அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் - நிருவாகிகள் தெரிவு


அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் வருடாந்த ஆண்டுப்பொதுக்கூட்டம் கடந்த 4 ஆம் திகதி ஞாயிறன்று மெல்பனில்  Keysborough Secondary College மண்டபத்தில் சங்கத்தின் தலைவர் திரு. சங்கர சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது.
சங்கத்தின் 2017 - 2018 காலப்பகுதியில் சங்கம் மேற்கொண்ட பணிகளை விபரிக்கும்  ஆண்டறிக்கையை செயலாளர் மருத்துவர் நடேசன் சமர்ப்பித்தார்.
அதனையடுத்து, நிதியறிக்கையை நிதிச்செயலாளர் முருகபூபதி சமர்ப்பித்தார். சங்கத்தின் நிதிநிலைமையை கருத்தில்கொண்டு உறுப்பிர்களிடம் நன்கொடைகளை பெறவேண்டும் என்று திரு. ந. சுந்தரேசனும், மீண்டும் சங்கத்தில் ஆயுள்கால உறுப்பினர்களை இணைக்கும் வகையில் அமைப்புவிதிகளில் திருத்தம் கொண்டுவரவேண்டும் என்று திரு. இராஜரட்ணம் சிவநாதனும் யோசனைகளை முன்வைத்தனர்.
அத்துடன் பின்வரும் தீர்மானங்களும் சமர்ப்பிக்கப்பட்டன.
01.                          சங்கத்தின் மூத்த ஆயுள் கால உறுப்பினரும் தமிழ் கலை இலக்கிய ஆர்வலருமான திருமதி பாலம் லக்‌ஷ்மணன் அவர்களின் கணவரும் ஈழத்தின் தமிழ் அறிஞரும் தமிழகத்தில் தனது மேற்கல்வியை தொடர்ந்து இலங்கையில் வித்தியாதிபதியாக பணியாற்றியவரும்,  " இந்திய தத்துவ ஞானம்"  என்ற சிறந்த நூலை வெளியிட்டவருமான ( அமரர் ) கி. இலக்‌ஷ்மணன் அவர்களின் நூற்றாண்டு இந்த ஆண்டு   இறுதியில்                             ( டிசம்பரில் ) தொடங்குகிறது.
அன்னாரை நினைவுகூறும் வகையில் அவரது நூற்றாண்டை எமது அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் முன்னெடுத்து கொண்டாட வேண்டும்.
02. தமிழ் இலக்கியம் இதர இந்திய மொழிகள் உட்பட இலங்கையில்  சிங்கள மொழியிலும் பெயர்க்கப்பட்டு நூலுருவில் வந்துள்ளன. பரஸ்பரம் மொழிபெயர்ப்புகளின் ஊடாக வாசகர்களிடம் புரிந்துணர்வும் நல்லிணக்கமும் வளர்ந்துள்ளது. பல்தேசிய கலாசார நாடான நாம் வதியும் அவுஸ்திரேலியாவில்  வதியும் பல தமிழ் - சிங்கள எழுத்தாளர்கள் மொழிபெயர்ப்பு இலக்கியங்கள் குறித்து பேசியும் எழுதியும் வருகின்றனர். திருக்குறள், பாரதியார் கவிதைகள்,  புதுமைப்பித்தன், ஜெயகாந்தன் படைப்புகள் உட்பட பல இந்திய - இலங்கை  தமிழ் இலக்கியங்கள் சிங்களத்தில் வெளியாகியுள்ளன. அத்துடன் எமது சங்கத்தின் உறுப்பினர்களின் படைப்புகளும் சிங்கள மொழியில் வெளியாகியிருக்கின்றன.
இது தொடர்பான தகவல் அமர்வும் இங்கு வாழும் தமிழ் - சிங்கள எழுத்தாளர்கள் வாசகர்கள் மத்தியில் ஒன்றுகூடலும் 2019 ஆம் ஆண்டில் நடத்துவதற்கு எமது சங்கம் தீர்மானிக்கவேண்டும்.
குறிப்பிட்ட தீர்மானங்களை 2018 - 2019 காலப்பகுதியில் இயங்கவிருக்கும் செயற்குழுவிடம் சமர்ப்பிப்பது என முடிவாகியது.
2018 - 2019 நிருவாகிகள் தெரிவு
காப்பாளர்: திரு. ' கலைவளன் ' சிசு. நாகேந்திரன்
தலைவர்: திரு. சங்கர சுப்பிரமணியன்.
துணைத்தலைவர்கள்: மருத்துவர் ( திருமதி) வஜ்னா ரஃபீக்.
                                            திரு. ந. சுந்தரேசன்.
செயலாளர்: கலாநிதி  எம். ஶ்ரீ கௌரி சங்கர்.
துணைச்செயலாளர்: மருத்துவர் நடேசன்.
நிதிச்செயலாளர்: திரு. லெ. முருகபூபதி.
துணை நிதிச்செயலாளர்: திரு. ப. தெய்வீகன்.
" பூமராங்"  இணைய இதழாசிரியர்: திரு. சாரங்கன்.
செயற்குழுவினர் : சட்டத்தரணி ( திருமதி ) மரியம் நளிமுடீன், திருமதி கலாதேவி பாலசண்முகன், திருவாளர்கள் இராஜரட்ணம் சிவநாதன், இளங்கோ நவரட்ணம், திரு. இப்ரஹிம் ரஃபீக், சட்டத்தரணி பாடும்மீன் சு. ஶ்ரீகந்தராசா.
----------0---------

-->
No comments: