புரிதலை தெரிந்துகொண்டபோது -செ.பாஸ்கரன்


.
காலங்கள் கடந்தபின்னும்
காட்சிகள் தொடர்கின்றது
பின்னோக்கிய சக்கரத்தின்
பாச்சல்கள் முன்னோக்கி நகர்கின்றது

வீட்டிற்கு உதவாதவன் என்ற
அம்மாவின் புலம்பல்கள்
உன்னை எதுவும் செய்துவிடவில்லை
நாட்டை நேசிப்பவன் என்ற
செருக்கு மட்டும்
உன்னோடு ஒட்டிக்கொள்ள
நீ நடந்தாய்

உன்னைப்பார்த்து மகிழ்தவர்களை விட
பயந்தவர்கள்தான் அதிகம்
வீட்டைக் கவனிக்காததுகள்
நாட்டை காப்பாத்த போகுதுகளாம்
அப்பாவின் புலம்பலில்
ஆயிரம் அர்தங்கள் இருந்தது



அப்போது புரியாத வார்த்தைகள்
அத்தனையும் முடிந்தபின்
ஆறுதல் சொல்ல ஆருமற்று
வீதியில் விடப்பட்ட்போது
நன்றாக புரிகிறது.

புரிதலை தெரிந்துகொண்டபோது
தொலைந்திருந்தது
சுதந்திரம் மட்டுமல்ல
தூக்கி வளர்த்து துணைநின்ற
என் அப்பாவும் அம்மாவும் தான்.

1 comment:

Ramesh said...

மூன்று தசாப்தங்கள் உருண்ட பின் முடிவின்றிபோன போரின் காயங்களை தடவிப்பார்ப்பதுபோல் இருக்கின்றது.
"உன்னைப்பார்த்து மகிழ்தவர்களை விட
பயந்தவர்கள்தான் அதிகம்"

மு.பொ வின் தாக்கம் இருக்கின்றது போல் தெரிகின்றது. நல்ல வரிகள்