மயக்கம் என்ன - விமர்சனம்
"காதல் கொண்டேன்", "புதுப்பேட்டை" ஆகிய வெற்றி படங்களை தொடர்ந்து தனுஷ்வை வைத்து செல்வராகவன் இயக்கும் 3வது படம் "மயக்கம் என்ன". தனுஷ்க்கு ஜோடியாக தெலுங்கு நடிகை ரிச்சா தமிழில் அறிமுகமாகிறார்.
படம் : மயக்கம் என்ன
நடிப்பு : பதனுஷ் , ரிச்சா கங்கோபதி, மற்றும் பலர்
இசை : ஜி .வி பிரகாஸ்
இயக்கம் : செல்வராகவன்
தயாரிப்பு : ஜெமினி பிலிம் சர்கிட்
"காதல் கொண்டேன்", "புதுப்பேட்டை" ஆகிய வெற்றி படங்களை தொடர்ந்து தனுஷ்வை வைத்து செல்வராகவன் இயக்கும் 3வது படம் "மயக்கம் என்ன". தனுஷ்க்கு ஜோடியாக தெலுங்கு நடிகை ரிச்சா தமிழில் அறிமுகமாகிறார். அடுத்த தலைமுறையினர் பற்றியும், அவர்களின் பிரச்சனையை மையமாக வைத்து உருவாகும் "மயக்கம் என்ன", முழுக்க முழுக்க இளைய தலைமுறையினரை மையப்படுத்தி இருக்கும். படத்தின் கதை மொத்தம், தனுஷ், ரிச்சா இருவரை மையம் கொண்டே எடுக்கப்பட்டுள்ளது.
ஏ.யூ.எம். புரொடக்சன்ஸ் தயாரிக்க, கதை, திரைக்கதை அமைத்து இயக்கியுள்ளார் செல்வராகவன். கூடவே படத்தில் 2பாடல்களையும் எழுதியுள்ளார். செல்வராகவனுடன், தனுஷூம் 2 பாடல்கள் எழுதியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்க, ராம்ஜி ஒளிப்பதிவு செய்ய, கோலாபாஸ்கர் படத்தொகுப்பு வேலையை கவனித்துள்ளார்.
மேற்கத்திய இசையையும், கிராமிய இசையையும் கலந்துகட்டி ஒரு காக்டெயிலாக படைத்திருக்கிறார் ஜிவி. நரேஷின் உற்சாகமான குரலுடன் பயணிக்கும் பாடலின் இடையே ஒரே ஒரு வரிக்காக வழி மரிக்கிறது ஒரு பெண்குரல், அந்த இடம் அருமை. பாடியவர் யாரென்று தெரியவில்லை. (சைந்தவி...?) ஆயிரத்தில் ஒருவன் மாலை நேரம் பாடலைப் போல ஆகிவிடக்கூடாது.
தனுஷ் நல்ல நடிப்பு தான்..அண்ணன் படம் என்பதால் அடக்கியே வாசிச்சிருக்காரு..
ஹீரோயின் ரிச்சா முதல்ல பார்க்கும்போது சாதாரணமா தெரிஞ்சது..போகப்போக நல்ல ஃபிகரா தெரிய ஆரம்பிச்சுடுச்சு..நல்லா முகத்துல எக்ஸ்பிரசன்ஸ் காட்டுது..அழகான கண்கள்..அகலமான முதுகுன்னு நல்லவொரு அறிமுகம்.
தம்பி வெட்டோத்தி சுந்தரம்
கன்னியாகுமரி மாவட்ட எல்லையில் உள்ள வெட்டோத்தி கிராமத்து இளைஞன் சுந்தரம் (கரண்). ஆசிரியர் வேலைக்குச் செல்ல விரும்பும் அவரது வாழ்க்கையில் கடத்தல் தாதாக்கள் யதேச்சையாக நுழைகிறார்கள். கோபக்காரனான சுந்தரத்துக்கும் அவர்களுக்கும் மோதல். தாதாக்களின் காட்பாதர் சிலுவையின் (ஜே.எஸ்) ஒரே மகள் லூர்துமேரியை(அஞ்சலி) வேறு காதலிக்கிறார். கடத்தல் தொழிலை வெறுக்கும் சுந்தரத்துக்கு அதை செய்ய வேண்டிய கட்டாயம் வருகிறது. ஈடுபடுகிறார். குறுகிய காலத்திலேயே கடத்தல் உலகின் முக்கிய புள்ளியாகிறார். ஒரு கட்டத்தில் அஞ்சலியை மணக்க, கடத்தல் தொழிலையே விட்டு விடத் தீர்மானிக்கிறார். விதி வேறுவிதமாக விளையாடுகிறது. அது என்ன என்பது மீதி கதை. தமிழ்நாடு-கேரள