.
அன்பாலயம் நடாத்திய இளம் தென்றல் 2018 சென்ற சனிக்கிழமை 07 04 2018 அன்று Blacktown Bowman Hall இல் இடம் பெற்றது . நீண்ட காலமாக ஈழ மக்களுக்கு உதவி வரும் அன்பாலயம் அமைப்பின் குழுவினர் வழமை போலவே இம்முறையும் இந்நிகழ்வை சிறப்பாக நடாத்தினார்கள் . குறிப்பிட்ட நேரத்திற்கு மகேஸ்வரன் பிரபாகரன் ஒலி வாங்கியோடு வந்து நிகழ்வை ஆரம்பித்து வைக்க ஈஸ்ட்வூட் பாடசாலை மாணவர்களின் தமிழ் மொழி வாழ்த்தோடு ஆரம்பமானது .
தர்சனா இசைக் குளுவினரின் அருமையான இசை மக்களை கவர்ந்து கொண்டது . எத்தனை பாடகர்கள் மாறி மாறி வந்து பாடினார்கள். முதலில் காவியாவின் மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை பாடலுக்கு அவருக்கு எதையும் கொடுக்கலாம் போல் இருந்தது. அவரைத் தொடர்ந்து வந்த கிரி உன்னிடம் மயங்குகிறேன் என்று வந்தார் மனிசன் ஆரில் மயங்கினாரோ தெரியாது நாம் எல்லோரும் அவர் பாடலில் மயங்கித்தான் விட்டோம்.
பாவலன் , அகல்யா , விமல் , என்று பாடகர்கள் அசத்தியே விட்டார்கள் . குறிப்பாக அகல்யாவின் காற்றில் உந்தன் கீதம் இன்னும் காதில் ஒழித்துக் கொண்டிருக்கிறது. ஒரு சின்ன ஜானகியை பார்த்தது போல் இருந்தது.
இசைக் கலைஞர்களைப் பற்றி பேசவே தேவை இல்லை . குறிப்பாக வெங்கடேசின் புல்லாங்குழல் , சௌமியாவின் வீணை, சாருராம் சொல்லவே தேவை இல்லை. கூறிக் கொண்டே போகலாம்.
நிகழ்வை விட இதில் சேரும் நிதி நல்ல விடயத்திற்காக ஒழுங்காக செலவிடப் படுகிறது என்பதை எல்லோரும் அறிவோம் . தொடரட்டும் அன்பாலயத்தின் சேவை.
No comments:
Post a Comment