உலகச் செய்திகள்


*  உலக அழகி 2011: வெனிசுலா நாட்டு மாணவி தேர்வு!


* ஜக்சன் மறைவிற்கு குடும்ப மருத்துவரின் கவனக்குறைவே காரணம்: நீதிமன்றம் தீர்ப்பு

* பாகிஸ்தானில் 4 இந்து வைத்தியர்கள் சுட்டுக்கொலை : நடன மங்கையால் விபரீதம்!


*  இத்தாலிய பிரதமர் பெர்லுஸ்கொனி பதவி விலக இணக்கம்










உலக அழகி 2011: வெனிசுலா நாட்டு மாணவி தேர்வு!



7/11/2011

வ் ஆண்டின் உலக அழகியாக வெனிசுலா நாட்டின் ஐவியன் சர்கோஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 61ஆவது உலக அழகிப் போட்டி நேற்று இரவு லண்டனில் நடைபெற்றது.

இதில், 2011 ஆம் ஆண்டுக்கான உலக அழகி மகுடம் ஐவியனுக்கு சூட்டப்பட்டது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 120 க்கும் மேற்பட்ட அழகிகளை பின் தள்ளி, 21 வயதான பட்டதாரி மாணவி ஐவியன் சர்கோஸ் உலக அழகிப் பட்டம் வென்றார்.

இந்தப் போட்டியில் பிலிப்பைன்ஸ் அழகி ஜிவென்டோலைன் ரூயஸ் இரண்டாம் இடத்தையும், போர்ட்டோரிக்கோ அழகி அமண்டா பரீஸ் மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.

இதேவேளை போட்டி நடந்த அரங்கத்திற்கு வெளியே 200க்கும் மேற்பட்டோர் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.










கவின்
நன்றி  வீரகேசரி


ஜக்சன் மறைவிற்கு குடும்ப மருத்துவரின் கவனக்குறைவே காரணம்: நீதிமன்றம் தீர்ப்பு


8/11/2011

மறைந்த பிரபல பொப் பாடகர் மைக்கல் ஜக்சன் மறைவிற்கு அவரது குடும்ப மருத்துவரின் கவனக்குறைவே காரணம் எனவும் அவர் கொலையாளி எனவும் அமெரிக்க நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பொப் இ‌சை உலகின் அழியா புகழ்பெற்ற பிரபல பாடகர் மறைந்த மைக்கல் ஜக்சன் கடந்த 2009-ம் ஆண்டு ஜூன் மாதம் 25ஆம் திகதி அமெரிக்காவின் உள்ள தனது பண்ணைவீட்டில் காலமானார். அளவு அதிகமாக வலி நிவாரணி மருந்து உட்கொண்டதே மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக கூறப்படுகிறது. இவரது மரணத்தில் பெரும் சர்ச்சை ஏற்பட்டது.

ஜாக்சனின் குடும்ப மருத்துவராக கன்ட்ராடு முர்ரே என்பவர் தான் சிகிச்சை அளித்தும் அவரது உடல்நிலையை கவனித்து வந்தார். அப்படியிருந்தும் ஜக்சன் இறந்தார். இது தொடர்பாக கன்ட்ராடு முர்ரே மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையில் ஜக்சன் இறப்பதற்கு முன்பு அவரை பரிசோதித்து சென்றார் முர்ரே. ஆயினும் வலிநிவாரணி மருந்தினை உட்கொள்ள முர்ரே சொன்னதன் காரணமாக ஜக்சன் இறந்தார். எனவே அவர் கொலை குற்றவாளி என லொஸ்ஏஞ்சல்ஸ் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்தது.

இதை‌யடுத்து டாக்டர் முர்ரேவை பொலிஸ் கைது செய்துள்ளது. அவருக்கு ஜாமினும் மறுக்கப்பட்டுள்ளது.

லொhஸ்ஏஞ்சல்ஸ் நீதிமன்றம் ஜக்சனின் குடும்ப மருத்துவர் முர்ரே மீது கொலை குற்றச்சாட்டினை கூறிய செய்தி ‌கேட்டு அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

நன்றி வீரகேசரி




பாகிஸ்தானில் 4 இந்து வைத்தியர்கள் சுட்டுக்கொலை : நடன மங்கையால் விபரீதம்! _

கவின்

 9/11/2011

பாகிஸ்தானின் சிந் மாகாணத்தின், சிகார்புர் மாவட்டத்தில் நான்கு இந்து மருத்துவர்கள் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து அங்கு பெரும் பரபரப்பு நிலவுகின்றது.

அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் பணியாற்றிக் கொண்டிருந்த அசோக், நரேஷ், அஜீத் மற்றும் சாதியா போல் ஆகிய நான்கு மருத்துவர்களுமே இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

அப்பகுதி இந்து இளைஞர்கள் சிலர் முஸ்லிம் நடன மங்கை ஒருவரை அங்கு அழைத்து வந்ததுள்ளனர். இதனையடுத்து அப்பிரதேசத்தில் உள்ள இந்து மற்றும் முஸ்லிம் பழங்குடியினரிடையே முறுகல் நிலை தோன்றியுள்ளது.

இந்நிலையில் நடன மங்கையையும், அவரை அழைத்து வந்த நபர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். இதன் தொடர்ச்சியாகவே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இக்கொலைகளுடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் இருவரை அப்பிரதேச பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

பாகிஸ்தானில் சிறுபான்மை கிறிஸ்தவர்கள் மற்றும் இந்துக்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

மேலும் அந்நாட்டு அதிகாரிகள் இதனைத் தடுப்பதற்கு எதுவித முயற்சியும் மேற்கொள்ளவில்லையெனவும் பரவலாக குற்றஞ்சாட்டப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி


இத்தாலிய பிரதமர் பெர்லுஸ்கொனி பதவி விலக இணக்கம் _


கவின்

 9/11/2011

இத்தாலிய பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கொனி பதவி விலகுவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளார்.

வரவு செலவுத் திட்டம் தொடர்பான பாராளுமன்ற வாக்கெடுப்பொன்றில் அவர் பெரும்பான்மையை இழந்ததையடுத்தே பதவி விலகுவதாக உறுதியளித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற வரவு செலவுத்திட்டம் மீதான வாக்களிப்பில் இவருக்கு ஆதரவாக 308 வாக்குகளும் எதிராக 320 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. இத்தாலி மிக மோசமான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது.

அந்நாட்டின் குறைவான வளர்ச்சி வீதம் மற்றும் கடன் சுமை காரணமாக பாரிய நெருக்கடியில் அது சிக்கியுள்ளது.

நான்காவது தடவையாக பிரதமர் பதவி வகிக்கும் பெர்லுஸ்கோனி அண்மைக்காலமாக பல்வேறு பாலியல் புகார்களில் சிக்கியிருந்தார்

இதற்கு முன்னர் பல நம்பிக்கைத் தீர்மான வாக்கெடுப்புகளை எதிர்கொண்டுள்ள பெர்லுஸ்கொனி அவற்றில் வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி













No comments: