீரும் இருப்பதுபோல்
வாழ்ந்துவிட விரும்பிவிடு
வரந்தருவான் இறைவனுமே !

No comments: