இலங்கைச் செய்திகள்

புதியதோர் மனிதனை சமூகத்திற்கு பெற்றுக்கொடுப்பதே புதுவருடம் ; புதுவருட வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி 

வளமான தேசத்தைக் கட்டியெழுப்பும் ஆண்டாக புத்தாண்டு அமையட்டும் ; புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் பிரதமர் 

வடக்கு ஆளுநர் மாற்றம் : 7 புதிய ஆளுநர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம்

ஜே.வி.பி.யின் மே தின கூட்டம் யாழ்ப்­பா­ணத்தில்

நந்திக்கடலிலிருந்து அகற்றப்பட்டது இராணுவ கண்காணிப்பு முகாம்

முள்ளிவாய்க்காலில் பெருமளவான ஆயுதங்கள் மீட்பு





புதியதோர் மனிதனை சமூகத்திற்கு பெற்றுக்கொடுப்பதே புதுவருடம் ; புதுவருட வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி 

14/04/2018 புதிய பார்வையும் புதிய நோக்கும் கொண்ட புதியதோர் மனிதனை சமூகத்திற்கு பெற்றுக்கொடுப்பதே புதுவருடம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
 ஜனாதிபதி வெளியிட்டுள்ள தமிழ் சிங்கள புத்தாண்டு வாழ்த்து செய்தியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவரது வாழ்த்துச் செய்தியில்,
கலாசார மனிதனை பரிபூரணப்படுத்தும் வகையிலேயே மானிட கலாசாரம் பல யுகங்களாக பரிணாமம் அடைந்து வந்திருக்கின்றது, உலகின் பல்வேறு இனத்தவர்களும் வருடாந்தம் கொண்டாடும் அவர்களது தேசிய அடையாளத்தை வெளிப்படுத்தும் கலாசார வைபவங்கள் அவர்கள் தமது பாரம்பரிய உரிமையுடன் கொண்டிருக்கும் பிணைப்பினையும் அயராத அர்ப்பணிப்பினையும் வெளிப்படுத்துகின்றது.
சிங்கள-தமிழ் புத்தாண்டின் மூலமாக கீழைத்தேய வாசிகளாகிய எம்முடைய உயரிய பண்பாடே வெளிப்பட்டு நிற்கின்றது.
புதுவருடம் என்பது உண்மையிலேயே புதிய பார்வையும் புதிய நோக்கும் கொண்ட புதியதோர் மனிதனை சமூகத்திற்கு பெற்றுக்கொடுப்பதேயாகும். புத்தாண்டு பிறக்கும் புண்ணிய காலத்தில் தத்தமது நம்பிக்கைக்கு அமைவாக புத்தாண்டு சம்பிரதாயங்களுடன் இணையும் இந்த புதுமனிதன், புத்தாண்டு பிறப்புடன் அமைதி, சகவாழ்வு மற்றும் நல்லிணக்கத்தை முன்னிலைப்படுத்தி சொந்தபந்தங்களை காணச் செல்லும் ஒரு சொந்தக்காரனாகவே இச் சமூகத்தில் பிரவேசிக்கின்றான் என ஜனாதிபதியின் புதுவருட வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் புதுவருட வாழ்த்துச் செய்தியின் முழு விபரமும் வருமாறு,
நன்றி வீரகேசரி 









வளமான தேசத்தைக் கட்டியெழுப்பும் ஆண்டாக புத்தாண்டு அமையட்டும் ; புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் பிரதமர் 

14/04/2018  தேசமொன்றைக் கட்டியெழுப்புவதற்கு சமாதானம், நல்லிணக்கம், சகவாழ்வுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படும், மகிழ்ச்சியான இனிய புத்தாண்டாக அமையட்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது புத்தாண்டு வாழ்த்துச்செய்தியில் தெரிவித்துள்ளார்.
சித்திரை புத்தாண்டு தினத்தை முன்னிட்டு  பிரதமர் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில் மேலும்  குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இன, மத, கட்சி, நிற பேதங்களை ஒதுக்கிவிட்டு எமது நாட்டிலுள்ள அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாடும் முக்கியமான தேசிய நிகழ்வு சிங்கள, தமிழ் புத்தாண்டாகும். 
இயற்கை மற்றும் மனிதனுக்கிடையே காணப்படும் நெருக்கமான உறவினை அர்த்தமுள்ளதாக மாற்றியமைத்து, சூரியனை முதலாகக் கொண்ட இயற்கைக்கு நன்றிக் கடன் செலுத்தும், தேசிய ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தை மேம்படுத்தும் சூரியத் திருவிழாவானது, புதிய எண்ணங்களுடனும் திடசங்கற்பத்துடனும் வாழ்வினைப் புதுப்பித்துக் கொள்வதற்குக் கிடைக்கும் அருமையான சந்தர்ப்பமாகும். 
இன, மத, கட்சி, நிற பேதங்களை ஒதுக்கி விட்டு எமது நாட்டிலுள்ள அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாடும் முக்கியமான தேசிய நிகழ்வு சிங்கள, தமிழ் புத்தாண்டாகும். இனம், மதம், அந்தஸ்து எதுவாயினும் கலாசாரப் பல்வகைமையை ஏற்றுக் கொண்டு, அதற்கு மதிப்பளித்து, அனைவருடனும் சந்தோசமாகவும் சமாதானத்துடனும் வாழ்வதற்கு இந்தப் புத்தாண்டைப் புதியதோர் ஆரம்பமாக மாற்றியமைப்போம்.
நீண்ட காலமாக இந்த நாட்டு மக்களின் வாழ்வுடன் பின்னிப் பிணைந்து காணப்படும் புத்தாண்டுப் பழக்கவழக்கங்களில் அர்த்தத்துடன் பங்கு கொண்டு அந்தக் கலாசார உரிமையை எமது எதிர்கால சந்ததியினருக்குப் பரிசளிக்கவும் இதனை சந்தர்ப்பமாக மாற்றிக் கொள்வோம்.

வளமான தேசமொன்றைக் கட்டியெழுப்புவதற்கு சமாதானம், நல்லிணக்கம், சகவாழ்வுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படும், மகிழ்ச்சியான இனிய புத்தாண்டாக அமையட்டும் எனப் பிரார்த்திக்கிறேன் என பிரதமரின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. நன்றி வீரகேசரி 







வடக்கு ஆளுநர் மாற்றம் : 7 புதிய ஆளுநர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம்

12/04/2018 புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 7 மாகாணங்களுக்கான ஆளுநர்கள் இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.
பதவிப்பிரமாணம் செய்துகொண்ட ஆளுநர்களின் பெயர் விபரங்கள் பின்வருமாறு
1. ஹேமகுமார நாணயக்கார - மேல் மாகாணம்
2. கே.சி.லோகேஸ்வரன்  - வடமேல் மாகாணம்
3. திருமதி. நிலுக்கா ஏக்கநாயக்க - சப்ரகமுவ மாகாணம்
4. ரெஜினோல்ட் குரே - மத்திய மாகாணம்
5. மார்ஷல் பெரேரா  - தென் மாகாணம்
6. எம்.பி.ஜயசிங்க  - வடமத்திய மாகாணம்
7. பி.பீ.திசாநாயக்க  - ஊவா மாகாணம்
ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோவும் இவ் பதவிப்பிரமாண நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி 








ஜே.வி.பி.யின் மே தின கூட்டம் யாழ்ப்­பா­ணத்தில்

12/04/2018 வெசாக் வாரத்­திற்­காக மே தினத்தை கைவிட முடி­யாது.  1ஆம் திக­தியே  மே தினத்தை நடத்­துவோம்  எனவும் யாழ்ப்­பா­ணத்தில்  மே முதலாம் திக­தியும் கொழும்பில் 7 ஆம் திக­தியும் மே தினத்தை கொண்­டா­டுவோம் என்று    ஜே.வி.பி.யின் பொதுச்­செ­ய­லாளர் ரில்வின் சில்வா தெரி­வித்தார். 
மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் செய்­தி­யாளர் சந்­திப்பு நேற்று கட்சி தலைமை அலு­வ­ல­கத்தில் இடம்­பெற்ற நிலையில் அதில் கலந்­து­கொண்ட போதே அவர் இதனைக் குறிப்­பிட்டார். 
அவர்  அங்கு மேலும் கூறு­கையில், 
மே தினத்தை 7 ஆம் திகதி கொண்­டா­டு­மாறு அர­சாங்கம் வலி­யு­றுத்­தி­யுள்­ள­துடன் மே மாதம் முதலாம் வாரம் வெசாக் நோன்­மதி வார­மாக உள்­ள­மை­யினால் இந்தத் தீர்­மா­னத்தை எடுத்­த­தாக கார­ணமும் கூறி­யுள்­ளனர். எவ்­வாறிருப்­பினும் வெசாக் வாரம் என்ற கார­ணத்­தினால் மே தினத்தை தடுக்க எவ­ருக்கும் உரிமை இல்லை. கொழும்பில் வெசாக் வாரத்தை  மக்கள் கொண்­டாடும் கார­ணத்­தினால் எம்மால் மக்­க­ளுக்கு இடைஞ்­ச­லாக செயற்­பட முடி­யாது. 
இம்­முறை ஜே.வி.பி. யின் மே தினக் கூட்­டத்தில் வழ­மையை விடவும் மக்கள் அதி­க­மாக கலந்­து­கொள்­வார்கள். அதற்­கான வேலைத்­திட்­டங்­களை நாம் முன்­னெ­டுத்து  வரு­கின்றோம். எனினும் கொழும்பில் பாரிய மே தினக் கூட்­டத்தை நடத்­து­வ­தனால் பாரிய நெருக்­க­டிகள் ஏற்­படும். மாநா­யக்க தேரர்­களும் எமக்கு இந்த கார­ணங்­களை தெளிவுபடுத்­தினர். ஆகவே மாநா­யக்க தேரர்­களின் கோரிக்­கையை நாம் மீற­வில்லை. மே தினத்­தன்று ஜே.வி.பி. யின் தொழி­லாளர் உரி­மைக்­கான மே தினக் கூட்டம் கட்­டாயம் இடம்­பெறும்.
 மே மாதம் முதலாம் திகதி எமது மே தினக் கூட்­டத்தை யாழ்ப்­ப­ாணத்தில்  நடத்­து­கின்றோம். எமது தொழிற்­சங்­கங்கள், சிவில் அமைப்­புகள் மற்றும் பிர­தி­நி­திகள் அனை­வ­ரையும் இணைத்­துக்­கொண்டு யாழ்ப்­ப­ாணத்தில் எமது மே தினத்தை நடத்­துவோம். 7 ஆம் திகதி கொழும்பில் எமது மே தினக்­கூட்டம் வழ­மை­போ­லவே இடம்­பெறும். இம்­முறை   பொரளை  சந்­தியில் ஆரம்­ப­மாகும் எமது பேரணி கிரு­லப்­பனை பி.ஆர்.சி. மைதா­னத்தில் மே தினக்கூட்­டத்­துடன் நிறை­வ­டையும். 
தற்­போது நாட்டில் தொழில் வர்க்­கத்­தினர் பாரிய நெருக்­க­டி­யினை சந்­தித்­துள்ள நிலையில் எமது சாதா­ரண வர்க்க மக்­க­ளுக்­காக போரா­ட­வேண்­டிய நிலைமை உரு­வா­கி­யுள்­ளது. வரி சுமையில் மக்கள் நெருக்­கப்­பட்­டுள்­ளனர். பொரு­ளா­தார ரீதியில் ஆரோக்­கி­ய­மான செயற்­பா­டுகள் எவையும் இல்­லாது போயுள்­ளன. வேலை­வாய்ப்­புகள் இல்­லாது எமது இளை­ஞர்கள் தவிக்­கின்­றனர். மனித உரிமை மிகப்­பெ­ரிய கேள்­வி­யாக மாறியுள்ளது. சிறுபான்மை மக்கள் மீதான அடக்குமுறை அதிகரித்துள்ளது. ஆகவே இவற்றையெல்லாம் அடிப்படையாக வைத்துக்கொண்டே நாம் எமது மே தினக் கூட்டத்தை நடத்தவுள்ளோம் என அவர் குறிப்பிட்டார். நன்றி வீரகேசரி 










நந்திக்கடலிலிருந்து அகற்றப்பட்டது இராணுவ கண்காணிப்பு முகாம்

09/04/2018 முல்லைத்தீவு -வட்டுவாகல்  நந்திக்கடல் பகுதியில் உள்ள இராணுவ கண்காணிப்பு முகாம் மற்றும் உணவகம் என்பன இராணுவத்தினரால் அகற்றப்பட்டுள்ளது .
கடந்த 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது வட்டுவாகல் பகுதியை கைப்பற்றிய இராணுவத்தினர் முல்லைத்தீவு-பரந்தன் பிரதான வீதிப் போக்குவரத்தை கண்காணிப்பதற்காக குறித்த முகாமை நந்திக்கடல் பகுதியில் அமைத்திருந்ததோடு உணவகம் ஒன்றினையும் அமைத்திருந்தனர்.
இந்த நிலையில், 9 வருடங்களின் பின்னர் இந்த கண்காணிப்பு முகாம் இராணுவத்தினரால் நேற்றையதினம்  அகற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி 









முள்ளிவாய்க்காலில் பெருமளவான ஆயுதங்கள் மீட்பு

09/04/2018 தமிழீழ விடுதலைப்புலிகளால் புதைத்து வைக்கப்பட்டதாக நம்பப்படும் பெருந்தொகையான வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்கள் என்பன முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் இன்றையதினம் மீட்கப்பட்டுள்ளது.
வவுனியா விசேட அதிரடி படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வவுனியா விசேட அதிரடிப்படை அதிகாரி எஸ் பி சில்லெஸ்டரின் தலைமையில் முல்லைத்தீவு உதவி பொலிஸ் பொறுப்பதிகாரி சி ஐ ஆனந்த தலைமையில் முல்லைதீவு விசேட அதிரடிப்படையினரும் இணைந்து இந்த அகழ்வு நடவடிக்கையை மேற்கொண்டு ஆயுதங்களை மீட்டுள்ளனர்.
நான்கு தண்ணீர் தாங்கிகளில் வைக்கப்பட்டு புதைக்கப்பட்ட நிலையில் மைக்கிறோ பிஸ்டல் ரவைகள் 3000,கைகுண்டுகள் 34, தமிழன் கைக்குண்டு 22,மிதிவெடிகள் 48,ஆர் பி ஜி எறிகணைகள் 7,ஜிபிஎம்ஜி ரவைகள் 2000,விமான எதிர்ப்பு ரவைகள் 1710,டேகிணற்றோர்கள் 06, கிளைமோர் 04,விடுதலைப்புலிகளின் தயாரிப்பான அருள் எறிகணைகள் 34,சி4 வெடிமருந்து 48kg என்பன மீட்கப்பட்டு பாதுகாப்பாக அழிப்பதற்காக விசேட அதிரடிப்படையினரால் எடுத்து செல்லப்பட்டன .
நன்றி வீரகேசரி 






No comments: