அண்மையில் வவுனியா
மாவட்ட மாணவர்களுக்கான நிதிக்கொடுப்பனவு நிகழ்வு,
இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் வவுனியா தொடர்பாளர் அமைப்பான
நலிவுற்ற சமூக அபிவிருத்திக்கான தன்னார்வ அமைப்பின் Voluntary Organization for Vulnerable Community Development (VOVCOD ) தலைவர் திரு. த. கணேஷ் தலைமையில், குறிப்பட்ட பணிமனையில் நடைபெற்றது.
இந்நிகழ்வுகளில் மாணவர்களின் தாய்மாரும் கலந்துகொண்டனர்.
அவுஸ்திரேலியாவில்
1988
ஆம்
ஆண்டு தொடங்கப்பட்ட இலங்கை மாணவர் கல்வி நிதியம், ஆரம்ப காலங்களில், இலங்கையில் நீடித்த போரினால், தந்தையை , குடும்பத்தின் மூல உழைப்பாளிளை
இழந்த ஏழைத்தமிழ் மணவர்களுக்கு உதவியது.
போர் முடிவுக்கு வந்தபின்னர், வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மாணவர்களையும் இந்த
புலமைப்பரிசில் திட்டத்தில் இணைத்துக்கொண்டு உதவி வருகிறது.
உதவி பெற்ற மாணவர்களும், அவர்களின் தாய்மாரும், கல்வி நிதியத்திற்கும், இந்நிதியம் ஊடாக உதவி வரும்
அவுஸ்திரேலியா வாழ் அன்பர்களுக்கும் தங்கள் நன்றியை தெரிவித்தனர்.
---0---
No comments:
Post a Comment