உலகச் செய்திகள்

 கருங்கடலில் யுத்த நிறுத்தத்திற்கு இரு தரப்பும் இணக்கம் என அமெரிக்கா அறிவிப்பு - தடைகளை முதலில் நீக்கவேண்டும் என ரஸ்யா தெரிவிப்பு

கனடா தேர்தலில் சீனாரஷ்யா இந்தியா தலையீடு: உளவு அமைப்பு குற்றச்சாட்டு

இடிபாடுகளிற்குள் இருந்து அலறல்களை இன்னமும் கேட்க முடிகின்றது -மியன்மாரின் மீட்பு பணியாளர்

மியன்மார் பூகம்பம் ; உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,002 ஆக அதிகரிப்பு!

அமெரிக்காவுடனான ஆழமான உறவுகளின் யுகம் முடிவிற்கு வந்துவிட்டது - கனடா பிரதமர்

செங்கடல் பகுதியில் கடலில் மூழ்கியது சுற்றுலாப்பயணிகளின் நீர்மூழ்கி- ஆறுபேர் பலி



கருங்கடலில் யுத்த நிறுத்தத்திற்கு இரு தரப்பும் இணக்கம் என அமெரிக்கா அறிவிப்பு - தடைகளை முதலில் நீக்கவேண்டும் என ரஸ்யா தெரிவிப்பு

Published By: Rajeeban

26 Mar, 2025 | 01:57 PM

கருங்கடலில் யுத்தநிறுதத்தைகடைப்பிடிப்பதற்கு ரஸ்யாவும் உக்ரைனும் இணங்கியுள்ளன.

சவுதிஅரேபியாவில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று மூன்று நாட்களின் பின்னர் இந்த வாக்குறுதியை இரண்டு நாடுகளும் அமெரிக்காவிற்கு வழங்கியுள்ளன.

இது குறித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அமெரிக்கா இரண்டு தரப்பினரும் தொடர்ந்தும்நிரந்தர சமாதானத்தை நோக்கி பாடுபடவுள்ளனர் என தெரிவித்துள்ளது.   நன்றி வீரகேசரி 

இந்த உடன்படிக்கை முக்கியமான வர்த்தக பாதையை திறந்துவிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இருநாடுகளும் பரஸ்பரம் ஏனைய நாட்டின் எரிசக்தி கட்டமைப்பின் மீதுதாக்குதலை மேற்கொள்வதை தவிர்ப்பது என முன்னர் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயத்தினை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளனர் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

எனினும் உணவு மற்றும் உரதடைகள் பல நீக்கப்பட்ட பின்னரே  கருங்கடல் யுத்த நிறுத்தம் நடைமுறைக்கு வரும்.

கருங்கடலில் தாக்குதல்களை நிறுத்தும் இந்த உடன்பாடு சரியான பாதையிலான நடவடிக்கை என உக்ரைன் ஜனாதிபதி வொலொடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

இது பலன் அளிக்குமா என தற்போது தெரிவிக்க முடியாது ஆனால் இவை சரியான சந்திப்புகள் சரியான தீர்மானங்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

இதன் பின்னர் உக்ரைன் நிலையான சமாதானத்தை நோக்கிய முயற்சிகளை மேற்கொள்ளவில்லை என எவரும் குற்றம்சாட்டமுடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை கருங்கடல் யுத்தநிறுத்த உடன்படிக்கை குறித்த அமெரிக்காவின் அறிக்கை வெளியான பின்னர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சர்வதேச உணவு மற்றும் உர வர்த்தகர்களிற்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தடைகள் அகற்றப்பட்டாலே கருங்கடல் யுத்த நிறுத்தம் நடைமுறைக்கு வரும்  என ரஸ்யா தெரிவித்துள்ளது.   நன்றி வீரகேசரி 







கனடா தேர்தலில் சீனாரஷ்யா இந்தியா தலையீடு: உளவு அமைப்பு குற்றச்சாட்டு

25 Mar, 2025 | 04:04 PM

ஒட்டாவா: அடுத்த மாதம் நடைபெற உள்ள கனடா நாட்டின் நாடாளுமன்ற தேர்தலில் சீனா இந்தியா ரஷ்யா மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் தலையீடு இருக்கலாம் என சிஎஸ்ஐஎஸ் எனப்படும் அந்த நாட்டின் புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவில் சீக்கியர்களுக்கு தனி நாடு வேண்டும் எனக் கோரி காலிஸ்தான் உள்ளிட்ட சில பிரிவினைவாத இயக்கங்கள் வெளிநாடுகளில் செயல்பட்டு வருகின்றன. இந்த சூழலில் கனடா நாட்டில் வசித்து வந்த பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜார் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சுட்டுக் கொல்லப்பட்டார். இதில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியிருந்தார். இதை இந்தியா மறுத்தது. தொடர்ந்து இருதரப்பு நாடுகளுக்கு இடையிலான உறவு விரிசல் அடைந்தது. இந்நிலையில் தேர்தலில் தலையிடலாம் என்ற குற்றச்சாட்டு பாய்ந்துள்ளது.

“ஜனநாயக முறைப்படி நடைபெறும் கனடா நாட்டு தேர்தலில்  செயற்கை நுண்ணறிவைசீனா பயன்படுத்த வாய்ப்புள்ளது. இதே போல கனடாவில் வசிக்கும் பல்வேறு சமூகங்கள் மற்றும் நாட்டின் ஜனநாயக செயல்முறைகளில் தலையிடும் நோக்கமும் அதற்கான திறனையும் இந்திய அரசாங்கம் கொண்டுள்ளது என்பதை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம்” என சிஎஸ்ஐஎஸ் அமைப்பின் துணை இயக்குநர் வனேசா லாயிட் கூறியுள்ளார். இதற்கு இந்தியா மற்றும் சீனா தரப்பில் இருந்து இன்னும் பதில் எதுவும் தரப்படவில்லை.

அமெரிக்காவின் வரி விதிப்பு அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு சவால்களை கனடா எதிர்கொண்டுள்ள நிலையில் அடுத்த மாதம் 28-ம் தேதி அங்கு தேர்தல் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி 







இடிபாடுகளிற்குள் இருந்து அலறல்களை இன்னமும் கேட்க முடிகின்றது -மியன்மாரின் மீட்பு பணியாளர்

Published By: Rajeeban

29 Mar, 2025 | 03:20 PM



மியன்மாரின் மண்டலாயில் கட்டிட இடிபாடுகளிற்குள் சிக்குண்டவர்கள்; தங்களை காப்பாற்றுமாறு இன்னமும் மன்றாடிக்கொண்டிருக்கின்றனர் என பிபிசி தெரிவித்துள்ளது.

உயர்மாடிக்கட்டிடமொன்று இடிந்து விழுந்ததில் இடிபாடுகளிற்குள் சிக்குண்ட ஏழுபேரைகாப்பாற்றுவதற்கான முயற்சிகளில் மீட்பு பணியாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.

நேற்றிரவு இந்த கட்டிட இடிபாடுகளிற்குள் இருந்து 50 பேரை மீட்டதாக ஒருவர் தெரிவித்தார்.

மியன்மாரை பூகம்பம் உலுக்கி 24 மணித்தியாலங்களிற்கு மேலாகின்றது.

நாங்கள் இடிபாடுகளிற்குள் சிக்குண்டுள்ள ஏனையவர்களை காப்பாற்ற முயல்கின்றோம்,ஆனால் அதற்கு பாரிய இயந்திரங்கள் தேவை,அவர்கள் இன்னமும் அலறுகின்றனர் அவர்களின் குரல்களை கேட்க முடிகின்றது ஆனால் அவர்கள் எங்கிருக்கின்றார்கள் என்பதை கண்டுபிடிக்கமுடியவில்லை,என மீட்பு பணியாளர் தெரிவித்தார் என பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

பெரும் இயந்திரங்கள் இருந்தால் இடிபாடுகளை அகற்றி அவர்களை காப்பாற்ற முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.   நன்றி வீரகேசரி 








மியன்மார் பூகம்பம் ; உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,002 ஆக அதிகரிப்பு!

29 Mar, 2025 | 11:54 AM



மியன்மாரை தாக்கியுள்ள பூகம்பம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,002 ஆக அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், பூகம்பம் காரணமாக 2,376 பேர் காயமடைந்துள்ளதுடன் 30 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீட்பு பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.   நன்றி வீரகேசரி 








செங்கடல் பகுதியில் கடலில் மூழ்கியது சுற்றுலாப்பயணிகளின் நீர்மூழ்கி- ஆறுபேர் பலி


27 Mar, 2025 | 04:50 PM

செங்கடல் பகுதியில் சுற்றுலாப்பயணிகளின் நீர்மூழ்கி கடலில் மூழ்கியதில் ஆறுபேர் உயிரிழந்துள்ளனர் .

எகிப்தின் கரையோரமாக உள்ள பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

செங்கடல் பகுதியில் உள்ள குர்ஹடா நகரிற்கு பல அம்புலன்ஸ்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.இங்கு அதிகளலு ஜேர்மன் பிரிட்டன் சுற்றுலாப்பயணிகள் செல்வது குறிப்பிடத்தக்கது.

பல நாடுகளை சேர்ந்த 44 பேருடன் பயணித்துக்கொண்டிருந்த சிந்துபாத் என்ற நீர்மூழ்கியே விபத்துக்குள்ளாகியுள்ளது.

காப்பாற்றப்பட்ட ஒன்பது பேரில் நால்வர் ஆபத்தான நிலையில் உள்ளனர் என தெரிவித்துள்ள அதிகாரிகள் 29 பேரை காயங்களின்றி காப்பாற்ற முடிந்ததாக தெரிவித்துள்ளனர்.

செங்கடலில் உள்ள பவளப்பாறைகளை பார்வையிடுவதற்காக  இந்த குழுவினர் பயணித்த நீர்மூழ்கி ஹ_ர்கடாவில் உள்ள ஹோட்டலான மரினாவின் முன்னால் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.   நன்றி வீரகேசரி 






No comments: