தமிழ் புத்தாண்டு விருது அறிவிப்பு

.
தமிழ் வளர்ச்சித் துறையின், 2017ம் ஆண்டுக்கான, தமிழ் புத்தாண்டு விருது பெறும் தமிழறிஞர்கள், தமிழ் அமைப்பு மற்றும் மென்பொருள் நிறுவனபெயர்களை, முதல்வர் பழனிசாமி நேற்று அறிவித்தார். தலைமை செயலகத்தில், நாளை நடக்கும் விழாவில், விருதுகள் வழங்கப்பட உள்ளன.
உலக தமிழ் சங்க விருதுகள் : தமிழ் வளர்ச்சித் துறையின், 2017ம் ஆண்டுக்கான, தமிழ் புத்தாண்டு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது போல, 2016, 2017ம் ஆண்டுகளுக்கான, உலகத்தமிழ் சங்க விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் விபரம்:
இலக்கிய விருது ஆண்டியப்பன், சிங்கப்பூர்இலக்கண விருது பெஞ்சமின் லெபோ, பிரான்ஸ்மொழியியல் விருது சுபாஷினி, ஜெர்மனி
2017க்கான விருதுகள்
இலக்கிய விருது சந்திரிகா சுப்ரமணியன், ஆஸ்திரேலியாஇலக்கண விருது உல்ரிகே நிகோலஸ், ஜெர்மனிமொழியியல் விருது மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, ஆஸ்திரேலியா

உலகத் தமிழ் சங்க விருது பெறுவோருக்கும், தலா ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம் வழங்கப்படும்.
தமிழ்த்தாய் விருது பெறும் அமைப்புக்கு, ஐந்து லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் கேடயம் வழங்கப்படும் கபிலர் விருது, உ.வே.சா.,விருது, கம்பர் விருது, சொல்லின் செல்வர் விருது, ஜி.யு.போப் விருது, உமறுப்புலவர் விருது, இளங்கோவடிகள் விருது, அம்மா இலக்கிய விருது மற்றும்முதலமைச்சரின் கணினித் தமிழ் விருது பெறுவோருக்கு, தலா ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம், ஒரு சவரன்தங்கப்பதக்கம் வழங்கப்படும்.சென்னை, தலைமை செயலகத்தில், நாளை நடக்கும் விழாவில், முதல்வர்பழனிசாமி, விருதுகளை வழங்கி பாராட்ட உள்ளார்.அதே நேரத்தில், தமிழக அரசின், 2017க்கான, மொழிபெயர்ப்பாளர் விருது, நெல்லை சு.முத்து, தெய்வசிகாமணி, குறிஞ்சிவேலன், ஆனைவாரி ஆனந்தன், மறவன் புலவு சச்சிதானந்தம், வசந்தா சியாமளம், ஆல்துரை, சங்கரநாராயணன், ஆண்டாள் பிரியதர்சினி, தர்லோசன் சிங்பேடி ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு, தலா ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் வழங்கப்படும்.
nantri: தினமலர் 

No comments: