மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா .... மெல்பேண் .... அவுஸ்திரேலியா
தேவரும் உள்ளே நரகரும் உள்ளே
தேடிடும் விதத்தில் தெரிந்திடும் பலனே
கோபமும் சாந்தமும் வெளியினில் இல்லை
கொள்கலன் உருவாய் மனிதனே உள்ளான்
கோவிலும் உள்ளே குளங்களும் உள்ளே
நாளுமே நாடி அலைகிறான் தினமும்
தூய்மையும் வாய்மையும் நிறைந்திடும் வேளை
தூயவன் இறைவன் தெரிசனம் தருவான்
ஓடிடும் மனமே ஒருகணம் நில்லு
உயர் குறிக்கோளை உளத்தினில் நிறுத்து
தேடிய சாமி நாடியே வருவார்
நித்தியம் என்பது நித்தியம் இல்லை
நிம்மதி என்பதும் எங்குமே இல்லை
சத்தியம் தருமம் சாத்திரம் அனைத்தும்
மொத்தமாய் உன்னிடம் நிறைந்துமே இருக்கு
பளிங்கினில் களிம்பை ஏற்றிடா இருப்பாய்
பக்குவம் தனிமை முத்தியைக் காட்டும்
எலும்பொடு தசையாய் இருந்திடும் மனிதா
இறைவனும் உந்தன் இதயத்தில் உள்ளான்
No comments:
Post a Comment