.
இலங்கையில் கல்வி கற்கும் மாணவர்களுக்காக தேவைப்படும் உதவிகளை செய்யும் நோக்கத்தோடு ஆண்டு தோறும் தரிசனம் அமைப்பு ஆஸ்திரேலியாவில் நடத்தும் இளைய நிலா பொழிகிறது இசைநிகழ்ச்சி இந்த ஆண்டு மிகச்சிறப்பாக நடந்தேறியது.
இளையோரால் இளையர்களுக்காக நடத்தப்படும் நிகழ்வு என்ற வாசகங்களுடன் மிகச்சிறப்பாக இந்த நிகழ்ச்சியை ஒழுங்கமைத்து நடத்தியவர் செல்வி கேஷிகா அமிர்தலிங்கம்.
கடந்தாண்டுகளில் இதே தலைப்பில் ஆண்டுதோறும் நிகழ்வுகளை நடத்தி மலையக பள்ளிக்கூடங்களுக்கு நீர் வசதி, கல்வி உபகரணங்கள், பிள்ளைகளுக்கான புத்தகங்கள் இவற்றையெல்லாம் வழங்கியிருந்த கேசிகா இந்த முறையும் அந்த முயற்சியில் தென்னிந்திய இலங்கை பாடல்களை வரவழைத்து மிகச்சிறப்பாக இந்த நிகழ்வினை நடத்தினார்.
விழா தொடக்கத்தில் ஜனரஞ்சனி இசை அகாடமியின் மாணவர்கள் இன்னிசை பாடி ரசிகர்களை மகிழ்வித்தனர். விழாவுக்கு கலாநிதி சந்திரிகா சுப்ரமணியன் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார்
தென்னிந்திய இசை கலைஞர்களையெல்லாம் விஞ்சும் வகையில் செல்வி கேஷிகாவின் குரலில் இழையோடிய நளினமும், குரல்வளமும், மெருகும் பாராட்டத்தக்கதாக இருந்தது. இசையில் ஒரு நல்ல எதிர்காலத்தை எதிர்பார்க்கலாம்.
நிகழ்வு புது வெள்ளை மழை என்ற முதல் பாடலுடன் தொடங்கிய போது அரங்கு அதிர்ந்தது. செல்வி கேஷிகா மல்லிகை என் மன்னன் மயங்கும் என்ற பாடலை பாடியபோது அரங்கமே மயங்கி சாய்ந்தது.
தென்னிந்திய கலைஞர்கள் முதல் பாதியில் அதிக அளவு கடந்த தசாப்தத்தின் பாடல்களை பாடிய போதிலும் ஜெயிலர் பட பாடல் நூ காவாலா பாடப்பட்ட போதுஅனைவரும் ஆடத் துடித்துக் கொண்டிருந்தனர் .
உள்ளூர் மற்றும் தென்னிந்திய. பாடகர்கள் கிரி , ருக்மிணி, சத்தியான, மயூரியா, மற்றும் பலர் கலந்து கொண்டு மிகச்சிறப்பாக பாடல்களை பாடி அசத்தினர்.














No comments:
Post a Comment