தமிழ் சினிமா

காஸி


இந்திய சினிமாவில் எப்போதாவது தான் நல்ல திரைப்படங்கள் வரும், அப்படிப்பட்ட திரைப்படம் தான் இந்த காஸி, இப்படத்தின் முழு விமர்சனத்தை பார்ப்போம்.

கதைக்களம்

Ghazi இந்தியாவின் விமானந்தாங்கிப் போர்க்கப்பலான INS VIKRANTH. ஐ என் எஸ் விக்ராந்தின் செயல்திறனை நினைத்து பயப்படும் பாகிஸ்தான் கடற்படை , அன்றைய கிழக்கு பாகிஸ்தானில் (இன்றைய பங்களாதேஷ்) கிளர்ச்சியாளர்களை அடக்க, இந்தியாவை மீறி இராணுவத்தையோ விமானங்களையோ அனுப்ப இயலாத நிலையில், இந்தியாவிற்கே குறிவைக்கின்றார்கள்.
அமெரிக்காவில் இருந்து வாங்கப்பட்ட அதி நவீன நீர்மூழ்கிக்கப்பலில் அரபிக்கடல், இந்தியக்கடல் என்று பயணித்து வங்காள விரிகுடாவிற்கு வருகிறார்கள். பாகிஸ்தான் சதியை முன்பே அறிந்த ரா, இந்தையக்கடற்படையின் கிழக்கு பிராந்திய தலைமையகத்தில் வந்து ஓம் பூரியிடம் எச்சரித்துச் செல்கிறார்கள். கிழக்குக் கடற்கரையோர பாதுகாப்பை உறுதிப்படுத்த கோபக்காரக் கேப்டன் கே கே மேனனுடன், சாதுர்யமான ராணா ஆகியோர் இருவரும் கேப்டனாகப் பணியாற்றும் வகையில் எஸ் 21 நீர்மூழ்கிக்கப்பலில் அனுப்பி வைக்கப்படுகிறது.
காஸியை ஒப்பிடும் போது, பலம் குறைந்த எஸ் 21 ஐ வைத்துக் கொண்டு, காஸியின் சதியை அதாவது பாகிஸ்தான் கடற்படையின் சதியை முறியடித்து, என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

முதலில் இப்படிப்பட்ட ஒரு படத்தை முதல் படமாக எடுத்ததற்காக அறிமுக இயக்குனர் நர்சங்கல்ப்பை மனம் திறந்து பாராட்டலாம், எந்த ஒரு இடத்திலும் திரைக்கதை சோம்பம் தட்டவில்லை.
ராணா, அதுல் குல்கர்னி, டாப்ஸி என அனைவரும் தங்கள் கதாபாத்திரங்களை நிறைவாக செய்துள்ளனர்.
நீர்மூழ்கிக் கப்பல் மூழ்கியது, அதில் பயணித்த அத்துனை வீரர்களும் பலி, என்று நாம் செய்தித்தாள்களில் படிக்கும் போது அது ஒரு சாதாரணமான செய்தி அவ்வளவுதான். ஆனால், ஒரு கட்டத்தில் காஸியின் கண்ணிவெடியில் சிக்கி, இலேசாக சிதிலமடைந்து ஆழ்கடலுள் தரைதட்டும் போது நமக்கும் மூச்சு முட்டுகிறது.

க்ளாப்ஸ்

படத்தின் கதை மற்றும் திரைக்கதை, இத்தனை பதட்டத்துடன் சீட்டின் நுனிக்கு வந்து ஒரு படம் பார்த்து பல நாட்கள் ஆகிவிட்டது.

பல்ப்ஸ்

கொஞ்சம் கிராபிக்ஸ் காட்சிகள் யதார்த்தம் விலகுகிறது.
மொத்தத்தில் காஸி இந்திய சினிமா ரசிகர்கள் அனைவரும் கொண்டாடப்பட வேண்டிய படம்.
Cast:

நன்றி   cineulagam