எல்லையில் நடக்கும் கடத்தல் தொழில் என்ற புதிய களத்தில் கதை சொல்லியிருக்கிறார்கள். உண்மை சம்பவத்தின் அடிப்படையிலானது என்று கூடுதல் எனர்ஜியும் சேர்த்திருக்கிறார்கள்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு கரணுக்கு கை கொடுத்திருக்கும் கதை. பளிச்சென்ற வெள்ளை சட்டையில் பட்டதாரியாகவும், கடத்தல் உலகின் பளீர் தாதாவாகவும் இருவேறு களத்தில் கச்சிதமாக பயணம் செய்திருக்கிறார். பஸ்சில் செல்லும்போது அஞ்சலியிடம் வம்பு செய்வதும், அவரது காதலை புரிந்ததும் வெட்கமும், பூரிப்புமாகத் திரிவதும் கரணை இன்னும் இளமையாகக் காட்டுகிறது. பக்கத்து வீட்டு முஸ்லிம் குடும்பத்தோடு நட்பாய் இருப்பது, ஆதரவற்ற குடும்பத்துக்கு தன் வீட்டிலேய அடைக்கலம் கொடுப்பது என்று நல்லவர் கேரக்டரை சிரிப்பிலேயே கொண்டு வந்து விடுகிறார். பூர்வீக வீடு ஏலத்துக்கு வரும்போது துடிப்பதும், தனக்காக நண்பன் அவமானப்படுவதை தாங்கிக் கொள்ள முடியாமல், நாமும் கடத்துவோம் தோழா என்று பொங்கி எழுவதும் கச்சிதமான நடிப்பு. கிளைமாக்சில் அனுதாபத்தையும் அள்ளிக் கொள்கிறார்.
ஏடேய் மர மண்டை என்று காதலனை மிரட்டும் தெனாவெட்டு பெண் அஞ்சலி. பஸ்சில், திருவிழாவில் கிராமத்து பெண்ணாகப் பளபளக்கிறார். அவனோட உனக்கு கல்யாணமாமே..? என்று அப்பா சந்தேகத்தோடு கேட்கும்போது, என்னை இன்னும் நம்பலை இல்ல. நீ எந்த மாப்பிள்ளைய பார்த்தாலும் கட்டிக்கிறேன். அப்பதான் உன் சந்தேகம் போகும் என்று தந்தைக்கு பதில் சொல்லி விட்டு அடுத்த நிமிடமே கரணுக்கு போன் பண்ணி, நான் கிளம்பி வர்றேன். எங்க அப்பாவை விட நல்லா கவனிச்சுக்குவல்ல என்று கேட்கும் கல்லூளித்தனத்தை அப்படியே பிரதிபலித்திருக்கிறார். அவருக்கு கரண் மீது காதல் வருவதற்கான காரணம்தான் தெரியவில்லை.
பருத்திவீரனுக்கு பிறகு சரவணன், இதில் மீண்டும் கவனிக்க வைத்திருக்கிறார். அதே காமெடி மைனர் வேடம். கரணை கத்தியால் குத்தி ஜெயிலிலிருந்து காப்பாற்றி பிறகு அவரிடம், தோழா தோழா என்று ஒட்டிக் கொள்வது, தோழா, உடனே ஒரு ரூமை போடுறோம். ஒரு கட்டிங்கை ஏத்துறோம். நிறைய யோசிக்கிறோம் என்று அவர் அடிக்கும் லந்துகள் கலகல. கரணுக்கு பண பிரச்னை வரும்போது கலங்கும்போதும், கரணுக்காக உயிர் விடும்போது சென்டிமென்ட் ஏரியாவிலும் செக் வைக்கிறார் சரவணன். ஊர்லதான் கரன்ட் இல்ல, பேர்லயாவது இருக்கட்டுமேன்னுதான் கரன்ட்டுன்னு பேர் வச்சிக்கிட்டேன் என்று கஞ்சா கருப்பு பெயர் விளக்கம் சொல்லி காமெடி பவர் ஏற்றுகிறார். அலட்டல் இல்லாத வில்லத்தனத்தால் கவனம் ஈர்க்கிறார் சிலுவை ஜே.எஸ். மகளுக்காக கடத்தல் தொழிலை விட்டுவிட முடிவு செய்யும் கரணை, மருமகனாக ஏற்பதும், கிளைமாக்சில் மதம்கொண்ட யானையாக மாறுவதுமாக மிரள வைக்கிறார். வித்யாசாகரின் இசையில், கொலைகாரா... இனிமை. ஆஞ்சநேயலுவின் கேமரா நாகர்கோவில் அழகை கடத்தி வந்திருக்கிறது.
கதையின் கதாபாத்திரங்களில் சிலர் இன்னும் இருப்பதால், லாவகமாக கதையை கையாண்டிருப்பது புத்திசாலித்தனம். கரண் கூடவே இருக்கும் சிறுவனும், கடைசி காட்சியில் அவன் செய்யும் காரியமும் அக்மார்க் சினிமாத்தனம். பிற்பகுதியில் என்டர் ஆனாலும் கவனம் ஈர்க்கிறார் நந்தா சரவணன். கரண் தேவாலயத்தில் மதம் மாறும்போது சரவணன் செய்யும் அலப்பறையும் அதை கரண் ஜஸ்ட் லைக் தட்டாக எடுத்துக் கொள்வதில் லாஜிக் இல்லை. எச்சிலை துப்பி விட்டார் என்பதற்காக சண்முகராஜ் கூட்டத்தை ஓடஓட விரட்டி அடித்து துவம்சம் செய்வதும் கதையோடு ஒட்டாத ஆக்ஷன் பில்டப்கள். இருந்தாலும், கன்னியாகுமரி ஸ்லாங், கடத்தல் தொழிலின் டெக்னிக், பார்டர்- செக்போஸ்ட் பிரச்னைகள், போலீஸ் தாதா உறவும், பகையும் என நேட்டிவிட்டியோடு கதை சொல்லி கவனம் ஈர்க்கிறார் இயக்குனர்.
நன்றி குசும்பு
நா சிவனாகிறேன்!
நகரில் திடீரென்று சில பெண்கள் அடுத்தடுத்து படுகொலை செய்யப்படுகிறார்கள். டீன் ஏஜ், நடுத்தர வயது, திருமணமான பெண்கள் என படுபயங்கரமான கொலைகள். கொலையாளியை பிடிக்க வெறித்தனமாக அலைகிறது போலீஸ். 16வது கொலை நிகழும்போது, கொலையாளி போலீசிடம் சிக்குகிறான். நான் ஏன் கொலை பண்றேன் தெரியுமா? என்றதும் விரிகிறது பிளாஷ்பேக். அப்பாவுக்கு துரோகம் செய்கிறாள் அம்மா. பாசத்தில் வீட்டுக்கழைக்கும் அப்பாவை போட்டுத்தள்ளும் அம்மா, மகனை கொலைகாரனாக்குகிறார். ஜெயிலுக்கு போகும் மகன், வெளியில் வந்து தனது அம்மாவை போன்ற அம்மாக்களைத் தேடி தேடிப்பிடித்து போட்டுத்தள்ளுவதுதான் கதை.
பழைய கதையை, புது டெக்னிக்கில் சொல்ல முயன்றிருக்கிறார்கள். அப்பாவுக்கு, தன் அம்மா செய்த துரோகம் கண்டு உதய் பொங்கி எழுவதும், அதேமாதிரி துரோகம் செய்யும் பெண்களை ஸ்கெட்ச் போட்டு, ஒரேமாதிரியாக கொலை செய்வதும் திக் திக். தப்பு பண்றவங்களுக்கு தண்டனை கொடுத்தா, அது தப்புக் கணக்குல சேராது என்று அவர் கொடுக்கும் சிவன் போஸ், அசத்தல். சைக்கோவாக வரும் அவர், காதல் கொண்டேன் தனுஷை அப்படியே ஜெராக்ஸ் ஆக்கியிருப்பது ஓவர். அவருக்கும், வர்ஷாவுக்கும் காதல் மலர்வதற்கான காரணம் அழுத்தமாக இல்லை. சைக்கோ, த்ரில்லர் கதையில் அடிக்கடி பாடல்கள் இடம்பெறுவது, ஸ்பீட் பிரேக்.
போலீசிடம் மாட்டிக்கொண்ட பிறகு, ஒட்டுமொத்த மீடியாவையும் கோர்ட்டுக்கே வரவழைத்து, தன் தவறுகளுக்கு நியாயம் கற்பிக்க ஹீரோ முயல்வது காமெடியாக இருக்கிறது. அப்பாவாக வரும் பிரேம்குமார் பரிதவிக்க வைக்கிறார். அவரது மனைவியாக வரும் நயானி தீட்சித் நடிப்பில் ஸ்கோர் பண்ணுகிறார். விபத்தில் தன்னைக் காப்பாற்றியவன் என்ற காரணத்துக்காக, காதலித்து மணந்த கணவனையும், மகனையும் தூக்கி எறிந்துவிட்டு நயானி, அவனோடு செல்வது நம்பும்படியாக இல்லை. தொடர்கொலைகள் செய்யும் ஹீரோ, ஏதோ ஒரு கட்டிடத்திலுள்ள ஒரு அறையில், தான் கொலை செய்த பெண்களின் போட்டோவை வரிசையாக மாட்டி வைத்திருப்பதிலும் லாஜிக் டமார். பாடல்களும் பின்னணி இசையும் சுமார் ரகம். பாடல் காட்சிகளில் ஒளிப்பதிவாளர் தெரிகிறார். சிறுவர்களின் வாழ்க்கை எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறது என்கிற கருத்தை சொல்ல வந்திருக்கும் இயக்குனர் அதிலிருந்து தடம்மாறிப் போயிருக்கிறார்.
நன்றி குசும்பு
No comments:
Post a Comment