தமிழ் படங்களுக்கு தமிழில் தான் பேர் வைக்க வேண்டும் என்ற தீவிர நியதி நிலவிய 60 ம் ஆண்டுகளில் ஆங்கிலப் பெயரைக் கொண்டு ஒரு படம் வெளிவந்தது. அந்தப் படம்தான் ஹலோ மிஸ்டர் ஜமீன்தார். படத்தின் பேரே இது ஒரு காமெடி படம் என்பதை சொல்வது போல் அமைந்திருந்தது. உண்மையும் அதுதான். நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து அதே சமயம் ஓரளவுக்கு செண்டிமெண்டலையும் தடவி படத்தை எடுத்திருந்தார்கள்.
படத்தின் பேர்தான் ஹலோ மிஸ்டர் ஜமீந்தார் என்றால், படத்தை
தயாரித்து டைரக்ட் செய்தவரும் ஜமிந்தாரைப் போன்ற குண இயல்புகளைக் கொண்டவர்தான். கே. ஜே . மகாதேவன் என்ற திரைப் பிரமுகரால் படம் உருவாக்கப்பட்டது. இந்த மகாதேவன் திரையுலகில் நீண்ட கால அனுபவம் கொண்ட ஒருவராவார். இவரது தந்தை கே எஸ் ஜெயராம் ஐயர் மைலாப்பூரில் வசித்த ஒரு பிரபல கிரிமினல் வழக்குகளுக்கு ஆஜராகும் வக்கீலாவார். தன்னுடைய மகன் மகாதேவனும் தன்னைப் போல் வக்கீலாக வேண்டும் என்ற எண்ணத்தில் அவரை லண்டனுக்கு சென்று சட்டக் கல்வி பயின்று வர அனுப்பினார் அவர். ஆனால் பல காரணங்களால் மகாதேவன் வக்கீலாகவில்லை. அதற்கு பதில் அவர் கவனம் சினிமாத் துறையின் பக்கம் திரும்பியது. பிரபல டைரக்டர் கே. சுப்பிரமணியம் இயக்கிய கல்கியின் நாவலான தியாக பூமியில் கதாநாயகனாக இவர் நடித்தார். அதனைத் தொடர்ந்து ஜெமினி ஸ்டுடியோவில் சேர்ந்து படம் இயக்கும் வித்தைகளை எஸ் எஸ் வாசன், கே ராம்நாத் ஆகியோரிடம் கற்றார். சந்திரலேகா படம் தயாரான போது ரஞ்சன் நடித்த கொடுங்கோலன் வேடத்துக்கு இவர் பேர் முதலில் தெரிவானது. ஆனால் இவரது மென்மையான முகம் அவ் வேடத்துக்கு பொருந்தாது என்பதால் அவர் நடிக்கவில்லை.

தோ துல்ஹே என்ற ஹிந்தி படத்தையும் இயக்கினார். தன்னுடைய அபிப்பிராயங்களை வெளிப்படையாக வாசனிடம் சொல்லும் துணிவும் மகாதேவனிடம் இருந்தது. ஒரு கட்டத்தில் ஜெமினி ஸ்டுடியோவை விட்டு விலகிய மகாதேவன் தனது சொந்த பட நிறுவனத்தை நிறுவினார். அந்த நிறுவனம் சார்பில் அவர் தயாரித்து இயக்கிய படம் அவள் யார். இந்தப் படத்தில் சிவாஜி, பண்டரிபாய் இருவரும் ஜோடியாக நடித்தனர். 1959ம் வருடம் தீபாவளிக்கு இந்தப் படம் வெளிவர வேண்டும் என்று மகாதேவன் விருப்பப் பட , பாகப்பிரிவினை படம்தான் வர வேண்டும் என்று சிவாஜி ஆர்வம் காட்டினார். இதில் ஏற்பட்ட குளறுபடியால் ஆக்டோபர் 30ம் தேதி அவசர அவசரமாக அவள் யார் படத்தை வெளியிட்டார் மகாதேவன். அதற்கு மறுநாள் பாகப்பிரிவினை படம் வெளியாகி மாபெரும் வெற்றி கண்டது. அவள் யார் வந்த சுவடு தெரியாமல் மறைந்தது.
இதற்கு பிறகு ஹலோ மிஸ்டர் ஜமீன்தார் படத்தை எடுத்தார் மகாதேவன். ஜெமினி , சாவித்திரி இணைந்து நடித்த இப் படத்தில் எம் ஆர் ராதா முக்கிய பாத்திரத்தில் நடித்தார். பட்டணத்தில் நாவிதனாக தொழில் செய்யும் அழகிரி தான் ஒரு ஜமீனின் வாரிசு என்பதை ஜமீன்தாராகக் இருக்கும் சேகர் மூலம் தெரிந்து கொள்கிறான். இதனை தொடர்ந்து இருவரும் இடம் மாறுகிறார்கள். நாவிதனாக மாறும் சேகர் பாடசாலை டீச்சரான ராதாவை காதலித்து அவளின் குடும்பத்தில் ஒருவனாக மாற பிராயத்தனம் செய்கிறான். அழகிரிக்கோ ஜமீனில் பலவித தொல்லைகள் தொடர்கின்றன. அவனை அங்கிருந்து துரத்தும் முயற்சியில் ஜமீன் நிர்வாகி ஈடுபடுகிறார். ஆனால் அழகிரியோ ஜமீன் பதவி தனக்குத்தான் என்று அடம் பிடிக்கிறான். இதே சமயம் ஜமீன் நிர்வாகியால் ராதா குடும்பத்திலும் பல இன்னல்கள் தோன்றுகின்றன. இறுதியில் யார் உண்மை ஜமீன்தாராக பதவி ஏற்கிறார் என்பதே கதை.
படத்தில் அழகிரியாக வரும் எம் ஆர் ராதாவுக்கு வித்தியாசமான
வேடம். நாவிதராக அறிமுகமாகும் காட்சியிலேயே சொந்தமும் இல்லே ஒரு பந்தமும் இல்லே சொன்ன இடத்தில் அமர்ந்து கொள்கிறார் பாடலுக்கு நடித்து அசத்துகிறார். படலைப் பாடிய ஜி கே வெங்கடேஷ் குரலும் மிகப் பொருத்தமாக அமைந்தது. படத்தில் ராதாவுக்கு நல்லவன் வேடம், அதனால் வழக்கமான பன்ச் வசனங்களும் குறைவு. ஓரிரு காட்சிகளில் அவர் மீது அனுதாபமும் ஏற்படுகிறது. ஜெமினி தனது மென்மையான நடிப்பை வழங்க, சாவித்திரி அதற்கு நேர் மாறான குணச்சித்திரத்தை வழங்குகிறார். வில்லனாக வருபவர் டி எஸ் பாலையா. வசனங்களாலேயே எல்லோரையும் ஆட்டுவிக்கிறார் மனிதர். இவர்களுடன் டி எஸ் முத்தையா, வி கோபாலகிருஷ்ணன், அங்கமுத்து, சீதாலஷ்மி, கணபதி பட் , இந்திராதேவி, எஸ் ராமராவ் ஆகியோரும் நடித்திருந்தனர்.

படத்துக்கு பிளஸ் பாய்ண்ட் அதன் பாடல்கள். விஸ்வநாதன் , ராமமூர்த்தி இசையில் கண்ணதாசன் புனைந்த இளமை கொலுவிருக்கும் இயற்கை மணம் இருக்கும், ஹலோ மிஸ்டர் ஜமீன்தார் அவ் டுயூ டூ, காதல் நிலவே கண்மணி ராதா பாடல்கள் பி பி ஸ்ரீனிவாஸ், சுசிலா குரலில் தேனாக இனித்தது. படத்தின் வசனத்தை வித்துவான் வே லஷ்மணன் எழுதியிருந்தார். ஒளிப்பதிவு வி .ராமமூர்த்தி.
படத்தில் ஜெமினி அறிமுகமாகும் காட்சி நீச்சல் குளத்தில் , பெண்கள் நீச்சல் உடையில் நீந்த அவர்கள் மத்தியில் ஜெமினி பாடி நடிப்பது போல் படமானது. தமிழில் இந்தப் படத்தில்தான் நீச்சல் குள காட்சி முதன் முதலில் இவ்வாறு படமானது எனலாம். அதே போல் நாவிதன் பாடும் பாடலும் இதிலேயே முதல் தடவையாக இடம் பெற்றது. படத்தை கே ஜே மகாதேவன் வித்தியாசமாக இயக்க முயன்றும் படத்தின் கதை, அதன் முடிவு என்பன சுவாரஸ்யமாக அமையாமல் எனோ தானோ என்று அமைந்து விட்டது.
என்றாலும் எஸ் எஸ் வாசன் உருவாக்கிய சந்திரலேகா, வஞ்சிக்கோட்டை வாலிபன், மற்றும் எம் ஜி ஆரின் ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்களுக்கு இவர் அமைத்த கதைகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.அந்த வெற்றியை அவர் கதை எழுதி இயக்கிய படம் எனோ பெறத் தவறி விட்டது!
No comments:
Post a Comment