ஏனையவர்களிலிருந்து கார்த்திகா வேறுபடும் விதம் 4- நாட்டியகலாநிதி கார்த்திகா கணேசர்

.
SIVANJALI -  EASWARI
1970 இல் பிருத்தானியாவில் இருந்து இலங்கை திரும்பிய நான் எனது நாட்டிய கலையகம் "கார்த்திகா ஆடற்கலையகத்தை நிறுவி நடனம் கற்பிக்க ஆரம்பித்தேன். நளினமான வழுவூர் பாணியிலான நடனத்தை கற்பிக்கும் அதே வேளையில் எனது மாணவியருக்கு நாம் கூற வேண்டியவற்றை எவ்வாறு உடலை ஊடகமாக கொண்டு புரிய வைக்கலாம் என்பதை கற்றுக் கொடுத்தேன். ஒரு எழுத்தாளனுக்கு பேனா எப்படியோ அதே போன்றதே நடனக் கலைஞனுக்கு உடல். நாம் கூறுவதை உடல் என்ற சக்தி மிகுந்த ஊடகத்தால் எடுத்துக் கூறும் போது பார்ப்போர் மனதில் கருத்தை பதிய வைப்பதே நாட்டியம். இத்தகைய பயிற்சி சனி ஞாயிறு கிழமைகளில் காலை 7.30 இக்கு ஆரம்பமாகி மதியம் 1 மணி வரை நீளும். நாம் பரதம் மட்டும் ஆடவில்லை. நாளாந்தம் வெவ்வேறு கருத்துக்களை எவ்வாறு உடலால் புரிய வைக்கலாம் என்பதை பயிற்சி முறையில் ஆராய்ந்தோம். சந்திர மண்டலத்திற்கு செல்லும் ரொக்கெட்டாகவும் சந்திரனில் நடப்பதாகவும் செய்து பார்த்தோம். காட்டிலே தமையில் விடப்பட்ட ஒருவனின் அனுபவங்கள் என வேறுபட்ட கருப்பொருள்கள் எமது மனதில் தோன்றியவற்றை மனம் போன போக்கில் உருவாக்கினோம். மாணவியருக்கு மட்டுமல்ல எனக்குமே இது ஒரு பயிற்சி பட்டறை தான். எனது பயிற்சி பட்டறையில் இவ்வாறு வளர்ந்தவரே ஆனந்தராணி பாலேந்திரா எனும் நாடக நடிகை. இன்று தனது கணவருடன் சிறுவருக்கான நாடக பயிற்சி வகுப்பு நடத்தி வருகிறார்.


மலேசியாவில் நாட்டிய வகுப்பு நத்தும் சங்கீதா நமச்சிவாயம் நேற்று வந்து என்னைப் பார்த்தார். அவரை நள தமயந்தி நாட்டிய நாடகத்திலே (கலி) சனியனாக ஆடவைத்தேன். நளனை சனி பிடிப்பது பின் சனி ஆட்டி வைப்பதுமாக சங்கீதா ஆடினார்.



SIVANJALI  - SHEELA 

அங்கு எந்த சாஸ்த்திரிய ஆடலும் அவர் ஆடவில்லை. முற்று முழுதாக என் கற்பனையிலான ஆடல் ஆடல் சனியால் பீடிக்கப்பட்ட நளன் பின் நின்று சனி ஆட்டி வைக்கிறது. அங்கு நடிப்புடன் ஆக்ரோஷமாக ஆடல், சனியால் ஆட்டுவிக்கப் படும் நலனின் பரிதாபம், மக்கள் சனியின் ஆதிக்கத்தால் படும் துன்பமே கதை. நளன் மனைவியான தமயந்தியை தொலைத்த போதும், சூதாட்டத்தில் காய்களை வீசும் போதும் சனி ஆட்டுவிப்பதை படித்தேன். நாட்டியத்தில் சனியின் ஆட்டம் பலராலும் ரசிக்கப்பட்டது.

Review – On Tuesday June 24 1980 Daily News
Damayanthi – A refreshing change by S.S
Mrs Kanesar had proved once again her feeling for theatre, her skill in choreography and knowledge of stage craft and her ability to fuse elements of music, dance, plot and design into an aesthetically satisfying dramatic whole.
She is a dance-director who is not of racial to experiment and in “Damayanthi” she had fused different techniques of dance, and diverse rhythms and melodies.
Traditionalist may not agree with the mixing of kandian dance steps and movement with techniques of Bharatha Natyam, and the blending of classical Carnatic music with folk tune. But she had achieved such a unity, that the Scottish dance rhythms in the soldiers dance may have been undetected by many.
The performance as a whole was visually pleasing and aesthetically satisfying. Mention must be made of Sangeetha Namasivayam’s portrayal of kali. In the character of kali there was ample scope to show her skill in dancing, miming and acting and Sangeetha did excellently.
“Damayanthi” was a pleasing production and as a corporate effort a tremendous success.
தமிழாக்கம் - ஒரு பகுதி

