எல்லோரும் பணிந்து நிற்போம் ! மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா மெல்பேண்.... அவுஸ்திரேலியா


 கருணைகூர் முகங்கள் கொண்ட
      கந்தனை நினைக்கும் இந்த
பெருமையாம் விரதம் தன்னை
   உரிமையாய் எண்ணி நிற்கும்
அடியவர் ஒன்று கூடி
  அன்னத்தை ஒறுத்து நிற்பர்
அவருளம் புகுந்து கந்தன்
   அருளொளி காட்டி நிற்பான் !

 கந்தனை நினைக்கும்  இந்த 
   சஷ்டியாம் விரதம் தன்னை
சிந்தையில் இருத்தி வைத்து
   சீலமாய் இருக்கும் மாந்தர்
வந்திடும் வினைகள் எல்லாம்
   மறைந்துமே போகச் செய்ய
எந்தையாம் கந்தன் அப்பன்
     என்றுமே உதவி நிற்பான் !


  ஆணவம் என்னும் மாயை
     சூரனாய் தோன்றி நிற்க
 அரன் மைந்தன் கந்தனையன்
     ஆற்றலால் உய்வு பெற்றான்
 அழிக்கின்ற பாங்கில் கந்தன்
     ஆணவம் போக்கி ஆங்கே
 அறிவினை உணர்த்தி நின்று 
     அருளினை அளித்தே நின்றான் !

கந்தனை நினைத்து நாங்கள்
    சஷ்டியை பிடித்து நின்றால்
நிந்தனை கொடுத்து நிற்கும்
     நிட்டூரம் ஒழிந்து போகும்
கொண்டிடும் எண்ணம் எல்லாம்
     குறைவின்றி நடந்தே தீரும் 
எந்தையாம் கந்தன் பாதம்
     எல்லோரும் பணிந்தே நிற்போம் !



    
   image1.jpeg





No comments: