அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த ஒன்று கூடல்


 .
அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த ஒன்று கூடல்                                                                          
                                                                                                                    

அவுஸ்திரேலியார  நியுசிலாந்து நாடுகளில் 24 மணிநேரமும் ஒலித்துக்கொண்டிருக்கும் அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் எட்டாவது வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்த பெரும் திரளான நேயர்களில் நானும் ஒருவன்.


நிகழ்ச்சிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாகவே அனைத்து நுழைவுச் சீட்டுக்களும் விற்பனையாகும் வண்ணம் ஆதரவாளர்கள் அமைந்தது அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் வானொலியின் வளர்ச்சியை மேலும் உலகிற்கு பறைசாற்றுகின்றது.

மெல்பேர்ணில் இரண்டாவது நிலையக்கலையகம் வானொலிகளுடன் உறவுப்பாலம்ரூபவ் தாயக மக்களுடன் நேரடித் தொடர்பாடல் இணையத்தளத்தின் ஊடாக இந்தியா இலங்கை கனடா  நோர்வே போன்ற நாடுகளில் இருந்தும் நேயர்களின் நேரடிப் பங்களிப்பு  சர்வதேச ரீதியில் செய்திக் சேகரிப்புகள் மற்றும் வானொலிகளின் இணைப்புகள் என்று வெற்றி நடைபோடும் ATBC வானொலியின் மற்றுமோர் வெற்றிகரமான ஒன்றுகூடல் நிகழ்வுபற்றி என் பார்வையின் கண்ணோட்டமிது.







பலரும் வியக்கும் வண்ணம் அரங்கம் நிறைந்த நேயர்களையும் ஆதரவாளர்களையும் கவர்ந்திழுத்து ஆர்வத்துடன் ஓர் வெற்றிகரமான நிகழ்ச்சியை நடாத்தி முடித்திருக்கிறது அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம். அதை பகிர்ந்து கொள்வதில் எனக்கும் பெருமையே.



வானொலிக் குடும்பத்தின் நேர்த்தியான திட்டமிடலாலும் முயற்சியினாலும் நேயர்கள் மற்றும் ஆதரவாளர்களது கைகோர்த்த பேராதரவினாலும் இந்த வெற்றி நிகழ்வு சாத்தியமாகியது என்று கூறுவதுதான் சாலப்பொருத்தமாய் இருக்கும்.


மிகவும் நேர்த்தியாகவும் அழகாகவும் அலங்கரிக்கப்பட்ட Blacktown, Bowman மண்டபத்தில் திட்டமிட்டபடி சரியாக 6.15 ற்கு யதுகிரி லோகிதாசன் தனது இனிமையான குரலில் தமிழ்தாய் வாழ்த்தும் மாவீரார்களை நினைவுகூரும் வகையில் கவிதையொன்றும் பாடினார். அதனைத் தொடர்ந்து அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனதின் துளிர் நிகழ்ச்சியின் இளைஞர்கள் அவுஸ்திரேலிய தேசியகீதம் மற்றும் ATBC ன் கீதம் என்பவற்றைப் பாடி நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தது வானொலியில் இளைஞர்களின் பங்களிப்பை காட்டிநின்றது.



தொடர்ந்து ஒன்று கூடல் நிகழ்ச்சிக்கு வருகைதந்த அனைவரையும் தனது அறிமுகவுரை மூலம் சிம்மக் குரலில் வரவேற்று நிகழ்ச்சிகளை இனிதே தொடக்கி வைத்தார் கணேசன் மேகநாதன்;. வேற்று மொழி பிரமுகர்கள் பலரும் வந்திருந்தமையால் ஆங்கிலத்திலும் தமிழிலும் சிறப்பாக அனைவரையும் வரவேற்றார். மேகநாதனின் நிகழ்ச்சித் தொகுப்பு மிகவும் ரசனை மிக்கதாக இருந்தது. அது அவரின் வழமையான பாணி என்பது அவரை அறிந்த நாம் அனைவரும் அறிந்ததே.

ஒலிவாங்கியை தனது சொத்தாக கருதாது சகல அறிவிப்பாளர்களையும் மேடைக்கு வரவழைத்து ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்ய வைத்தது மிகவும் சிறப்பாகவும் வித்தியாசமாகவும் அமைந்தது.அத்துடன் இத்தனை அறிவிப்பாளர்களா இந்த வானொலிக்கு என்று ஆச்சரியம் படவும் வைத்தது.


தொடர்ந்து இன்னுமோர் அறிவிப்பாளர் கார்த்திகா கணேசரின் மாணவிகளின் கண்கவர் நடனங்களும் இளம் சிறார்கள் அறிவிப்பாளர்கள் மற்றும் வானொலி நேயர்கள் அனைவரதும் இன்னிசையும் நல்ல இதமான மழையில் நனைந்தது போலிருந்தது.

ATBC வருடாந்த ஒன்றுகூடலுக்கான சிறப்பு விளம்பரதாரர்களது பெயர்களைத் தாங்கிய பதாதைகள் மேடையை முற்றுகையிட்டு அலங்கரித்தவண்ணமிருந்தன. மகேஸ்வரன் பிரபாகரன் விளம்பரதாரர்களை கௌரவப்படுத்தும் வகையில் தனிக்கேயுரிய தனித்துவமான பாணியில் அரங்கத்தினருக்கு அவர்களை அறிமுகப்படுத்தினார்.





அரங்கை பார்த்து ரசித்துக்கொண்டிருந்தபோது 8 மணியளவில் இரவு உணவுகள் மேசைகளில் ஒழுங்குபடுத்தி தயாராக வைக்கப்பட்டிருந்தது. அவையினர் மேசை வாரியாக எழுந்து ஆரவாரமில்லாமல் அவசரப்படாமல் உணவுகளைப் பரிமாறிக்கொண்டு தங்கள் இருக்கைகளுக்கு திரும்பும் அதே வேளையில் மேகநாதன் மற்றும் ரகுராம் இருவரும் அவையினருடன் கலந்துரையாடல் முறையில் புதிர் போட்டியொன்றை சுவாரசியமாக நடாத்திக் கொண்டிருந்தனர். ஆரம்பத்தில் மெல்ல மெல்ல நடைபோட்ட புதிர்ப்போட்டி விறுவிறுப்பாக ஓட ஆரம்பித்துவிட்டது. சபையினரின் பங்களிப்பு மிகுந்த உற்சாகத்தைக் கொடுத்தது. ATBCன் இராப் போசனத்தின் சுவைபற்றி


சொல்லத்தேவையில்லை. அதற்கேயுரிய தனித்துவத்துடன் அறுசுவைகளையும் உள்ளடக்கி அவற்றோடு  விருந்தோம்பலையும் கலந்து வந்தவர்கள் வயிறும் மனசும் நிறையும் வண்ணம் உணவுகள் பரிமாறப்பட்டன.

இரவு உணவின் பின்பு AMERICAN AUCTION  என்ற கலகலப்பான நிகழ்ச்சி இடம்பெற்றது. சிவசம்பு பிரபாகரன், மேகநாதன் மற்றும் ரகுராம் இவர்களோடு இன்னும் பல அறிவிப்பாளர்கள் இணைந்து இந்த நிகழ்வை நடாத்தினர். சபையினர் மிகுந்த ஆர்வத்துடனும் குதூகலத்துடனும் தாமாக முன்வந்து பங்குபற்றினர்.




























மேலும் மேலும் தொடரக்கூடியதாக இருந்தபோதும் நிகழ்ச்சியை சரியாக 10 மணியளவில் நிறுத்திக்கொண்டார்கள். இன்னும் கொஞ்ச நேரம் அதை தொடர்ந்திருக்கலாம் போல் எனக்கு தோன்றியது ஆனால் அவர்கள் நேரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்ததும் பாராட்ட வேண்டியதே நிறைவாக அனைவருக்கும் அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சார்;பில் நன்றி கூறப்பட்டு நிகழ்வை நிறைவு செய்தனர். இரவு 10.15 மணியளவில் நிகழ்வு நிறைவெய்தும் போது வானொலியாளர்கள் முகத்தில் மட்டுமல்லாது நேயர்கள் ஆதரவாளர்கள் முகங்களிலும் திருப்தியும் வெற்றிக்களிப்பும் கலந்த சந்தோசம் வெளிப்படையாகவே தெரிந்தது.


நேர்மையான பாகுபடற்ற நிர்வாகத்தின் கட்டமைப்பின்கீழ் சுதந்திரமாக பணியாற்றும் எழுபதிற்கும் மேற்பட்ட அறிவிப்பாளர்கள், நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள், தொண்டர்கள், நிர்வாகத்தினர் என்று ஓரு கூட்டுக் குடும்பமாக அவர்களைப் பார்த்த அவையினர்; தமது அன்பையும் ஆதரவையும் வாழ்த்துக்களையும் மனம்திறந்து தெரிவித்ததைப் பார்க்கக்கூடியதாக இருந்தது.



அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வானொலிக் குடும்பத்தின் ஒற்றுமையையும் ஒன்று சேர்ந்த முயற்சியையும் வருடாவருடம் இந்த ஒன்று கூடல் மூலம் நாம் பார்க்ககூடியதாக இருக்கிறது. இது தொடரவேண்டும். அவர்கள் தொடர்ந்தும் நாகரீகமாக   இப்படியா நிகழ்ச்சிகளை படைக்கவேண்டும்.


குடும்ப அங்கத்தவர்களுடன் கைகோர்த்து நல்லதோர் நிகழ்வை நிறைவாக நடாத்தி முடித்தது போன்ற சந்தோசத்துடன் அந்த மண்டபத்தை விட்டு நகர்ந்தேன் வந்த ஒவ்வொருவரும் அந்த நிறைவோடு சென்றிருப்பார்கள் என்பது என் எண்ணம். மீண்டும் அடுத்த வருடத்திற்காக காத்திருப்போம்.






2 comments:

kalai said...

அவுஸ்திரேலியார நியுசிலாந்து நாடுகளில் 24 மணிநேரமும் ஒலித்துக்கொண்டிருக்கும் அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் எட்டாவது வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்த பெரும் திரளான நேயர்களில் நானும் ஒருவன்.
--------------------
உங்களுக்கு பெயர் இன்னும் வைக்கவில்லையா?

kirrukan said...

புகழ் விரும்பாத ஒரு நேயர் போல கிடக்குது அதுதான் பெயர் போடவில்லை.....

அன்றையதினம் ATBC யின் சில அறிவிப்பாளர்களையும் ,சில நேயர்களயும் சைவமன்றம் நடத்தின கலைக்கோலத்தில் நின்றதை கண்டேன்....