திருமதி கணேசர் மீண்டும் தனது அரங்கக் கலையில் தன உணர்வையும் நெறியாள்கையையும், திறமையையும் நிரூபித்துள்ளார். "தமயந்தி" நாட்டிய நாடக நெறியாள்கையில் கார்த்திகா எந்தவித் பயமும் இன்றி வேறுபட்ட நடனங்களை இணைத்து துணிகரமாக செயல்பட்டு உள்ளார். கண்டியன் நடன அடைவுகள் பரதத்தின் அசைவுளுடன் இணைவதும் கர்நாடக சங்கீதத்துடன் கிராமிய இசையை இணைப்பதும் சம்பிரதாயத்தைப் காப்போர் ஏற்றுக் கொள்ள மாட்டார் தான். ஆனால் அந்த இணைப்பை வெற்றிகரமாக செய்தது மட்டுமல்லாது படையினரின் அணிவகுப்பு நடனம் Scotish ஆடல் என்பதை யாரும் உணர்ந்திரார்.

 
EASWARI  - SANKEETHA 
இந்த விமர்சனம் என்னை அடையாளம் காட்டுவதாக அமைந்துள்ளது. மட்டக்கிளப்பு வடமோடி ஆடலை மௌன குருவிடம் கற்று பரதத்துடனும் கர்நாடக சந்கீதத்துடனும் இணைத்து இராமாயண நாட்டிய நாடகத்தில் வெற்றி கண்டவள் நான்.

வேறுபட்ட நடனங்கள் வெவ்வேறு பட்ட தன்மையது. நாட்டிய நாடகம் படைக்க விரும்பும் நான் மட்டக்கிளப்பு  வடமேடியின் வலுவை உணர்ந்தது போலவே கண்டியன் நடனத்தின் கம்பீரத்தாலும் கவரப்பட்டேன். "பொரளையில்" உள்ள Y.M.B.A  யில் சனிக்கிழமைகளில் நடைபெறும் கண்டிய நடன வகுப்பில் நானும் என் தங்கை உஷா நாதனும் இணைந்து கற்றோம். எம்மை இந்த வகுப்பில் சேர தூண்டியவர் நாடக நடிகரும் நெறியாளருமான தாசீசியசும், நாடக நடிகர் முத்துலிங்கமுமே. வகுப்பில் சேரும் போது நால்வருமே கற்க ஆரம்பித்தோம். கண்டியன் நடனக் காரராக நாம் மாறாவிட்டாலும், நடனத்தை ஓர் அளவு கற்றோம். எனது நாட்டிய நாடகங்களில் கண்டிய நடனம் ஆடும் போது அது கண்டியன் நடனமாக தெரியாது. பலவகை நடனங்களை தெரிந்து அவற்றை இணைப்பது என்பது, பல இலக்கிய நூல்களைக் கற்றவன் எழுத்திலே அதன் தரம் உயர்ந்திருப்பதை உணரலாம் அல்லவா அதே போலவே நாட்டிய அமைப்பில் வேறுபட்ட நடனங்கள் நாட்டிய தேவைகேற்ப வளைந்து கொடுக்கும்.


எவ்வாறு இலக்கிய இரசிகர் வேறுபட்ட இலக்கியங்களை கற்பாரோ, அதே போன்றே வேறுபட்ட நடனங்களை இரசித்துக் கற்றேன். ஸ்காட்லான்ட் இல் இருந்தபோது Scottish Country  நடனத்தைக்  கற்றேன். பின் சென்னையில் வாழ்ந்தபோது ஆந்திர தேசத்திற்குரிய குச்சிப் புடியை கற்றேன். ஒரு எழுத்தாளனோ விமர்சகரோ தான் எடுத்த துறையில் தனது  அறிவை விரிவுபடுத்த பல நூல்களை கற்பது அவசியமோ அதே போல் நாட்டிய நெறியாளரும் பல நாட்டிய வகையை அறிந்திருந்தால் தன ஆக்கங்களை சிறப்புற செய்ய முடியும். வெவ்வேறு  பட்ட நடனங்கள் பலகாலமாக பயிலப்பட்டு தனக்கென சிறந்த அமைப்புடையது. அந்த அமைப்பை நாமாக ஆக்கிவிட முடியாது. ஆனால் அவற்றை நாம் கற்று பயன்படுத்தும் போது எமக்கென ஒரு வேறுபட்ட உருவ அமைப்பு தோன்றும்.


No comments: