அமெரிக்க ரயில் விபத்து ; மூவர் பலி, பலர் காயம்
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் கனிமொழி விடுதலை!!!
ஜெருசலேமை தலைநகராக்கும் அமெரிக்காவின் தீர்மானம் தோல்வி
பிலிப்பைன்ஸில் மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி 133 பேர் பலி
ஐ.நா. விசாரணை அதிகாரி மியன்மாருக்குள் நுழையத் தடை

19/12/2017 அமெரிக்காவின் வொஷிங்டனில் இடம்பெற்ற பயணிகள் ரயில் விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.

இவ் விபத்து அமெரிக்க நேரப்படி திங்கட்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் காயமடைந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் காயமடைந்தவர்களில் பலர் ஆபத்தான நிலையில் இருப்பதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாலத்திலிருந்து பயணிகள் ரயில் தடம் புரண்டு விழுந்ததால், அந்தப் பாலத்தின் கீழாக பயணித்த வாகனங்கள் மீது ரயில் பெட்டிகள் விழுந்து விபத்திற்குள்ளாகியுள்ளன.
இதன்போது, இரு லொறிகள் உட்பட ஏழு வாகனங்கள் சிக்கியுள்ளன.
குறித்த வழிதடத்தில் செல்லும் அம்ட்ராக் ரயிலின் முதல் பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
சியேட்டலில் இருந்து உள்ளூர் நேரப்படி காலை 6 மணிக்கு புறப்பட்ட விபத்துக்குள்ளான ரயில் 501 போர்ட்லேண்டை நோக்கி சென்றுக் கொண்டிருந்தது.
இந்த விபத்து டக்கோமாவின் தெற்கு பகுதியில் உள்ள வழிததடத்தில் ஏற்பட்டது. இந்த வழித்தடமானது முன்பு சரக்கு ரயில்கள் செல்ல மட்டும் உபயோகிக்கப்பட்டதாகும் .
குறித்த பயணிகள் ரயிலில் 77 பயணிகள் மற்றும் 7 ஊழியர்கள் பயணம் செய்துள்ளனர்.

இது தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பதிவிட்டுள்ள டுவிட்டரில்,

"இந்த விபத்தானது தனது உட்கட்டமைப்பு திட்டம் ஏன் முக்கியாமான ஒன்று என்பதை காட்டுகிறது. நம் நாட்டின் வீதிகள், பாலங்கள் மற்றும் ரயில்வே ஆகியவை மோசமாக உள்ள போது கடந்த காலங்களில் நாம் 7 டிரில்லியன் தொகையை மத்திய கிழக்கு நாடுகளில் செலவிட்டு உள்ளோம்" என அதில் குறிப்பிட்டுள்ளார். நன்றி வீரகேசரி
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் கனிமொழி விடுதலை!!!
21/12/2017 இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரும்
விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
குற்றச்சாட்டுகளை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க சி.பி.ஐ தவறிவிட்டதால் ஆ.ராசா உள்ளிட்ட குற்றம்சாட்டப்பட்ட 14 பேரையும் விடுவிப்பதாக நீதிபதி ஓ.பி.சைனி அறிவித்துள்ளார்.
கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக நடந்த இந்த வழக்கு விசாரணையில் குற்றம்சாட்டப்பட்ட கனிமொழி உள்ளிட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளதால் தி.மு.கவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
2ஜி வழக்கில் சாதகமான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதால் தி.மு.க செயல் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
வழக்கிலிருந்து விடுதலையான கனிமொழி,

"சுரங்கப் பாதையின் முடிவில் வெளிச்சத்தை நிச்சயம் பார்ப்பேன் என்ற நம்பிக்கை எனக்கு எப்போதும் உள்ளது. அந்த நம்பிக்கையுடன் கடந்த ஆறு வருடங்களாக நான் இந்த நாளுக்காக காத்துக் கொண்டிருந்தேன்.
கடந்த ஆறு வருடங்களாக பொய்ப் புகார் அடிப்படையில் இந்த வழக்கில் நான் குற்றவாளி ஆக்கப்பட்டேன் என்று எல்லோரிடமும் விளக்க வேண்டியிருந்தது.
அந்த நிர்வாகத்தில் வெறும் 20 நாட்கள் இயக்குநராக இருந்த காரணத்துக்காகவே நான் குற்றவாளியாக்கப்பட்டேன் என்பதை நான் புரிந்து கொண்டேன். அந் நிறுவனத்தின் எந்த ஒரு பொது கூட்டத்திலும் நான் பங்கேற்றது கிடையாது. எந்த ஒரு ஆவணத்திலும் நான் கையெழுத்திட்டது கிடையாது.
ஆழமாக கூற வேண்டும் என்றால் தி.மு.கவின் ஆட்சி அடுத்த ஐந்து வருடங்களுக்கு தொடரக்கூடாது என்பதற்காகவே இந்த வழக்கில் நான் தள்ளப்பட்டேன்.
எனது பணியின் அடிப்படையில் நான் ஒரு பத்திரிகையாளர், எழுத்தாளர் . அரசியல்வாதி அல்ல. இந்த வழக்கில் நான் மோசடி செய்து செல்வத்தை குவித்ததாக குற்றஞ்சட்டப்பட்டேன்.
இன்று நான் உங்களுக்கு ஒன்றை கூறுகிறேன்..,,,, நான் அரசியல் மூலம் செல்வத்தை குவிக்க நினைத்திருந்தால் எனது 20 வயதிலேயே அரசியலில் இணைந்திருப்பேன். ஆனால் நான் எனது 40களில் தான் அரசியலில் நுழைந்தேன். அதுவும் கட்சியில் ஏற்பட்ட இடைவெளியை நான் நிரப்ப வேண்டும் என்று கட்சி வேண்டியதால்...
நான் பதவிக்காக ஆசைப்பட்டிருந்தால் எளிதாக அமைச்சராகியிருப்பேன். நான் அமைச்சர் பதவியை நிராக்கரித்தேன். இதற்கிடையில் நான் பொய்யாக இந்த வழக்கில் இழுக்கப்பட்டேன். அது எனக்கு பயமாக இருந்தது.
தற்போது கட்சியை வலுப்படுபடுத்துவது, தமிழக மக்களுக்காக பணியாற்றுவது இதுதான் எனது எண்ண ஓட்டமாக உள்ளது.
தொடர்ந்து ஆறு வருடங்களாக எனக்கு தூணாக இருந்து ஆதரித்த எனது குடும்பம், கட்சி, தொண்டர்கள் அனைவருக்கும் நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

22/12/2017 ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்து அமெரிக்கா வெளியிட்ட அறிவிப்பை நிராகரிக்கும் தீர்மானம் ஐ.நா. பொதுச் சபையில் வெற்றி பெற்றுள்ளது.

இலங்கை உட்பட 128 நாடுகள் இந்தத் தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்துள்ளன. 35 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. 9 நாடுகள் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்துள்ளன.
ஜெருசலேம் நகரத்துக்கு இஸ்ரேலும் பலஸ்தீனமும் உரிமை கொண்டாடிவரும் நிலையில் இது ஒரு தீர்க்கப்படாத சர்ச்சையாகத் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக ஏற்பதாக அண்மையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
பிலிப்பைன்ஸில் மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி 133 பேர் பலி
23/12/2017 பிலிப்பைன்ஸின் மின்டானோ தீவில் ஏற்பட்டுள்ள மண்சரிவு மற்றும்
வெள்ளப்பெருக்கில் சிக்கி 133 பேர் பலியாகியுள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள்
தெரிவிக்கின்றன.

பிலிப்பைன்ஸில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக அடை மழை பெய்துவரும்
நிலையில் மின்டானோ தீவில் மணிக்கு 80 கிலோமீற்றர் வேகத்தில் ரெம்பின்
சூறாவளி நேற்று வீசியுள்ளது. இதனையடுத்து அங்கு வெள்ளப்பெருக்குடன் பாரிய
மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்தத் தீவிலுள்ள ரெபோட், பியாகாபோ ஆகிய கிராமங்களே மண்சரிவு மற்றும்
வெள்ளப்பெருக்கால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. மண்ணில் புதையுண்டவர்களை
மீட்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந் நாட்டு ஊடகங்கள்
தெரிவிக்கின்றன.

இக்கிராமங்களிலுள்ள பல வீடுகள் மண்ணில் புதையுண்ட நிலையில், அவ்வீடுகளில் வசிக்கும் பலர் வெளியேறியுள்ளனர்.

இதேவேளை பல வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன்,
ஆறுகள் பெருக்கெடுக்கும் அபாயத்தில் உள்ளன. மேற்படி தீவில் மின்விநியோகம்
தடைப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரெம்பின் சூறாவளி ஸ்ப்ராட்லி தீவை நோக்கி இன்று நகரவுள்ளதாகவும் வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நன்றி வீரகேசரி
ஐ.நா. விசாரணை அதிகாரி மியன்மாருக்குள் நுழையத் தடை
24/12/2017 ஐ.நா.வின் மனித உரிமை விசாரணை அதிகாரி தங்கள் நாட்டுக்குள் நுழைய மியன்மார் தடை விதித்துள்ளது.
மியன்மாரில் ரக்கைன் மாகாணத்தில் ரோஹிங்யா முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதல்கள் உட்பட, மியன்மாரின் மனித உரிமைகள் குறித்து ஆய்வு நடத்துவதற்காக விசாரணை அதிகாரி யாங்ஹீ லீ மியன்மார் செல்ல இருந்தார். ஆனால், அவர் தனது பணியைச் செய்யும் போது நடுநிலையாக இல்லாததால் மியன்மாருக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளதாக அரசு கூறியுள்ளது.
ரக்கைனில் ஏதோ மோசமான செயல் நடக்கிறது என்பதை தனக்கு தடை விதிக்கப்பட்ட முடிவு காட்டுகிறது என யாங்ஹீ லீ கூறியுள்ளார். அண்மையில் ரக்கைனில் ஒரு கிராமத்தில் உள்ள புதைகுழியில் 10 உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக மியன்மார் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மேலும், கடந்த ஜூலை மாதம் மியன்மாருக்கு சென்ற யாங்ஹீ லீ, மியன்மாரில் ரோஹிங்யா முஸ்லிம்கள் நடத்தப்படும் விதம் குறித்து கவலை தெரிவித்திருந்தார். அத்துடன், தன்னுடைய பயணத்துக்கு தடை விதித்து மியன்மார் எடுத்துள்ள முடிவு, தனக்கு குழப்பத்தையும் ஏமாற்றத்தையும் அளித்துள்ளதாக லீ கூறியுள்ளார். முன்னதாக அவர் பல முறை மியன்மாருக்கு பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. லீயின் பணி ஒருதலைப்பட்சமாக இருப்பதாலும், அவர் மீது நம்பிக்கை இல்லாததாலும் அவருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மியன்மார் அரசு செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். நன்றி வீரகேசரி

No comments:
Post a Comment