30/12/2017 பொரளை ஜயரத்ன மலர்ச்சாலையில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள  வீரகேசரி ஆசிரிய பீடத்தில் கடமையாற்றிய சிரோஷ்ட ஊடகவியலாளர் பன்னீர்செல்வத்தின் பூதவுடலுக்கு ஜனாதிபதி சற்றுமுன்னர் அஞ்சலி செலுத்தினார்.
 
52 வய­தான அவர் அண்­மைக்­கா­ல­மாக  கடு­மை­யான சுக­வீ­ன­முற்று தொடர்ச்­சி­யாக சிகிச்சை பெற்று வந்த நிலை­யி­லேயே நேற்று காலை வேளையில் கால­மானார். 
1988 ஆம் ஆண்டு காலப்­ப­கு­தியில்  வீர­கே­சரி நிறு­வ­னத்தின் விளம்­ப­ரப்­ப­கு­தியில் இலி­கி­த­ராக இணைந்து கொண்ட அவர் ஆக்­கங்­க­ளையும் எழுதி வந்தார். சிறந்த மொழி­பெ­யர்ப்­பா­ள­ராக விளங்­கிய பன்­னீர்­செல்வம் மிகக்­கு­று­கிய காலத்தில்  தன்னை ஊட­கத்­து­றையில் இணைத்­துக்­கொண்டார். இவர் தினக்­குரல் பத்­தி­ரி­கை­யிலும்  தொழில் புரிந்­த­துடன் உள்­நாட்டு மற்றும்  வெளி­நாட்டு கட்­டு­ரை­க­ளையும்  எழு­தினார். 
மீண்டும் வீர­கே­ச­ரியில் இணைந்து கொண்ட பன்­னீர்­செல்வம் பாரா­ளு­மன்ற செய்­தி­யா­ள­ரா­கவும் முழு­நேர ஊட­க­வி­ய­லா­ள­ரா­கவும் பணி­யாற்­றினார்.  அத்­துடன் பல்­வேறு கட்­டு­ரை­க­ளையும் எழு­தினார். 
இதே­வேளை இலங்கை பத்­தி­ரிகை பேரவை மற்றும் இலங்கை  பத்­தி­ரிகை ஆசி­ரியர் சங்கம் ஆகி­யன இணைந்து வரு­டந்­தோறும் மேற்­கொண்­டு­வரும் சிறந்த ஊட­க­வி­ய­லா­ள­ருக்­கான விருது விழாவில் இம்­முறை வாழ்நாள் சாத­னை­யாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
அன்னாரது இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.