1965ம் ஆண்டு மூன்று இளம் நடிகர்கள் தமிழ் திரைக்கு
அறிமுகமானார்கள். ஜெய்சங்கர் , ஸ்ரீகாந்த், சிவகுமார் ஆகியோரே அவர்கள். இந்த மூவரில் ஜெய்சங்கர், ஸ்ரீகாந்த் இருவரும் கதாநாயகர்களாக அறிமுகமாகமாக சிவகுமார் துணை வேடம் ஒன்றில் அறிமுகமானார். ஆனால் இவர்களில் ஜெய்சங்கரைத்தான் அதிஷ்ட தேவதை விரைவாக அரவணைத்துக் கொண்டாள். இதனால் முதல் படமான இரவும் பகலும் வெளி வந்து வெற்றி கண்ட கையோடு இரண்டாவது படமான பஞ்சவர்ணக் கிளி படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கும் சான்ஸ் ஜெய்சங்கரை தேடி வந்தது.
பிரபலத் தயாரிப்பாளரான ஜி என் வேலுமணி தயாரித்த இந்தப்
படத்தில் மற்றுமோர் ஹீரோவாக முத்துராமனும் நடித்தார். ஆனாலும் படத்தின் கதை பஞ்சவர்ணக் கிளியான கே ஆர் விஜயாவை சுற்றியே அமைக்கப்பட்டிருந்தது. ஜெய்சங்கருக்கு இரட்டை வேடம் என்ற போதும் படம் முழுவதும் வரும் வேடம் அவர் ஏற்ற வில்லன் வேடம்தான். தனது இரண்டாவது படத்திலேயே துணிந்து வில்லன் வேடத்தில் நடித்திருந்த அவர் அப் பாத்திரத்தை இலாவகமாக கையாண்டிருந்தார் என்றே சொல்ல வேண்டும்.

பஞ்சவர்ணக் கிளிக்கு எப்படி பல நிறங்களோ அதே போல் வாணிக்கும் பல வேடங்கள் . தாயுடன் வாழும் வாணி சிறந்த பாடகி. அவள் குரலை கேட்டு அவளை பாராமல் காதலிக்கிறான் கண்ணன். திருமணம் கூடி வரும் வேலை அவளின் அத்தை மகன் பர்மா பாலு மூலம் அவளுக்கு அடுத்தடுத்து சங்கடங்கள் ஏற்படுகின்றன. இதன் காரணமாக சித்ரா என்ற பேரில் கண்ணனின் அண்ணன் சேகரின் விதவை மனைவியாக , அவனின் குழந்தையுடன் நடமாட வேண்டிய இக்கட்டான நிலை அவளுக்கு ஏற்படுகிறது. ஆக மகளாக, பாடகியாக, காதலியாக, மனைவியாக, தாயாக , அண்ணியாக அவள் காட்சி தருகிறாள் . இறுதியில் அவளுக்கு வாழ்வு கிடைத்ததா என்பதே மீதி கதை.
படத்தில் வாணியாக கே ஆர் விஜயா நடித்திருந்தார். காதல், சஞ்சலம், பிரிவு, துயரம் என்று கலவையாக அவரின் பாத்திரம் அமைக்கப்பட்டிருந்தது. அதனை சிறப்பாகவே செய்திருந்தார் அவர். கண்ணனாக வரும் முத்துராமனிடம் தான் தான் வாணி என்று சொல்ல முடியாது தவிப்பதும், சண்டாளனாக வரும் ஜெய்சங்கரை கண்டு மிரளுவதுமாக அவர் நடிப்பு சோபித்தது. முத்துராமன் படத்தில் தான் தான் ஹீரோ என்று நிரூபிப்பது போல் நடித்திருந்தார். நாகேஷ், மனோரமா வரும் காட்சி எல்லாம் கலகலப்பு. போதாக் குறைக்கு ஏ. வீரப்பனுக்கு வசனம் மூலம் சிரிக்க வைக்கிறார். இதிலும் சுந்தரராஜன் தான் அப்பா, எஸ் என் லஷ்மி தான் அம்மா. இவர்களுடன் ரேவதி, கரிக்கோல் ராஜு, சீதாலஷ்மி ஆகியோரும் நடித்திருந்தனர்.
படத்தில் இடம் பெற்ற பாரதிதாசனின் தமிழுக்கும் அமுதென்று பேர்
,வாலியின் அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன், கண்ணன் வருவான் கதை சொல்லுவான் பாடல்கள் சூப்பர். விசுவநாதன், ராமமூர்த்தி இருவரும் இணைந்து இசை வழங்கினார்கள். இந்தப் படத்தில் இருந்து ஜி என் வேலுமணி தான் தயாரித்த பெரும்பாலான படங்களில் பாரதிதாசனின் பாடல்களை பயன் படுத்தி அவை மிகவும் பிரபலமாகின.

அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன் பாடலும், எல் . விஜயலஷ்மியின் நடனமும் , முக பாவங்களும், ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. டான்ஸ் மாஸ்டர் பி . எஸ். கோபாலகிருஷ்ணனுக்கு சபாஷ். முதல் படத்தில் அடிதடி ஹீரோவாக அறிமுகமான ஜெய்சங்கருக்கு இந்தப் படத்தில் சண்டைக் காட்சியே இல்லை!
படத்துக்கு கதை, வசனத்தை எழுதியவர் வலம்புரி சோமநாதன். சிக்கலான கதையை குழப்பம் இன்றி எழுதியிருந்தார். வசனத்திலும் குறை வைக்கவில்லை . “அனாதையாய் பர்மாவுக்கு போனாய் இப்போது அகதியாய் திரும்பி வந்திருக்கிறாய், விதியை நோக வேண்டிய இடத்தில் நாம் அண்ணனை நொந்து என்ன பிரயோசனம், நான் காதலிச்ச அந்த குரலை திரும்பவும் ஒரு முறை கேட்கணும் போல இருக்கு போன்ற வசனங்கள் ரசிக்கும் படி இருந்தன.
ஆனாலும் இந்தப் படத்தின் கதையில் ஒரு விவகாரம் எழுந்தது. பிரபல எழுத்தாளர் தமிழ்வாணன் மணிக்கொடி நீ என்னை மறந்துவிடு என்று ஒரு தொடர் கதையை அன்றைய காலகட்டத்தில் ஆனந்த விகடனில் எழுதியிருந்தார். படம் வெளி வந்த போது அக் கதையை தான் படமாக்கியிருக்கிறார்கள் என்ற விவகாரம் தலை தூக்கியது. அதிர்ச்சியடைந்த ஜி என் வேலுமணி தமிழ்வாணனிடம் பேசி விஷயம் கோர்ட்டு வழக்கு என்று போகாமல் பார்த்துக் கொண்டார்!
No comments:
Post a Comment